சைதாப்பேட்டை தொடருந்து நிலையம்
சைதாப்பேட்டை தொடருந்து நிலையம் (Saidapet railway station, நிலையக் குறியீடு:SP) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது.
சைதாப்பேட்டை | |||||
---|---|---|---|---|---|
சென்னை புறநகர் இரயில் மற்றும் தென்னக இரயில்வே நிலையம் | |||||
சைதாப்பேட்டை தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | காரணீசுவரர் கோயில் தெரு, சைதாப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு - 600 015, இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 13°01′27″N 80°13′27″E / 13.02415°N 80.224183°E | ||||
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | தெற்கு மற்றும் தென் மேற்கு புறநகர் வழித்தடங்கள் | ||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | SP | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1900களின் முற்பகுதி | ||||
மின்சாரமயம் | 15 நவம்பர் 1931 | ||||
முந்தைய பெயர்கள் | தென்னிந்திய இரயில்வே | ||||
|
இது சென்னைக் கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை உள்ள வழித்தடத்தின் இடையே அமைந்துள்ளது. இது சைதாப்பேட்டை மற்றும் சின்னமலை பகுதிகளின் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இது சென்னைக் கடற்கரையிலிருந்து சுமார் 12 கி.மீ (7.5 மைல்) தொலைவில் அமைந்துள்ளது, மேலும் கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டர் (33 அடி) உயரத்தில் உள்ளது.
வரலாறு
தொகுசைதாப்பேட்டை தொடருந்து நிலையமானது, மே 11, 1931 ஆம் ஆண்டு சென்னைக் கடற்கரைக்கும் - தாம்பரத்திற்கும் இடையிலான புறநகர் இரயில் சேவை தொடங்கிய போது கட்டப்பட்டது. இது 15 நவம்பர் 1931இல் மின்மயமாக்கப்பட்டது.[1]
சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Electric Traction - I". IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)