ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்

ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்பது 7 ஆகத்து 2016 முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உண்மைநிலை குழந்தைகள் போட்டித் திறமை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும்.[1] இது ஹிந்தி மொழி நிகழ்ச்சியான 'இந்தியன்ஸ் பெஸ்ட் டிராமாபாஸ்' என்ற நிகழ்ச்சியின் மறு ஆக்கம் ஆகும்.

ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்
வேறு பெயர்Junior Super Star
வகைஉண்மைநிலை
குழந்தைகள்
திறமை
நிகழ்ச்சி
இயக்கம்பிரவீன் ஜி
வழங்கல்கீர்த்தி சாந்தனு
நீதிபதிகள்பாக்யராஜ்
குஷ்பூ
VJ அர்ச்சனா சந்தொசே
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
பருவங்கள்3
அத்தியாயங்கள்108
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்பாலமுருகன் கி
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 50–55 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்Sunday Productions
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்7 ஆகத்து 2016 (2016-08-07) –
22 செப்டம்பர் 2019 (2019-09-22)
Chronology
தொடர்புடைய தொடர்கள்ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 2
ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3.0

விவரம்

தொகு

இதில் பங்கேற்பாளர்களாக 4-14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளனர். இது குழந்தைகளின் நடிப்பு திறமையை வெளிக்காட்டும் நிகழ்ச்சி ஆகும்.[2]

நிகழ்ச்சியின் பருவங்கள்

தொகு
பருவங்கள் அத்தியாயங்கள் ஒளிபரப்பு நேரம்
முதல் ஒளிபரப்பு இறுதி ஒளிபரப்பு
1 40 7 ஆகத்து 2016 (2016-08-07) 18 திசம்பர் 2016 (2016-12-18) சனி - ஞாயிறு
இரவு 7 மணிக்கு
2 40+1 13 மே 2017 (2017-05-13) 24 செப்டம்பர் 2017 (2017-09-24) சனி - ஞாயிறு
இரவு 7 மணிக்கு
3 26+1 10 மார்ச்சு 2019 (2019-03-10) 22 செப்டம்பர் 2019 (2019-09-22) ஞாயிறு
இரவு 9 மணிக்கு

பருவங்கள்

தொகு

பருவம் 1

தொகு

இந்த நிகழ்ச்சியின் முதல் பருவம் 7 ஆகத்து முதல் 18 திசம்பர் 2016 ஆம் ஆண்டு வரை சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி, 40 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[3] இந்த நிகழ்ச்சியை கீர்த்தி சாந்தனு என்பவர் தொகுத்து வழங்க, பாக்யராஜ், குஷ்பூ மற்றும் அர்ச்சனா ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.[4][5][6] இந்த பருவத்தின் முதலாவது வெற்றியாளர் அஸ்வந்த் அசோக்குமார், இரண்டாவது வெற்றியாளர் வெனீசா மற்றும் மூன்றாவது வெற்றியாளர் பவித்ரா ஆவார்கள்.

பருவம் 2

தொகு

இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பருவம் 13 மே முதல் 24 செப்டம்பர் 2017 ஆம் ஆண்டு வரை சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி, 41 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[7] முதல் பருவத்தை தொகுத்து வழங்கிய கீர்த்தி சாந்தனு என்பவர் தொகுத்து வழங்க, பாக்யராஜ், ரோஜா மற்றும் அர்ச்சனா ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.[8] இந்த பருவத்தின் வெற்றியாளர் பவாஸ்[9] ஆவார்.

பருவம் 3

தொகு

இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் பருவம் 10 மார்ச்சு 2019 முதல் 22 செப்டம்பர் 2019 ஆம் ஆண்டு வரை ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி, 21 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியை கமல், ஷபானா மற்றும் அஞ்சனா ஆகியோர் தொகுத்து வழங்க, பாக்யராஜ், தேவயானி மற்றும் ரச்சித்தா மகாலட்சுமி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.[10] இந்த பருவத்தின் வெற்றியாளர் தீபேஷ்வரன் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "ஜி தமிழ் புதிய நிகழ்ச்சி ஜூனியர் சூப்பர் ஸ்டார்". cinema.dinamalar.com.
  2. "Zee Tamil Junior Super Star Audition, Registration". www.cinemaone.in.
  3. "Junior Superstars Chennai auditions on July 3". timesofindia.indiatimes.com.
  4. "Zee Tamil's audition for juniors". chennaionline.com.
  5. "Get ready for the Junior Superstar". timesofindia.indiatimes.com.
  6. "Zee Tamil Junior Super Star Auditions 2016 Live". www.ctnews.in. Archived from the original on 2017-09-23. பார்க்கப்பட்ட நாள் 2020-09-10.
  7. "Junior Superstars talent show is Back with a Bang". www.screen4screen.com. Archived from the original on 2017-04-14. பார்க்கப்பட்ட நாள் 2017-04-12.
  8. "உங்க வீட்டு குட்டீஸ் ஜீ தமிழ் டிவி ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் ஆகணுமா?". tamil.filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 2017-04-20.
  9. "I never expected that I would win: Bavas". timesofindia.indiatimes.com.
  10. "Who will be announced as the winner of Super Star 3.0 Winner on Zee Tamil". www.auditionform.in. Archived from the original on 2021-08-26.

வெளி இணைப்புகள்

தொகு