செ. ராமச்சந்திரய்யா
சென்னம்செட்டி ராமச்சந்திரய்யா (Chennamsetty Ramachandraiah) (பிறப்பு 1947) ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அரசியல்வாதியும் மற்றும் தொழில் ரீதியாக பட்டயக் கணக்கறிஞரும் ஆவார். இவர் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராகவும் [1] ஆந்திரப் பிரதேச மாநில அமைச்சரவையில் அறநிலையத்துறை அமைச்சராகவும் இருந்தார். ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் சிலகாலம் இருந்தார். இவர் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டையைச் சேர்ந்தவர்.
சென்னம்செட்டி ராமச்சந்திரய்யா | |
---|---|
ஆந்திரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 30 மார்ச்சு 2021 | |
முன்னையவர் | குண்டுமலை திப்பே சுவாமி கும்மிடி சந்தியா ராணி வட்டிக்குடி வீர வெங்கண்ண சௌத்ரி |
தொகுதி | சட்டப் பேரவை உறுப்பினராக |
ஆந்திரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினர் | |
பதவியில் 18 மார்ச் 2011 – 29 மார்ச்சு 2017 | |
அறநிலையத்துறை அமைச்சர் ஆந்திரப் பிரதேச அரசு | |
பதவியில் 18 ஜனவரி 2012 – 2014 | |
பின்னவர் | பைதிகொண்டல மாணிக்யாலராவு |
அறநிலையத்துறை அமைச்சர் ஆந்திரப் பிரதேச அரசு | |
பதவியில் 2011–2014 | |
பின்னவர் | பைதிகொண்டல மாணிக்யாலராவு |
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 3 ஏப்ரல் 1998 – 2008 | |
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1985–1989 | |
முன்னையவர் | எஸ். ராம முனி ரெட்டி |
பின்னவர் | கே. சீனிவாச ரெட்டி |
தொகுதி | கடப்பா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 27 மார்ச்சு 1948 கடப்பா |
அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி (2018-) |
பிற அரசியல் தொடர்புகள் |
|
துணைவர் | சி. கஸ்தூரி பாயி |
வாழிடம் | கடப்பா |
தொழிலில் பட்டயக் கணக்கறிஞரான ராமச்சந்திரய்யா 1981ல் அரசியலுக்கு வருவதற்கு முன்பு வங்கி ஊழியராக இருந்தார்.
அரசியல் வாழ்க்கை
தொகு1985 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1986-88 ஆம் ஆண்டு மாநில அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றினார். இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். இவர் தெலுங்கு தேசம் கட்சியில் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் உட்பட பல பதவிகளை வகித்தார். 2008 இல் சந்திரபாபு நாயுடுடன்[2] ஏற்பட்டகருத்து வேறுபாட்டைக் காரணம் காட்டி இவர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகினார்.
பிரசா ராச்யம் கட்சி இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்த பிறகு, ராமச்சந்திரய்யா காங்கிரஸ் கட்சியில் சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனவரி 19, 2012 அன்று இவருக்கு அறநிலையத்துறை அமைச்சகமும் கிடைத்தது. இவர் மாநில அமைச்சரவையில் இடம் பெறுவது இது இரண்டாவது முறையாகும். [3]
இவர் 2018 இல் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் [4] இவர் 2021 இல் சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Congress, TDP, PR candidates elected from Kadapa". The Hindu (KADAPA). 2011-03-18. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/congress-tdp-pr-candidates-elected-from-kadapa/article1548853.ece.
- ↑ "Former TDP MP Ramachandraiah joins Chiranjeevi's party" (in ஆங்கிலம்). September 13, 2008. பார்க்கப்பட்ட நாள் 2022-05-28.
- ↑ Kumar, S. Nagesh (2012-01-19). "Two Ministers inducted into Kiran Kumar's Cabinet" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/Two-Ministers-inducted-into-Kiran-Kumars-Cabinet/article13372146.ece.
- ↑ "Ramachandraiah, several other leaders join YSRCP". பார்க்கப்பட்ட நாள் 2022-05-28.
- ↑ "Six newly elected Andhra Pradesh MLCs take oath". 1 April 2021. https://timesofindia.indiatimes.com/city/amaravati/six-newly-elected-andhra-pradesh-mlcs-take-oath/articleshow/81841600.cms.