ஜெ. கீதா ரெட்டி

இந்திய மருத்துவர், அரசியல்வாதி

ஜெட்டி கீதா ரெட்டி (Jetti Geeta Reddy) (பிறப்பு 1947) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஓர் மகளிர் மருத்துவ நிபுணரும் கூட. இவர் தெலங்காணா சட்டமன்ற உறுப்பினராக 2014 முதல் 2018 வரை மேடக் மாவட்டத்தில் உள்ள ஜஹீராபாது தனி சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் சூலை 2021 முதல் தெலங்காணா பிரதேச காங்கிரசு குழுவின் செயல் தலைவராக உள்ளார்.

ஜே. கீதா ரெட்டி
முக்கிய தொழில்கள், சர்க்கரை, வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைச்சர்
ஆந்திரப் பிரதேச அரசு
பதவியில்
செப்டம்பர் 2009–2014
தெலங்காண பிரதேச காங்கிரசு குழுவின் செயல் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 சூலை 2021
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 ஏப்ரல் 1946 (1946-04-17) (அகவை 78)[1]
ஐதராபாத்து,[1] ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய தெலங்காணா,இந்தியா)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்இராமச்சந்திர ரெட்டி
பிள்ளைகள்1
வாழிடம்ஐதராபாத்து
வேலைமகப்பேறு மருத்துவ நிபுணர்

கீதா ரெட்டி பல்வேறு அரசாங்கங்களின் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்துள்ளார். கொனியேட்டி ரோசையாவின் அரசாங்கத்தின் போது சட்டமன்றத்தில் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராகவும் இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

கீதா ரெட்டி, இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரி பாய் என்பவரின் மகளாவார்.[2]இவர் ஐதராபாத்து உசுமானியா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். 1989இல் இலண்டன் அரச கழக மகப்பேறு நிபுணர்கள் மற்றும் மகளிர் மருத்துவக் கல்லூரியின் உறுப்பினர் பட்டியலில் சேர்ந்தார்.[3]

தொழில்

தொகு

கீதா ரெட்டி மகளிர் நல மருத்துவ நிபுணராக பணிபுரிந்தார். இவர் 1971 முதல் 1977 வரை ஆத்திரேலியாவிலும், 1977 முதல் 1980 வரை இலண்டனிலும், 1980 முதல் 1982 வரை சவுதி அரேபியாவிலும் வாழ்ந்தார். பின்னர் இவர் இந்தியா திரும்பினார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

இவரும் இவரது கணவர் இராமச்சந்திர ரெட்டியும், சவுதி அரேபியாவில் மருத்துவப் பயிற்சியை நடத்தி வந்தனர். 1985ஆம் ஆண்டில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் வேண்டுகோளின் பேரில், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக கீதா பணியாற்றுவதற்காக தம்பதியினர் இந்தியா திரும்பினர். இவர் 1989இல் ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, மேடக் மாவட்டத்தில் கஜ்வெல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானார். 2004இல் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். [4]

2009 தேர்தலில், ஜஹீராபாது தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இத் தொகுதி 1957 முதல் ஒவ்வொரு தேர்தலிலும், காங்கிரசு வேட்பாளர்களையேத் தேர்ந்தெடுத்தது. பட்டியல் சாதியினருக்கான வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடமாகவும் மாற்றப்பட்டது.[5]

மாரி சன்னா ரெட்டி, கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி , எ. சா. ராஜசேகர் ஆகியோரின் அமைச்சரவையில் கீதா அமைச்சராக இருந்தார்.[6] ரோசைய்யா அரசாங்கத்தின் போது சட்டமன்றத்தில் காங்கிரசு கட்சித் தலைவராக இருந்தார்.

குடும்பம்

தொகு

ஜெ. கீதா ரெட்டி, மருத்துவர் இராமச்சந்திர ரெட்டியை மணந்தார். [7] இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். [8]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "Member's Profile - Telangana-Legislature".[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Profiles of new Ministers" இம் மூலத்தில் இருந்து 2004-06-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040605085933/http://www.hindu.com/2004/05/23/stories/2004052309020400.htm. 
  3. "Jetty Geeta Reddy -". Archived from the original on 2019-05-25. பார்க்கப்பட்ட நாள் 2019-05-25.
  4. . 7 December 2009. 
  5. "Zahirabad (SC) (Telangana) Assembly Constituency Elections". Infobase. பார்க்கப்பட்ட நாள் 2017-07-18.
  6. https://www.andhrajyothy.com/elections/prajatantram_biography?PLID=211[தொடர்பிழந்த இணைப்பு]
  7. . 7 May 2011. 
  8. . 28 April 2014. Menon, Meghna (28 April 2014).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._கீதா_ரெட்டி&oldid=3616987" இலிருந்து மீள்விக்கப்பட்டது