ஜி. வி. ஐயர்

இந்தியத் திரைப்பட இயக்குநர்

ஜி. வி. ஐயர் (G. V. Iyer) என பிரபலமாக அறியப்பட்ட கணபதி வெங்கடரமண ஐயர் (3 செப்டம்பர் 1917 - 21 டிசம்பர் 2003) பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். அவர் "கன்னட வீடுமர் (பீஷ்மர்) " என அழக்கப்பட்டார்.[1] மற்றும் சமஸ்கிருதத்தில் திரைப்படங்களை உருவாக்கிய ஒரே நபராகவும் இருந்தார். அவரது திரைப்படம் ஆதி சங்கராச்சாரியார் (1983) சிறந்த தேசிய திரைப்பட விருது , சிறந்த திரைப்படம் , சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த ஒலிப்பதிவு, போன்றவற்றிற்காக விருதுகளைப் பெற்றுள்ளது.[2][3] அவரது திரைப்படங்கள் ஆன்மீக கருப்பொருட்களுக்காக நன்கு அறியப்பட்டவை. அவர் தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூர் மாவட்டத்தில் நஞ்சன்கூடு என்னுமிடத்தில் 1917இல் பிறந்தார். சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்ற பகவத் கீதா (1993), என்கிற அவரது திரைப்படம், பொகோடா திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டது. மற்றும் ஸ்வாமி விவேகானந்தா (1998) திரைப்படத்தில், மிதுன் சக்ரவர்த்தி நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் பிரிவில், தேசிய விருதை பெற்றுள்ளார்.

கணபதி வெங்கடரமண ஐயர்
பிறப்பு(1917-09-03)3 செப்டம்பர் 1917
நஞ்சன்கூடு, மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு21 திசம்பர் 2003(2003-12-21) (அகவை 86)
மும்பை, மகாராஷ்டிரம், இந்தியா
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்
  • ஜி. வி. ஐயர்
  • கன்னட பீஷ்மா
பணிநடிகர், பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர்
அறியப்படுவதுசமசுகிருதம் திரைப்பட இயக்குனர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஆதி சங்கராச்சார்யா (1983)
பகவத் கீதா (1993)
சுவாமி விவேகானந்தா (1998)
மத்துவாச்சார்யா (1987)

தொழில்

தொகு

அவர் எட்டு வயதில் குப்பி வீரண்ணா நாடக குழுவில் சேர்ந்து தன் திரைப்படத் தொழிலை தொடங்கினார்.[4] அவரது முதல் கதாபாத்திரம் ராதா ரமணா படத்தில் இருந்தது. இது தவிர மகாகவி காளிதாசா , சோதாரி , ஹேமாவதி , ஹரி பக்தா மற்றும் பேடரா கன்னப்பா போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இரண்டு பெரிய கன்னட நடிகர்களான டாக்டர் ராஜ் குமார் மற்றும் நரசிம்ம ராஜு ஆகிய இருவருக்கும் பேடரா கண்ணப்பாவில் நடித்ததின் மூலம் திரையுலகில் திருப்பத்தை ஏற்படுத்திய பெருமையை அடைகிறார். ராஜ் குமார் முன்பு ஒரு படத்தில் ஒரு காட்சியில் நடித்து இருந்தார் என்றாலும், திரு ஐயர் அவரை கதாநாயகனாக நடிக்க வைத்த பேடரா கண்ணப்ப என்ற படத்தின் மூலமாக மக்கள் மனதில் இடம்பெற்றார். அதனால் இப்படம் ராஜ்ஜ்குமாருக்கு முதல் படமாக அமைந்தது. ஐயர் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படமான வம்ஷா விருக்ஷாவை தயாரித்தார். எஸ்.எல். பைரப்பாவின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இத் திரைப்படம் எடுக்கப்பட்டது. இது பி.வி.கரந்த் மற்றும் கிரிஷ் கர்னாட் ஆகியோரால் இயக்கப்பட்டது.

அவர் விரைவில் தனது சொந்த திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா , பி.வி. காரந்த் மற்றும் டி.ஜி. லிங்கப்பா ஆகியோரின் இசையில் இவர் இயக்கிய ஹம்ஸகீதே திரைப்படம் இவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது. ஐயர், திரைக்கதைகள், பாடல்கள் எழுதி, பல வணிக கன்னட திரைப்படங்களை தயாரித்து இயக்கினார். ஐயரின் மிகப் பெரிய முயற்சி ரணதீர காந்திரவா திரைப்படம் ஆகும். அவர் 1970 வரை வணிக ரீதியான திரைப்படங்களைத் தொடர்ந்தார்.

அவரது இளமைப் பருவத்தில், மகாத்மா காந்தி மற்றும் அவரது கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றினார். அதனால், காந்தி இறந்த நாளிலிருந்து காலணிகளை அணிவதைத் தவிர்த்தார். காந்தி அறிவுறுத்தியபடி "காதி" என்றழைக்கப்படும் கை விரல்களால் நெய்த கதராடைகளை அணிந்தார்.

கன்னட மற்றும் சமஸ்கிருதத்திலும் அவர் புலமை மிக்கவராக இருந்தார். அதனால், முதன்முதலாக தத்துவஞானி ஆதி சங்கராச்சாரியாரைப் பற்றி ஆதி சங்கராச்சார்யா என்கிற திரைப்படத்தை, 1983இல் வெளியிட்டார். இந்தத் திரைப்படம் தேசிய திரைப்பட விருதுகளை, சிறந்த திரைப்படத்திற்காக , சிறந்த திரைக்கதை , சிறந்த ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவு ஆகியவற்றிற்காகப் பெற்றது . இத்திரைப்படம் ஐயர் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என நம்பப்படுகிறது.

பின்னர் அவர் கன்னட மொழியில் மத்துவாச்சாரியா என்ற தலைப்பிலும், மற்றும் தமிழில் ராமானுஜாச்சார்யா என்றும் படத்தை தயாரித்து வெளியிட்டார். 1993 ஆம் ஆண்டின் தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்பட விருதை வென்ற அவரின் ஒரு குறிப்பிடத்தக்க சமஸ்கிருத திரைப்படமான பகவத் கீதையை (1993) தயாரித்தார்.[5] இந்தப் படம் பொகொடா திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "G.V. Iyer". jointscene.
  2. "31st National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. Archived from the original on 2013-11-12. பார்க்கப்பட்ட நாள் 2019-03-24.
  3. "31st National Film Awards (PDF)" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 2012-04-24. பார்க்கப்பட்ட நாள் 2019-03-24.
  4. "GV Iyer Movies Collectors Set".
  5. "National Film Awards, India,". IMDb. பார்க்கப்பட்ட நாள் 9 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._வி._ஐயர்&oldid=3573126" இலிருந்து மீள்விக்கப்பட்டது