சௌகிதார் சோர் ஹை
சௌகிதார் சோர் ஹை ( Chowkidar Chor Hai, பொருள்: காவலனே திருடன்) இந்திய தேசிய காங்கிரசால் (இதேகா) 2019 இந்திய பொதுத் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரையில் பயன்படுத்தப்பட்ட ஒரு இந்தி முழக்கமாகும். ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் தற்போதைய தலைமை அமைச்சசர் நரேந்திர மோதிக்கு எதிராக ரபேல் ஒப்பந்தத்தில் சாதகமாக நடந்து கொண்டது மற்றும் விலைவாசி உயர்வு போன்ற குற்றச்சாட்டுகளை எழுப்பிய அப்போதைய இ.தே.கா தலைவர் இராகுல் காந்தியால் இந்த முழக்கம் உருவாக்கப்பட்டது. தேசத்தின் "சௌகிதார்" ( வாட்ச்மேன்) என்று பிரதமர் மோடி கடந்த காலங்களில் கூறிவந்த சூழலில், பொதுப் பணத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர் (அதாவது காவலாளி) உண்மையில் ஒரு திருடன் என்பதை உணர்த்தும் நோக்கத்துடன் இந்த முழக்கம் உருவாக்கப்பட்டது.
பின்னணி
தொகுநாட்டில் எந்த ஊழலையும் அனுமதிக்க மாட்டோம் என்று குறிப்பிட்ட நரேந்திர மோடி தன்னை ஒரு " சௌகிதார் " (காவலர்) என்று அடிக்கடி குறிப்பிட்டுவந்தார். [1] 2014 இந்தியப் பொதுத் தேர்தலுக்கான பரப்புரையின் போது, மோடி தனது உரைகளில் ஒரு பிரதமராக அல்ல, ஒரு காவலாளியாக நாட்டிற்கு சேவை செய்வேன் என்று உறுதியளித்தார். காவலாளி என்ற முறையில், பொதுப் பணத்தில் யாரையும் கை வைக்க அனுமதிக்க மாட்டேன் என்றும் மோடி கூறினார். [2]
முழக்கம்
தொகு2018 ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையில் மோடிக்கு எதிராக இராகுல் காந்தியால் " சௌகிதார் சோர் ஹை " என்ற முழக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இந்தி முழக்கத்தின் பொருள் "காவல்காரன் ஒரு திருடன்" என்பதாகும். ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் வழங்குவதில் பிரதமர் தனக்கு வேண்டியவர்களுக்கு சாதகமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மோடியை குறிவைத்து இந்த முழக்கம் உருவாக்கபட்டது. ரஃபேல் ஒப்பந்தத்தில் நடந்த ஊழலை சௌகிதார் சோர் ஹை என்றும் தங்கள் கட்சி அதை நிரூபிக்கும் என்று திசம்பர் 14 அன்று இராகுல் கூறினார். ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்தத் தவறும் செய்யப்படவில்லை என்று அரசு மறுத்தது. 2018 திசம்பரில் ரபேல் குறித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து, ரஃபேல் ஒப்பந்தத்தை உறுதி செய்து. அதில் முறைகேடுகள் அல்லது ஊழல் எதுவும் கண்டறியப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது. [3]
இராகுல் தனது பேரணி ஒன்றில் , 2014 இந்தியப் பொதுத் தேர்தல் முழக்கமான " அச்சே தின் ஆனே வாலே ஹைன் " முழக்கத்துடன் இதை ஒப்பிட்டார். அதாவது " அச்சே தின் ஆயேங்கே " என்ற முழக்கம் இப்போது " சௌகிதார் சோர் ஹை " என்ற முழக்கமாக மாறிவிட்டது என்றார். [4] பின்னர் இராகுல் தேர்தல் முடிவுக்குப் பிறகு இது குறித்து விசாரணை நடத்தப்படும், " சௌகிதார் சிறைக்கு செல்வார்" என்று நாக்பூரில், கூறினார். [5]
நவம்பர் 20 அன்று, " சௌகிதார் ஹி சோர் ஹை " என்றழைக்கப்படும் "கிரைம் த்ரில்லர்" தில்லியில் நடப்பதாக இராகுல் தெரிவித்தார். அதன் அண்மைய பாகத்தில், மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) காவல்துறைத் துணைத்தலைவர் மனோஜ் சின்ஹா, மூத்த அரசு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினார். ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதினார். இதற்கிடையில் மோடியின் "குஜராத் பகுதியை சேர்ந்த கூட்டாளி" ஏராளமான சொத்துக்களை குவித்துள்ளார் என்று குற்றம் சாட்டினார். [6] சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீதான விசாரணையில் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தலையிடுவதாக சின்ஹா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது . [6]
2018 நவம்பர் 18 அன்று, மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் நடைபெற்ற பாஜக தேர்தல் பேரணியில், தனக்கு எதிராக மீண்டும் மீண்டும் எழுப்பப்படும் சௌகிதார் சோர் ஹை கோஷத்திற்கு பதிலளித்த மோடி, "நாம்தார்" (வம்சம்) மற்றும் காங்கிரசு கட்சி தன்னைத் திட்டுவதாகக் கூறினார். [7]
2018 திசம்பர் 24 அன்று, சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராட்டிர மாநிலத்தின் பண்டரிபுரம் நகரில் நடந்த ஒரு பேரணியில் பேசும்போது, "சௌகிதார் சோர் ஹை" என்ற முழக்கத்தை மீண்டும் கூறினார். வேப்பச் செடிகள் பூச்சிகளால் தாக்கப்பட்ட ஒரு விவசாயியைப் பற்றிய கதையுடன் அவர் முழக்கத்தை விரிவாகக் கூறினார். இது அசாதாரணமானது, ஏனெனில் வேப்பஞ்சாறு இந்தியாவில் பாரம்பரியமாக பூச்சி விரட்டியாக பயன்படுத்தப்படுகின்றது. தாக்கரே அப்போது, "இதுதான் எல்லா இடங்களிலும் நடக்கிறது, பாதுகாக்க நியமிக்கப்பட்டவர்கள் கூட இந்தக் காலத்தில் திருடுகிறார்கள்" என்று கூறினார். [8]
மார்ச் 25 அன்று, ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் 2019 இன் நான்காவது துடுப்பாட்ட போட்டியின் போது பார்வையாளர்களால் சௌகிதார் சோர் ஹை என்ற முழக்கம் எழுப்பப்பட்டது. [9]
மெயின் பி சௌகிதார்
தொகு2019 மார்ச் 14 அன்று, மோடி தன் ஆதரவாளர்களுக்காக " மைன் பி சௌகிதார் " ( பொருள்: நானும் ஒரு காவலாளி) என்ற முழக்கத்துடன் பரப்புரையைத் தொடங்கி அதன் வழியாக இந்த கேலிக்கு பதிலளித்தார். [1] [10] நரேந்திர மோடி என்ற தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தின் பெயரையும் சௌகிதார் நரேந்திர மோடி என்று மோடி மாற்றினார். [11] ஒரு ஒருங்கிணைந்த பரப்புரையின் ஒரு பகுதியாக அமைச்சர்கள், கட்சித் தலைவர்வர்கள் அமித் சா, பியுஷ் கோயல் போன்ற பாஜக தலைவர்கள் தங்கள் டிவிட்டர் தன்விவரப் பெயர்களில் " சௌகிதார் " என்ற முன்னொட்டைச் சேர்த்தனர். [12] பா.ஜ.க., ஆதரவாளர்கள் பலரும், சூக ஊடகங்களில் தங்கள் பெயரின் முன்னொட்டை மாற்றிக் கொண்டனர். [13] பரப்புரையின் ஒரு பகுதியாக ஒலி இணைப்பில் ஏராளமான காவல்காரர் குழுவிடம் மோடி உரையாற்றினார். [14]
பாஜகவின் தேர்தல் முழக்கத்தை விமர்சித்த காங்கிரஸ் கட்சியானது, இராகுலின் அசல் வாசகம் மிகவும் பிரபலமடைந்தது என்று கூறியது. மோடியின் முழக்கத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா பதிலளிக்கும் விதமாக "ஒரே சௌகிதார் ஒரே திருடன்" என்று மோடியை குற்றம் சாட்டினார். [15] மோடியின் ஆட்சியில் உள்ள வேலையில்லாத் திண்டாட்டத்தை முன்னிலைப்படுத்தவும், மெயின் பி சௌகிதார் பரப்புரையை எதிர்கொள்ளவும் காங்கிரசின் சமூக ஊடகக் குழு " மைன் பி பெரோஸ்கர் " (நானும் வேலையில்லாமல் இருக்கிறேன்) என்ற முழக்கத்தை எதிராக வைத்தது. [16]
நாடு முழுவதும் சௌகிதார் ஆக வேண்டும் என்று மோடி விரும்புகிறார் என்றும், தங்கள் குழந்தைகளை வாட்ச்மேன் ஆக விரும்புபவர்கள் மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், தங்கள் குழந்தைகள் மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர் என ஆக வேண்டும் என்று விரும்புபவர்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். [17]
உச்ச நீதிமன்ற வழக்கு
தொகுபாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான மீனாட்சி லேகி, உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளைத் தவறாகப் பரப்பியதற்காக இராகுல் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்றத்தின் ஓலைக்கு இராகுல் தனது பதிலைத் தாக்கல் செய்தார். அதில் அரசியல் பரப்புரையின் வெப்பமே சௌகிதார் சோர் ஹை கருத்துக்கு காரணம் என்று கூறினார். ஒரு வாரத்திற்கு முன்பு தான் கூறிய கருத்துக்களில் உச்ச நீதிமன்றத்தின் பெயரை இழுத்ததற்கு வருத்தம் தெரிவித்தார். பின்னர் தன் ஒவ்வொரு பரப்புரைக் கூட்டங்களிலும் மோடி ஏழைகளிடம் திருடி பணக்காரர்களுக்கு தருகிறார் என்று குற்றம் சாட்டி இந்த சொற்றொடரை ( சௌகிதார் சோர் ஹை) உச்சநீதிமன்றம் பயன்படுத்தவில்லை என்றும் ஒப்புக்கொண்டார். நீதிமன்றம் இவர் "மன்னிப்பு" கோருவதற்கு பதிலாக "வருத்தம்" கோரியதற்கு அதிருப்தியை வெளிப்படுத்தியது. [18]
எல்லை தாண்டிய தாக்கம்
தொகு2020 முதல் 2022 பாக்கிதானின் 38வது உள்துறை அமைச்சராக இருந்த ஷேக் ரஷீத் அஹ்மத், பாக்கித்தானின் பஞ்சாபில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பாக்கித்தான் இராணுவத்திற்கு எதிராக இந்த முழக்கத்தை எழுப்பினார். [19]
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Narendra Modi urges supporters to take 'main bhi chowkidar' pledge" (in en). telegraphindia.com. 16 March 2019. https://www.telegraphindia.com/india/narendra-modi-urges-supporters-to-take-main-bhi-chowkidar-pledge/cid/1686940. பார்த்த நாள்: 18 March 2019.
- ↑ "The Economic Times: Business News, Personal Finance, Financial News, India Stock Market Investing, Economy News, SENSEX, NIFTY, NSE, BSE Live, IPO News". economictimes.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-29.
- ↑ "Slogan 'Acche din aayenge' has changed to 'Chowkidar chor hai': Rahul Gandhi". 16 March 2019.
- ↑ "After elections, chowkidar will go to jail: Rahul Gandhi in Nagpur". The Indian Express (in Indian English). 5 April 2019. பார்க்கப்பட்ட நாள் 6 April 2019.
- ↑ 6.0 6.1 "'Chowkidar hi Chor Hain, Crime Thriller Playing Out in Delhi': Rahul Gandhi Targets PM Modi". News18. 20 November 2018. https://www.news18.com/news/politics/chowkidar-hi-chor-hain-crime-thriller-playing-out-in-delhi-rahul-gandhi-targets-pm-narendra-modi-1944679.html. பார்த்த நாள்: 18 March 2019.
- ↑ "After repeated 'chowkidar chor hai' jibes, Narendra Modi in Madhya Pradesh says Congress, its 'naamdar' hurling abuses at him". Firstpost. https://www.firstpost.com/politics/after-repeated-chowkidar-chor-hai-jibes-narendra-modi-in-madhya-pradesh-says-congress-its-naamdar-hurling-abuses-at-him-5573091.html. பார்த்த நாள்: 1 April 2019.
- ↑ "'Chowkidar Chor Hai': Uddhav Thackeray Uses Rahul Gandhi's Jibe To Attack Modi" (in en). HuffPost India. 25 December 2018. https://www.huffingtonpost.in/entry/chowkidar-chor-hai-uddhav-thackeray-uses-rahul-gandhis-jibe-to-attack-modi_in_5c213722e4b08aaf7a8b856f. பார்த்த நாள்: 18 March 2019.
- ↑ टीम, फ़ैक्ट चेक (27 March 2019). "IPL-2019 में 'चौकीदार चोर है' के नारे!". BBC. https://www.bbc.com/hindi/sport-47709151. பார்த்த நாள்: 1 April 2019.
- ↑ "India's watchmen question whether Modi embrace will improve their lot" (in en). Reuters. 23 March 2019 இம் மூலத்தில் இருந்து 24 மார்ச் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190324025711/https://in.reuters.com/article/india-election-watchmen/indias-watchmen-question-whether-modi-embrace-will-improve-their-lot-idINKCN1R406H. பார்த்த நாள்: 24 March 2019.
- ↑ "'Chowkidar Narendra Modi': PM changes Twitter handle name to counter Rahul Gandhi's chor jibe". The Economic Times. 17 March 2019. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/chowkidar-narendra-modi-pm-changes-twitter-handle-name-to-counter-rahul-gandhis-chor-jibe/articleshow/68448053.cms. பார்த்த நாள்: 18 March 2019.
- ↑ "मोदी 'चौकीदार' तो 'चौकीदार का मालिक' कौन" (in en-GB). 2019-03-19. https://www.bbc.com/hindi/social-47623166.
- ↑ "In A New Gimmick, PM Changes Twitter Profile Name To 'Chowkidar Narendra Modi'" (in en). 2019-03-17. https://www.huffingtonpost.in/entry/in-a-new-gimmick-pm-changes-twitter-profile-name-to-chowkidar-narendra-modi_in_5c8e0464e4b0db7da9f454a7.
- ↑ "Mayawati delivers election shock" (in en-GB). 2019-03-20. https://www.bbc.com/news/world-asia-india-47114401.
- ↑ "To counter 'chowkidar chor hai' jibe, PM launches 'main bhi chowkidar' campaign". Rediff. 16 March 2019. https://www.rediff.com/news/report/pm-launches-main-bhi-chowkidar-campaign/20190316.htm. பார்த்த நாள்: 18 March 2019.
- ↑ "Youth Cong's 'Main Bhi Berozgar' campaign to counter BJP's 'Main Bhi Chowkidar' - Times of India". The Times of India. 30 March 2019. https://timesofindia.indiatimes.com/elections/news/youth-congs-main-bhi-berozgar-campaign-to-counter-bjps-main-bhi-chowkidar/articleshow/68649541.cms. பார்த்த நாள்: 31 March 2019.
- ↑ "Lok Sabha elections 2019 | 'If you want your child to become chowkidar, vote for Narendra Modi': Arvind Kejriwal". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-03-20. பார்க்கப்பட்ட நாள் 2020-08-16.
- ↑ The Court sought an apology from Gandhi."SC insists on apology from Rahul Gandhi for attributing phrase 'chowkidar chor hai' to it" (in en-IN). 2019-04-30. https://www.thehindu.com/news/national/chowkidar-chor-hai-remark-supreme-court-insists-on-apology-from-rahul-gandhi/article26993138.ece.
- ↑ "Chowkidar Chor Hai Slogan Raised In Pakistan". ETV Bharat. பார்க்கப்பட்ட நாள் 14 December 2022.