சிந்த்வாரா
சிந்த்வாரா (Chhindwara) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஜபல்பூர் கோட்டத்தில் அமைந்த சிந்த்வாரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும்.
சிந்த்வாரா | |
---|---|
மாநகரம் | |
ஆள்கூறுகள்: 22°04′N 78°56′E / 22.07°N 78.93°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | சிந்த்வாரா |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | சிந்த்வாரா மகாநகராட்சிக் குழு |
பரப்பளவு | |
• மொத்தம் | 110 km2 (40 sq mi) |
ஏற்றம் | 675 m (2,215 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,60,575 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 480001,480002,480003 |
தொலைபேசி குறியீடு | 07162 |
வாகனப் பதிவு | MP-28 |
பாலின விகிதம் | .966 ♂/♀ |
சராசரி உயர் வெப்பம் | 32.7 °C (90.9 °F) |
சராசர் குறைந்த வெப்பம் | 18.0 °C (64.4 °F) |
இணையதளம் | www |
புவியியல்
தொகுசாத்பூரா மலைத்தொடரின் பீடபூமியில் அமைந்த நகரங்களில் சிந்த்வாரா பெரிய நகரம் ஆகும். இந்நகரம் குல்பெக்ரா ஆற்றின் கரையில் உள்ளது.[1]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சிந்த்வாரா மாநகரத்தின் மொத்த மக்கள்தொகை 1,90,041 ஆகும். அதில் ஆண்கள் 97,973 மற்றும் பெண்கள் 92,973 ஆகும். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 19,616 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 958 பெண்கள் வீதம் உள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 83.84$, முஸ்லீம்கள் 11.87%, சமணர்கள் 1.95%, கிறித்தவர்கள் 1.10% மற்றும் பிற சமயத்தவர்கள் 1.24% ஆகவுள்ளனர். [2]
போக்குவரத்து
தொகுசாலை
தொகுசிந்த்வாரா நகரத்துடன் நாக்பூர், போபால் மற்றும் ஜபல்பூர் நகரங்கள் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் சோனெர் நகரத்தையும், மத்தியப் பிரதேசத்தின் நரசிங்பூர் நகரத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 547 சிந்த்வாரா வழியாகச் செல்கிற்து. முல்தாய் மற்றும் சியோனி நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 347 சிந்த்வாரா நகரத்தின் வழியாகச் செல்கிறது.
தொடருந்து
தொகுசிந்த்வாரா தொடருந்து நிலையம், [[பிலாஸ்பூர் மாவட்டம், சத்தீஸ்கர்|பிலாஸ்பூர்-நாக்பூர் வழித்தடம் மற்றும் ஹவுரா-நாக்பூர்-மும்பை வழித்தடங்களை இணைக்கிறது. சிந்த்வாராவிலிருந்து கீழ்கண்ட தொடருந்துகள் நாள்தோறும் இயக்கப்படுகிறது.
- பஞ்சவேலி விரைவு வண்டி - சிந்த்வாரா- இந்தோர்
- பாதல்கோட் விரைவு வண்டி - சிந்த்வாரா - போபால் - மதுரா வழியாக ச்ராய் ரோகில்லா
- அம்லாய் பயணியர் வண்டி - சிந்த்வாரா - அம்லாய்
தட்பவெப்பம்
தொகுஇந்நகரத்தின் கோடைக் கால உயர் வெப்பம் 32.7 °C (90.9 °F) மற்றும் குளிர்காலத்தின் குறைந்த வெப்பம் 18.0 °C (64.4 °F) ஆகும். ஆண்டு சராசரி மழைப் பொழிவு 1133 மில்லி மீட்டர் ஆகும்.
தட்பவெப்ப நிலைத் தகவல், சிந்த்வாரா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 25.6 (78.1) |
28.9 (84) |
32.9 (91.2) |
36.6 (97.9) |
39.4 (102.9) |
35.1 (95.2) |
28.2 (82.8) |
27.5 (81.5) |
28.8 (83.8) |
29.3 (84.7) |
27.5 (81.5) |
26.2 (79.2) |
39.4 (102.9) |
தினசரி சராசரி °C (°F) | 18.2 (64.8) |
20.8 (69.4) |
24.9 (76.8) |
29.3 (84.7) |
32.7 (90.9) |
30 (86) |
25.2 (77.4) |
24.6 (76.3) |
25 (77) |
23.5 (74.3) |
19.7 (67.5) |
18 (64) |
24.33 (75.79) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 10.8 (51.4) |
12.8 (55) |
17 (63) |
22 (72) |
26 (79) |
24.9 (76.8) |
22.3 (72.1) |
21.8 (71.2) |
21.3 (70.3) |
17.7 (63.9) |
12 (54) |
9.9 (49.8) |
9.9 (49.8) |
பொழிவு mm (inches) | 15 (0.59) |
12 (0.47) |
18 (0.71) |
11 (0.43) |
11 (0.43) |
154 (6.06) |
315 (12.4) |
316 (12.44) |
208 (8.19) |
49 (1.93) |
13 (0.51) |
11 (0.43) |
1,133 (44.61) |
ஆதாரம்: [3] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Russell, R. V., ed. (1907). Chhindwara District. Volume 9, Part 1 of Central Provinces District Gazetteers. Bombay: Times Press for Gazetteer Department, Government of Maharashtra. p. 209. இணையக் கணினி நூலக மைய எண் 733692877.
- ↑ Chhindwara City Census 2011
- ↑ "CLIMATE CHHINDWARA". CLIMATE-DATA.ORG. Archived from the original on 22 June 2019. பார்க்கப்பட்ட நாள் 22 June 2019.
ஆதாரம்
தொகு- Dr Deepak Acharya and Dr Anshu Shrivastava (19 November 2009). Indigenous Herbal Medicines: Tribal Formulations and Traditional Herbal Practices (PDF). Archived from the original (PDF) on 3 October 2011. பார்க்கப்பட்ட நாள் 18 November 2009.
{{cite book}}
: More than one of|archivedate=
and|archive-date=
specified (help); More than one of|archiveurl=
and|archive-url=
specified (help)
வெளி இணைப்புகள்
தொகு- Chhindwara district website பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம்
- About-Chhindwara பரணிடப்பட்டது 2019-04-02 at the வந்தவழி இயந்திரம்
- "Chhindwara". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 6. (1911). 116–117.