ஜல்பைகுரி மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மேற்கு வங்காளம்)

ஜல்பைகுரி மக்களவைத் தொகுதி (Jalpaiguri Lok Sabha constituency) என்பது இந்தியாவின் 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரியை மையமாகக் கொண்டுள்ளது. எண் 3 ஜல்பைகுரி மக்களவைத் தொகுதியில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள், ஜல்பைகுரி மாவட்டத்திலும், ஒரு சட்டமன்றத் தொகுதி கூச் பெகார் மாவட்டத்திலும் உள்ளன. 2009 முதல் இந்த தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜல்பைகுரி
WB-3
மக்களவைத் தொகுதி
Map
ஜல்பைகுரி மக்களவைத் தொகுதி வரைபடம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்18,85,963 (2024)[1]
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி பாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு
 
மேற்கு வங்காளத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள்-1. கூச் பெகார், 2. அலிபூர்துவார்சு, 3. ஜல்பைகுரி, 4. டார்ஜிலிங், 5. ராய்கஞ்ச், 6. பாலூர்காட், 7. மால்டஹா உத்தர, 8. மால்தஹா தக்ஷிண், 9. ஜான்கிப்பூர், 10. பஹ்ராம்பூர், 11. முர்ஷிதாபாத், 12. கிருஷ்ணநகர், 13. ரணகட், 14. பங்கவன், 15. பராக்பூர், 16. டம் டம், 17. பராசாத், 18. பஷீர்ஹாட், 19. ஜெயநகர், 20. மதுரபூர், 21. டயமண்ட் ஹார்பர், 22. ஜாதவ்பூர், 23. கொல்கத்தா தக்ஷிண், 24. கொல்கத்தா உத்தரப் பிரதேசம், 25. ஹவுரா, 26. உலுபேரியா, 27. சேரம்பூர், 28. ஹூக்லி, 29. அரம்பாக், 30. தம்லுக், 31, காந்தி, 32. கதல், 33. ஜார்கிராம், 34. மெடினிபூர், 35. புருலியா, 36. பாங்குரா, 37. பிஷ்ணுபூர், 38. பர்தமான் புர்பா, 39. பர்தமான் துர்காபூர், 40. அசன்சோல், 41. போல்பூர், 42. பிர்பும்

மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, நாடாளுமன்றத் தொகுதி எண் 3 ஜல்பைகுரி, பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[2]

# பெயர் மாவட்டம் உறுப்பினர் கட்சி
1 மேக்லிகஞ்ச் (ப.இ.) கூச் பெகர் பரேஷ் சந்திர அதிகாரி அஇதிகா
15 துப்குரி (ப.இ.) ஜல்பைகுரி நிர்மல் சந்திர ராய் அஇதிகா
16 மயனகுரி (ப.இ.) கௌசிக் ராய் பாஜக
17 ஜல்பைகுரி (ப.இ.) பிரதீப் குமார் பர்மா அஇதிகா
18 ராஜ்கஞ்ச் (ப.இ.) ககேஸ்வர் ராய் அஇதிகா
19 டப்கிராம்-புல்பாரி சிகா சாட்டர்ஜி பாஜக
20 மால் (ப.கு.) புலு சிக் பாரைக் அஇதிகா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு பெயர் [3] கட்சி
1962 நளினி ரஞ்சன் கோஷ் இந்திய தேசிய காங்கிரசு
1967 பி. என். காத்தம்
1971 டூனா ஓரான்
1977 ககேந்திர நாத் தாஸ்குப்தா சுயேச்சை
1980 சுபோத் சென் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
1984 மாணிக் சன்யால்
1989
1991 ஜிதேந்திர நாத் தாஸ்
1996
1998 மினட்டி சென்
1999
2004
2009 மகேந்திர குமார் ராய்
2014 பிஜோய் சந்திர பர்மன் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2019 ஜெயந்த் குமார் ராய் பாரதிய ஜனதா கட்சி
2024

தேர்தல் முடிவுகள்

தொகு

2024 பொதுத் தேர்தல்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: ஜல்பைகுரி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஜெயந்த் குமார் ராய் 7,66,568 48.57 2.08
திரிணாமுல் காங்கிரசு நிர்மல் சந்திர ராய் 6,79,875 43.07  4.68
இபொக (மார்க்சிஸ்ட்) தேப்ராஜ் பர்மன் 74,092 4.69 0.38
நோட்டா நோட்டா 16,848 1.07
வாக்கு வித்தியாசம் 86,693
பதிவான வாக்குகள் 15,78,389 83.66 2.85
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
  2. "Delimitation Commission Order No. 18" (PDF). Table B – Extent of Parliamentary Constituencies. Government of West Bengal. பார்க்கப்பட்ட நாள் 27 May 2009.
  3. "Jalpaiguri Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
  4. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS253.htm

மேலும் காண்க

தொகு