ஜிதின் பிரசாதா

இந்திய அரசியல்வாதி

ஜிதின் பிரசாதா (Jitin Prasada) (பிறப்பு: நவம்பர் 29, 1973) ஓர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும் ஆவார். இவர் பதினைந்தாவது மக்களவையில் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தின் தௌரக்ரா மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]. அங்கு இவர் 1,84,509 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[2]

ஜிதின் பிரசாதா
ஜிதின் பிரசாதா உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி, நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் உத்தரப் பிரதேச சட்டப் பேரவையின் முன்னாள் உறுப்பினர்
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்
பதவியில்
2012 அக்டோபர் 12 – 2014 மே
பிரதமர்மன்மோகன் சிங்
தொகுதிதௌரக்ரா, உத்தரப் பிரதேசம்
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்
பதவியில்
2011 சனவரி 19 – 2012 அக்டோபர் 28
பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர்
பதவியில்
2009 மே – 2011 சனவரி 18
உருக்குத் துறை அமைச்சர்
பதவியில்
2008 ஏப்ரல் – 2009 மே
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 நவம்பர் 1973 (1973-11-29) (அகவை 50)
சாஜகான்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்நேகா சேத்
வாழிடம்சாஜகான்பூர்
As of 2009 சூலை 30
மூலம்: [1]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

ஜிதின் அரசியல்வாதியான ஜிதேந்திர பிரசாதா மற்றும் அவரது மனைவி காந்தா பிரசாதா ஆகியோருக்கு உத்தரப்பிரதேசத்தின் சாஜகான்பூரில் பிறந்தார். இவரது தாய் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். ஜிதின் தேராதூனிலுள்ள தூன் பள்ளியில் படித்தார்.[3] [4] [5] [6] தில்லி பல்கலைக்கழகத்தின் சிறிராம் வணிகக் கல்லூரியில் இளங்கலையை முடித்தார். பின்னர், புது தில்லி, சர்வதேச மேலாண்மை நிறுவனத்தில் முதுகலை வணிகம் முடித்தார்.

இவரது தாத்தா ஜோதி பிரசாதா காங்கிரசு கட்சி உறுப்பினராக இருந்து சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றினார். இவரது பாட்டி பமீலா பிரசாதா கபுர்த்தலாவின் சீக்கிய அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தாத்தா ஜுவாலா பிரசாதா காலனித்துவ காலத்தில் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியாக பணியாற்றியவர். மேலும் இவரது பெரிய பாட்டி பூர்ணிமா தேவி, நோபல் பரிசு பெற்ற இரவீந்திரநாத் தாகூரின் சகோதரர் ஹேமந்திரநாத் தாகூரின் இளைய மகள் ஆவார்.  

அரசியல் வாழ்க்கை

தொகு

2001 ஆம் ஆண்டில், ஜிதின் பிரசாதா இந்திய இளைஞர் காங்கிரசின் பொதுச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2004ஆம் ஆண்டில், தனது சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்தின் சாஜகான்பூர் நாடளுமன்றத் தொகுதியிலிருந்து பதினான்காவது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிதின் பிரசாதா எஃகு துறைக்கு அமைச்சரானார். மேலும் அமைச்சரவையில் (ஏப்ரல் 2008) இளைய அமைச்சர்களில் ஒருவராக இருந்தார். 2009 ஆம் ஆண்டில், தனது சொந்தத் தொகுதியான சாஜகான்பூர் மறுவரையறுக்கப்பட்டதால், இவர் தௌரக்ராவிலிருந்து தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். 2008 ஆம் ஆண்டில் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் தனது தொகுதியான தௌரக்ராவில் (மக்களவைத் தொகுதி) ஒரு எஃகு தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். [7]

லக்கிம்பூர் கேரி மாவட்டத்தின் குறுகிய ரயில் பாதையை அகல இரயில் பாதையாக மாற்றுவதற்கான இவரது வாக்குறுதி 2009 நாடாளுமன்றத் தேர்தலின் போது இவருக்கு பெரும் ஆதரவளித்தது. 14 வது மக்களவைக்கு, மனுக்களுக்கான குழு (உறுப்பினர்) பதவிகளை ஜிதின் வகித்தார்; தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு குழு (உறுப்பினர்); ஆலோசனைக் குழு, உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் எஃகு அமைச்சகம் போன்றவை.

2014 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ரேகா வர்மாவிடம் இவர் தனது தொகுதியை இழந்தார். [8] [9]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ஜிதின் பிரசாதா பிப்ரவரி 2010 இல் பத்திரிகையாளரான நேகா சேத் என்பவரை மணந்தார். நேகா டைம்ஸ் ஆஃப் இந்தியா, மற்றும் சிஎன்என்-ஐபிஎன் போன்ற செய்தி நிறுவனங்களில் பணிபுரிந்தவராவார்.

குறிப்புகள்

தொகு
  1. Priya Sahgal. "The Rahul offensive". India Today. பார்க்கப்பட்ட நாள் 2 April 2019.
  2. "News18.com: CNN-News18 Breaking News India, Latest News Headlines, Live News Updates". Ibnlive.in.com. Archived from the original on 31 May 2009. பார்க்கப்பட்ட நாள் 2 April 2019.
  3. "To the manner born? - Indian Express". Archive.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2 April 2019.
  4. "Doon squad - Indian Express". Archive.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2 April 2019.
  5. "Lok Sabha polls 2004: Power families in Parliament". India Today. பார்க்கப்பட்ட நாள் 2 April 2019.
  6. "Archived copy". Archived from the original on 12 May 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-07-12.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  7. https://resultuniversity.com/election/dhaurahra-lok-sabha
  8. https://www.news18.com/lok-sabha-elections-2019/uttar-pradesh/dhaurahra-election-result-s24p29/
  9. https://www.elections.in/results/dhaurahra-up.html

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிதின்_பிரசாதா&oldid=4028442" இலிருந்து மீள்விக்கப்பட்டது