ஜூடி பாலன்
ஜூடி பாலன் (பிறப்பு: செப்டம்பர் 2, 1981), ஒரு பகடி எழுத்தாளர் மற்றும் வலைப் பதிவராவர்[1] இவர், சேத்தன் பகத்தின் 2 ஸ்டேட்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ் என்ற காதல் நாவலை பகடி செய்து, டூ ஃபேட்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் மை டிவோர்ஸ் என்ற பெயரில் 2011 ம் ஆண்டு முதல் நாவலை வெளியிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து ஆறு நாவல்களை பல்வேறு ஆண்டுகளில் எழுதியுள்ளார். பெண் மற்றும் நான்கின் ஒரு பகுதி என்ற பெயரில் வலைப்பக்கம் ஒன்றையும் எழுதி பராமரித்து வருகிறார்.
ஜூடி பாலன் | |
---|---|
பிறப்பு | 2 செப்டம்பர்1981 சென்னை, இந்தியா |
வகை | நகைச்சுவை |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுஇந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் சென்னையில் 1981 ம் ஆண்டு பிறந்தவர் ஜூடி பாலன் ஆவார்.[சான்று தேவை]
பாலன் தனது பள்ளிப் படிப்பை சென்னை நல்ல ஆயன் கன்னிமாடப் பள்ளியிலும் சென்னையில் உள்ள திரு இருதய மெட்ரிகுலேஷன் பள்ளி, சர்ச்பார்க் ஆகியவற்றில் முடித்துள்ளார். ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைக்கல்வியை சென்னையில் உள்ள ஸ்டெல்லா மாரிஸில் கல்லூரியில் முடித்துள்ள இவர், முழுநேர எழுத்தாளராக ஆவதற்கு முன்பாக சில விளம்பர நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.[சான்று தேவை]
தொழில்
தொகுஈட், ப்ரே, லவ் என்ற நாவலின் தாக்கத்தினாலும், பகடி எழுத்தின் மீது உள்ள ஆர்வத்தினாலும் புத்தகங்கள் எழுத ஆரம்பித்த ஜூடி,
- டூ ஃபேட்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் மை டிவோர்ஸ் - சேத்தன் பகத்தின் 2 ஸ்டேட்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ் நாவலின் பகடி; 2011 ம் ஆண்டு வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. விவாகரத்து செய்ய விரும்பும் ஒரு இணையைப் பற்றியது
- சோஃபி கூறுகிறார்: ஒரு மனமுறிவு பயிற்சியாளரின் நினைவுகள் - காதல் பிரிவிற்கு வழிகூறும் சோபியின் கதை - மே 11, 2013 அன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள கிராஸ்வேர்ட்ஸில் வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது
- மோசமான முடிவுகளை எடுப்பதில் இருந்து உங்கள் பெற்றோரை எவ்வாறு தடுப்பது - தத்துவவாதி நினா பாகம் 1; நவீன கால ஒற்றைத் தாய் மற்றும் அவரது இரண்டு அற்புதமான, பெருங்களிப்புடன் கோபம் கொண்ட மகள்கள் பற்றிய விசித்திரக் கதை, டிசம்பர் 17, 2014 அன்று ஹார்பர்காலின்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது
- ஹேஷ்டேக்குகளின் காலத்தில் ட்வீனி - தத்துவவாதி நினா பாகம் 2; 12 வயதான நினாவின் வலைப்பதிவு எழுத்துக்களின் வடிவில் உள்ள இந்த புத்தகம், ஜனவரி 10, 2016 அன்று ஹார்பர்காலின்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது
- ஹாஃப் பாய்பிரண்ட் - ஜூடி பாலன் மற்றும் கிஷோர் மனோகர் இணைந்து எழுதிய சேத்தன் பகத்தின் ஹாஃப் கேர்ள்பிரண்ட் நாவலின் பகடி. முழுக்க முழுக்க கேலியும் கிண்டலுமான நாவல். 14 ஜூலை 2016 அன்று ப்ளூம்ஸ்பரி இந்தியா நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
- அதைப் பற்றி எனக்கு ஒரு கோட்பாடு உள்ளது - "உண்மையான அன்பை" கண்டுபிடிக்க ஒப்பந்தங்கள் மூலம் முயற்சிப்பது பற்றிய கதை. 31 ஆகஸ்ட் 2019 அன்று ஹாசெட் இந்தியா நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. மூன்று வருடங்களுக்கு பின்பாக எழுதிய நாவல்.
- நான் ஏன் இப்படி இருக்கிறேன்? உளவியல் ஜோதிடம் ஒரு பயணம் - உளவியல் ஜோதிடத்திற்கான இந்த சிந்தனைமிக்க, ஆழமான தொடக்க வழிகாட்டி. 28 பெப்ரவரி 2023 அன்று சைமன் & ஷஸ்டர் இந்தியா நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
ஆங்கிலத்தில் இத்தனை நாவல்களை எழுதியுள்ளார். இவரது சொந்த வாழ்க்கையின் கதைகளையே தன்னம்பிக்கையுடனும், நகைச்சுவையுடனும், பகடி எழுத்தில் வடிவமைத்துள்ளார்.[சான்று தேவை]
குடும்பம்
தொகுசென்னையில் வசித்து வந்த இவர், மோசமான விவாகரத்திற்கு பிறகு ஒற்றை தாயாராக , தனது மகள் கியாராவுடன் லண்டனில் உள்ள தனது சகோதரருடன் வசித்து வருகிறார்,.
மேற்கோள்கள்
தொகு- ↑ "On the anti-romance drive" பரணிடப்பட்டது 2015-11-21 at the வந்தவழி இயந்திரம். Indian Express, By Janane Venkatraman | ENS - CHENNAI 4 May 2013
வெளி இணைப்புகள்
தொகு- "இரண்டு விதிகள்: என் விவாகரத்தின் கதை" . மாளவிகா சா, வெர்வ் இதழ், தொகுதி 20, வெளியீடு 1, ஜனவரி, 2012