ஜதிங்கா

அசாமில் உள்ள சிற்றூர்

ஜதிங்கா (Jatinga) என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள திமா ஹசாவ் மாவட்டத்தில் மலையின் மீது உள்ள கிராமம் ஆகும். இது குவகாத்திக்கு தெற்கே 330 கிலோமீட்டர்கள் (210 mi) தொலைவில் அமைந்துள்ளது.[1] இந்த கிராமத்தில் சுமார் 2,500 காசி -ப்னார் மக்கள் மற்றும் ஒரு சில அசாமியர் வசிக்கின்றனர்.

ஜதிங்கா
Jatinga
கிராமம்
ஜதிங்கா Jatinga is located in அசாம்
ஜதிங்கா Jatinga
ஜதிங்கா
Jatinga
அசாமில் அமைவிடம்
ஜதிங்கா Jatinga is located in இந்தியா
ஜதிங்கா Jatinga
ஜதிங்கா
Jatinga
ஜதிங்கா
Jatinga (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°06′54″N 92°56′37″E / 25.1149°N 92.9437°E / 25.1149; 92.9437
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டம்திமா ஹசாவ்
அரசு
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
மொழி
 • அலுவல்அசாமிய மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுAS 08-

அசாமில் உள்ள இந்த ஜதிங்கா "இந்தியாவின் மிகவும் மர்மமான 10 இடங்களில்" ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.[2] மேலும் இது பறவைகளுக்கான பெர்முடா முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது.

பறவைகளின் மர்ம மரணம்

தொகு

பருவமழை மாதங்களின் முடிவில் குறிப்பாக நிலவு இல்லாத மற்றும் பனிமூட்டமான இருண்ட இரவுகளில் மாலை 6 முதல் 9:30 வரை பொதுவாகச் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், பறவைகள் உள்ளூர் மக்களால் தொந்தரவு செய்யப்படாத போதும், இருண்ட வடக்கு வானத்திலிருந்து அவை விளக்குகளால் ஈர்க்கப்படுவதால் தெருக்களில் இறங்கத் தொடங்கும். இந்நேரத்தில் மூங்கில் கம்புகளைப் பயன்படுத்தி இந்த குழப்பமடைந்த பறவைகளை உள்ளூர் மக்கள் பிடிக்கின்றனர்.[3] உள்ளூர் பழங்குடியினர் முதலில் இந்த இயற்கை நிகழ்வை, வானத்திலிருந்து பறக்கும் ஆவிகள் என்று எடுத்துக் கொண்டனர். மலாய் குருகு, கருங்குருகு, சின்னகொக்கு, குளக்கொக்கு, இந்தியத் தோட்டக்கள்ளன் மற்றும் மீன்கொத்தி ஆகிய பறவைகளுடன்[4] மலை கெளதாரி, பச்சைப் புறா, மரகதப்புறா, வட்டக்கழுத்து சிரிப்பான்கள், இரட்டைவால் குருவியும் அடங்கும்.[5] அசாமின் சிறந்த பறவையியல் வல்லுநரான அன்வருதின் சௌத்தியின் கூற்றுப்படி, பறவைகள் பெரும்பாலும் இளமையாக உள்ளன.[6]

மறைந்த இயற்கை ஆர்வலர் ஈ. பி. ஜீ 1960களில் இந்த நிகழ்வை உலகளாவிய கவனத்திற்குக் கொண்டு வந்தார். அவர் பிரபல பறவையியலாளர் மறைந்த சலீம் அலியுடன் ஜதிங்காவிற்கு வந்தார்.[7] இவர்கள் இந்நிகழ்வு பரவலான பனிமூட்டம் காரணமாக அதிக உயரத்தில் திசைதிருப்பல் மற்றும் அதிவேகக் காற்று ஆகியவை காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்தனர்.[8] இந்த மர்மத்தை அவிழ்க்க இந்தியாவின் இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனம் சுதிர் சென்குப்தாவை அனுப்பியது. இந்த நிகழ்வின் மிக சமீபத்திய விளக்கம் மற்றும் மலேசியா, பிலிப்pஈன்சு மற்றும் மிசோரம் போன்ற நாடுகளில் இதே போன்ற சம்பவங்களுடன் ஒப்பிடுவது அன்வருதீன் சவுத்ரியின் தி பேர்ட்ஸ் ஆப் அசாம் புத்தகத்தில் காணப்படுகிறது. இவரின் கூற்றின்படி பறவைகள், பெரும்பாலும் இளம் பறவைகள், வலசை வந்த பறவைகள் அதிக வேகத்தில் வீசும் காற்றினால் தொந்தரவு அடைகின்றன என்பதாகும். கலங்கிய பறவைகள் ஒளியை நோக்கிப் புகலிடமாகப் பறக்கும்போது மூங்கில் கம்புகளால் தாக்கப்பட்டுக் கொல்லப்படுகின்றன அல்லது காயமடைகின்றன.[9]

இந்தியாவில் உள்ள பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் இந்தியா முழுவதும் பறவைகள் விரும்பத்தகாத முறையில் கொல்லப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.திமா ஹசாவோவின் கூடுதல் முதன்மை முதன்மை வனப் பாதுகாவலர் பிகாசு பிரம்மா கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாகக் கிராமத்திற்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதாகக் கூறினார்.[6] இதற்கு "வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு" ஆகியவற்றால் ஏற்படும் வாழ்விட இழப்பு காரணமாகும்.[6]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Choudhury, A. U. (7 September 1986). "Bird killing at Jatinga", The Sentinel.
  2. World, Veena (2021-03-14). "10 Most Mysterious Places in India | Veena World". Veena World Blog (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-07.
  3. "Jatinga Bird Mystery". District Government of Region of North Cachar Hills. Archived from the original on 8 June 2017. பார்க்கப்பட்ட நாள் 9 July 2007.
  4. "Assam Tourism: Jatinga". Assam Tourism Travel Guide. Archived from the original on 19 June 2009. பார்க்கப்பட்ட நாள் 14 January 2009.
  5. "Birds decreasing in Jatinga 'suicide spot'". The Statesman. 20 July 2015. பார்க்கப்பட்ட நாள் 14 February 2016.
  6. 6.0 6.1 6.2 "Fewer birds at Jatinga". The Statesman. 27 July 2015. பார்க்கப்பட்ட நாள் 14 February 2016.
  7. Gee, E. P. (1964). The Wild Life of India, Collins, London.
  8. Gee, E. P. (1964). The Wild Life of India, Collins, London.
  9. Choudhury, Anwaruddin U. (2000). The Birds of Assam. Gibbon Books & WWF-India, Guwahati. 240 pp.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜதிங்கா&oldid=3781867" இலிருந்து மீள்விக்கப்பட்டது