சேந்தமங்கலம் சேலை
சேந்தமங்கலம் சேலை (Chendamangalam saree) என்பது கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த பாரம்பரிய கையால் நெய்யப்படும் பருத்திப் புடவை ஆகும். இந்த சேலை கேரளாவின் சேந்தமங்கலம் கைத்தறி பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும்.[1]
வரலாறு
தொகுகொச்சி இராச்சியத்தின் பரம்பரை தலைமை அமைச்சரான பாலியத் அச்சன் குடும்பத்திற்காக 16ஆம் நூற்றாண்டில் சேந்தமங்கலத்தில் குடியேறிய தேவாங்கர் செட்டியார் சமூகத்தால் இந்த நெசவு பாரம்பரியம் தொடங்கப்பட்டது. வளையச் சோதனையில் தேர்ச்சி பெறக்கூடிய மெல்லிய மஸ்லின் துணி வேட்டிகளை நெய்வதன் மூலம் இவர்கள் இந்த நெசவு முறையினைத் தொடங்கினார்கள். கைத்தறி பாரம்பரியம் கொச்சியின் பிரபுக்களின் கீழ் புடவைகள் மற்றும் பிற துணி உற்பத்தியாக வளர்ந்தது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆதரவைக் குறைத்ததன் விளைவாக நெசவும் குறைந்துவிட்டது. இருப்பினும், 1954-ல் தோற்றுவிக்கப்பட்ட சேந்தமங்கலம் கைத்தறி கூட்டுறவுச் சங்கம் மற்றும் 1969-ன் கேரள கூட்டுறவுச் சங்கச் சட்டம் ஆகியவற்றின் மூலம் கைத்தறி தொழில் மறுமலர்ச்சி கண்டது.[2]
இப்பகுதியில் 2018-ல் ஏற்பட்ட கேரளா வெள்ளத்தால் நெசவாளர்கள் பெரும் இழப்பை எதிர்கொண்டனர்.[3] கேர் 4 சேந்தமங்கலம் போன்ற கூட்டு முயற்சிகள் மற்றும் சமூக பங்கேற்பு மூலம் தறி இதன் பெருமையை மீண்டும் பெற்றது. சமூக தொழில்முனைவோர்களான இலட்சுமி மேனன் மற்றும் கோபிநாத் பாறைல் ஆகியோரால் தொடங்கப்பட்ட செக்குட்டி பொம்மைகள் என்ற தனித்துவமான முயற்சியும் தொடர்ந்தது. இது மறுமலர்ச்சிக்காக நிதி திரட்டுவதற்காக வெள்ளத்தால் அழிந்துபோன பாழடைந்த ஆடைகளால் பொம்மைகளை உருவாக்கியது.[4][5] 2021 மே மாதம், இந்தியாவின் முதல் பெண் நீதிபதி அன்னா சாண்டியின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், சட்டத்தில் பெண்களுக்காக புதிய சேலை தொகுப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டது.[6]
அம்சங்கள்
தொகுஇன்று கேரளாவில் காணப்படும் நான்கு புகழ்பெற்ற நெசவு மரபுகளில் இதுவும் ஒன்று.[7] புடவை இதன் புளியிலகரத்தால் (புளி இலை விளிம்பு) வேறுபடுகிறது. இதில் மெல்லிய கருப்பு கோடு புடவையின் வளைவுடன் செல்கிறது. கூடுதலாகத் துணியின் ஊடு இழை சுட்டிகாரா மற்றும் கோடுகள் மற்றும் மாறுபட்ட அகலத்தில் கட்டங்களையும் கொண்டுள்ளது. புடவையில் பொதுவாகக் கேரள புடவை போன்று கசவு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த புடவைகள் அதிக நூல் எண்ணிக்கையுடன் 80 - 120 வரம்பில் தயாரிக்கப்படுகின்றன. மேலும் இரண்டு முதல் நான்கு நாட்கள் உடல் உழைப்பு ஒரு சேலையினை நெய்யத் தேவைப்படுகிறது.
புவியியல் சார்ந்த குறியீடு
தொகு2010-ல், கேரள அரசு சேந்தமங்கலம் வேட்டிகள், சேலைகள்/முண்டுகளுக்கு புவியியல் சார்ந்த குறியீடுகளுக்காக விண்ணப்பித்தது. இதற்கு இந்திய அரசாங்கம் 2011ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக புவியியல் குறியீடாக அங்கீகரித்தது.[8]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Sarvaiya, Nupur. "Save The Loom's weavers give a modern spin to traditional kasavu saris". Vogue India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-05-30.
- ↑ "They weave magic to stand on their feet". The New Indian Express. Archived from the original on 2021-06-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-30.
- ↑ "Kerala floods one month after: Chendamangalam weavers seek new paths to revive handloom sector". The New Indian Express. Archived from the original on 2021-06-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-30.
- ↑ "Chekutty dolls: How Kerala got its new symbol of hope". The News Minute (in ஆங்கிலம்). 2018-09-12. பார்க்கப்பட்ட நாள் 2021-05-30.
- ↑ "Making bedrolls out of PPE scrap! After 'Chekutty dolls', Kerala social entrepreneur Lakshmi Menon embarks on new mission". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-08-27. பார்க்கப்பட்ட நாள் 2021-05-30.
- ↑ "Weave for women in law". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-05-30.
- ↑ "All you need to know about the simple, classy Kerala kasavu saree". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-08-31. பார்க்கப்பட்ட நாள் 2021-05-30.
- ↑ "Details | Geographical Indications | Intellectual Property India". ipindiaservices.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-30.