சைதோமிர் மாகாணம்


சைதோமிர் மாகாணம் (Zhytomyr Oblast) உக்ரைன் நாட்டின் வடமேற்கில் அமைந்த மாகாணம் ஆகும். இதன் நிர்வாகத் தலைநகரம் சைதோமிர் நகரம் ஆகும். 2021ம் ஆண்டில் இதன் மக்கள் தொகை சுமார் 11,95,495 ஆகும். இதன் வடக்கில் பெலருஸ் நாட்டின் எல்லை உள்ளது. இதன் வடக்குப் பகுதிகள் செர்னோபில் அணு உலை விபத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது.

சைதோமிர் மாகாணம்
Житомирська область
சைதோமிர்ஸ்கா மாகாணம்[1]
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
ஆள்கூறுகள்: 50°39′N 28°31′E / 50.65°N 28.52°E / 50.65; 28.52
நாடு உக்ரைன்
தலைநகரம்சைதோமிர் நகரம்
அரசு
 • ஆளுநர்விடாலி புனெச்கோ [2]
 • சைதோமிர் மாகாணக் குழு64 உறுப்பினர்கள்[3] seats
 • தலைவர்விளாடிமிர் சிர்மா
பரப்பளவு
 • மொத்தம்29,832 km2 (11,518 sq mi)
பரப்பளவு தரவரிசை5ம் இடம்
மக்கள்தொகை (2021)
 • மொத்தம் 1,195,495
 • தரவரிசை16ம் இடம்
நேர வலயம்கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு10 முதல் 13 வரை
வட்டாரக் குறியீடு+380-41
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுUA-18
மாவட்டங்கள்4
நகரங்கள் (மொத்தம்)11
• மண்டல நகரங்கள்5
நகர்புற குடியிருப்புப் பகுதிகள்43
கிராமங்கள்1625
FIPS 10-4UP27
இணையதளம்oda.zht.gov.ua

அமைவிடம் தொகு

சைதோமிர் மாகாணத்தின் வடக்கிலும், வடமேற்கிலும், வடகிழக்கிலும் பெலருஸ் நாடு, கிழக்கிலும், தென்கிழக்கிலும் கீவ் மாகாணம், தெற்கில் வின்னித்சியா மாகாணம், தென்மேற்கில் கமெல்னிட்ஸ்கி மாகாணம், மேற்கில் ரைவன் மாகாணம் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல் தொகு

2013-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 12,68,903 ஆகும். இம்மாகாணத்தில் போலந்து நாட்டவர்கள் 49,000 பேர் வாழ்கின்றனர்.

பொருளாதாரம் தொகு

இம்மாகாணத்தில் கருங்கல் வெட்டி எடுக்கும் சுரங்கத் தொழில்கள், காடு வளம், வேளாண்மை மற்றும் இயந்திர உற்பத்தி தொழிற்சாலைகள் கொண்டது.

இம்மாகாணத்தின் வடக்குப் பகுதிகள் செர்னோபில் அணு உலை விபத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது.

மாகாண ஆட்சிப் பிரிவுகள் தொகு

சைதோமிர் மாகாணம் 4 மாவட்டங்கள், 11 நகரங்கள், 43 நகரபுற குடியிருப்புப் பகுதிகள் மற்றும் 1625 கிராமங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைதோமிர்_மாகாணம்&oldid=3759481" இருந்து மீள்விக்கப்பட்டது