ஜெனிலியா

இந்திய நடிகை (பிறப்பு 1987)
(ஜெனிலியா டி சௌசா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜெனிலியா (ஹரிணி) (பிறப்பு: ஆகஸ்ட் 5, 1987, இந்தியா) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து உள்ளார். இயக்குனர் சங்கர் தனது பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஜெனிலியாவை அறிமுகப்படுத்தினார். பின்னர், நடிகர் விஜய், பரத், ஜெயம் ரவி ஆகியோர் படங்களில் நடித்துள்ளார். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினியாக குதூகலம், குறும்புத்தனம் மிக்கப் பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார்.

ஜெனிலியா

இயற் பெயர் ஜெனிலியா டிசூசா
பிறப்பு ஆகத்து 5, 1987 (1987-08-05) (அகவை 37)
இந்தியா மும்பை, இந்தியா
வேறு பெயர் ஜீனு, ஹரிணி
நடிப்புக் காலம் 2003—தற்போது வரை
குறிப்பிடத்தக்க படங்கள் ஹரிணி பாய்ஸ்
ஹாசினி பொம்மரில்லு
அதிதி (Jaane tu ya jaane na)

விருதுகள்

தொகு

பிலிம்பேர் விருதுகள்

தொகு
  • 2006: சிறந்த நடிகை விருது (தெலுங்கு); பொம்மரில்லு
  • 2007: சிறந்த நடிகை விருது (தெலுங்கு); தீ

திரை வாழ்க்கை

தொகு
ஆண்டு திரைப்படம் வேடம் மொழி குறிப்புகள்
2003 பாய்ஸ் ஹரிணி தமிழ் இதே பெயரில் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
சத்யம் அன்கிதா தெலுங்கு
துஜே மேரி கசம் அஞ்சு இந்தி
2004 மஸ்தி பிந்தியா இந்தி
சம்பா சந்தியா தெலுங்கு தமிழில் சம்பா என மொழிமாற்றம்
2005 நா அல்லுடு ககனா தெலுங்கு தமிழில் மதுரை மாப்பிள்ளை என மொழிமாற்றம்
சச்சின் சாலினி தமிழ்
சுபாஷ் சந்திர போஸ் அனிதா தெலுங்கு
சை] இந்து தெலுங்கு தமிழில் கழுகு
மலையாளத்தில் Challenge என மொழிமாற்றம்
2006 ஹேப்பி மதுமதி தெலுங்கு மலையாளத்தில் ஹேப்பி என மொழிமாற்றம்
ராம் லக்சுமி தெலுங்கு
பொம்மரில்லு ஹாசினி தெலுங்கு
சென்னைக் காதல் நர்மதா தமிழ்
2007 தீ பூஜா தெலுங்கு
2008 மிஸ்டர். மேதாவி சுவேதா தெலுங்கு
சத்யா இன் லவ் வேதா கன்னடம்
சந்தோஷ் சுப்பிரமணியம் ஹாசினி தமிழ் பொம்மரில்லுவின் மீளுருவாக்கம்
மேரி பாப் பஹலி ஆப் ஷீகா கபூர் இந்தி
ரெடி பூஜா தெலுங்கு
ஜானே தூ யா ஜானே நா அதிதி (மியாவ்) இந்தி
2009 சசிரேகா பிரயாணம் சசிரேகா தெலுங்கு
லைப் பார்ட்னர் சஞ்சனா இந்தி
காதா சித்ரா சிங் தெலுங்கு நந்தி சிறப்பு ஜூரி விருது
2010 சான்ஸ் பே டான்ஸ் தின சர்மா இந்தி
2010 உத்தம புத்திரன் பூஜா தமிழ்
2010 ஆரஞ்சு ஜானு தெலுங்கு
2011 உறுமி அரக்கள் ஆயிஷா மலையாளம் AsiaVision Film Award for Best Actress
2011 போர்ஸ் மாயா இந்தி
2011 வேலாயுதம் பாரதி தமிழ்
2011 இட்'ஸ் மை லைப் நடாலி சோப்ரா (கீனு) இந்தி Post-production
2011 ஹூக் யா குரூக் சோனியா ராய் இந்தி Shelved
2012 நா இஷ்தாம் தெலுங்கு
2012 தேரே நால் லவ் ஹோ கயா Mini இந்தி
2012 ராக் தி ஷாடி இந்தி

மறுபிரவேசம்

தொகு
 
தன் கணவருடன் இருக்கும் படம்

தன் காதலன் ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்து திரைத்துறையை விட்டுவிலகிய இவர் மறுபடியும், தயாரிப்பாளர் அர்பாஸ் கான் தயாரிக்கும் டாலி கி டோலி என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார்.[1]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனிலியா&oldid=4114459" இலிருந்து மீள்விக்கப்பட்டது