சோடியம் மிகையாக்சைடு
சோடியம் மிகையாக்சைடு (Sodium superoxide ) என்பது NaO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த நிறத்தில் திண்மமாக உள்ள இது, மிகையாக்சைடு எதிர்மின் அயனி உப்பாகும். ஆக்சிசனால் சோடியத்தை ஆக்சிசனேற்றம் செய்யும்போது இச்சேர்மம் இடைநிலையாகத் தோன்றுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம்(I)மிகையாக்சைடு
| |
வேறு பெயர்கள்
சோடியம் மிகையாக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
12034-12-7 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 61542 |
வே.ந.வி.ப எண் | WE2860010 |
| |
பண்புகள் | |
NaO2 | |
வாய்ப்பாட்டு எடை | 54.9886 கி/மோல் |
தோற்றம் | மஞ்சளூம் ஆரஞ்சும் கலந்த திண்மப் படிகம் |
அடர்த்தி | 2.2 g/cm3 |
உருகுநிலை | 551.7 °C (1,025.1 °F; 824.9 K) |
கொதிநிலை | சிதைவடையும் |
சிதைவடையும் | |
காரத்தன்மை எண் (pKb) | N/A |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-260.2 kJ/mol |
நியம மோலார் எந்திரோப்பி S |
115.9 J/mol K |
வெப்பக் கொண்மை, C | 72.1 J/mol K |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | அரிக்கும் |
R-சொற்றொடர்கள் | R35 |
S-சொற்றொடர்கள் | S1/2, S26, S37/39, S45 |
தீப்பற்றும் வெப்பநிலை | சுடர்விட்டு எரியாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | சோடியம் ஆக்சைடு சோடியம் பெராக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | பொட்டாசியம் மிகையாக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசோடியம் பெராக்சைடை உயர் அழுத்தத்தில் ஆக்சிசனுடன் வினைப்படுத்துவதன் மூலம் சோடியம் மிகையாக்சைடு தயாரிக்க முடியும்:[1]
Na2O2 + O2 → 2 NaO2
அமோனியாவிலுள்ள சோடியக் கரைசலை கவனமுடன் ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலமாகவும் சோடியம் மிகையாக்சைடு தயாரிக்க முடியும்.
Na(NH3 வில்) + O2 → NaO2
பண்புகள்
தொகுஎதிர்பார்த்தது போல ஆக்சிசனின் எதிர்மின் அயனி உப்பாக இருப்பதால் இது ஒரு இணை காந்தமாகும். இது உடனடியாக நீராற்பகுக்கப்பட்டு சோடியம் ஐதராக்சைடு, ஆக்சிசன் மற்றும் ஐதரசன் பெராக்சைடு கலந்த கலவையைத் தருகிறது[2]. இச்சேர்மம் சோடியம் குளோரைடு ஒத்த வடிவமைப்பில் படிகமாகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Stephen E. Stephanou, Edgar J. Seyb Jr., Jacob Kleinberg "Sodium Superoxide" Inorganic Syntheses 1953; Vol. 4, 82-85.
- ↑ Sasol Encyclopaedia of Science and Technology , G.C. Gerrans, P. Hartmann-Petersen , p.243 "sodium oxides" , google books link