ஜேவி மனிசா பசாசு
பிறப்புஜேவி மனிசா பசாசு
19 செப்டம்பர் 1967 (1967-09-19) (அகவை 57)
புது தில்லி,
படித்த கல்வி நிறுவனங்கள்தில்லிப் பல்கலைக்கழகம், தில்லி
பணிநடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர், கவிஞர்
செயற்பாட்டுக்
காலம்
1989–தற்போது வரை

ஜேவி மனிசா பசாசு (JV Manisha Bajaj) ஓர் இந்திய எழுத்தாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

மனிசா புது தில்லியில் 19 செப்டம்பர் 1967 அன்று கீதா மற்றும் ஜனார்தன் பிரசாத் வர்மாவுக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு மோனிகா அகவுரி எனும் சகோதரி உள்ளார். மனிசா தனது ஒன்பது வயதில் பட்டினியைப் பற்றி தனது முதல் கவிதையை எழுதினார். கவி சம்மேளனம் மற்றும் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

தொழில் வாழ்க்கை

தொகு

தூர்தரசனில் அறிவிப்பாளராகச் சேர்ந்தார் மற்றும் பல தொலைக்காட்சித் திரைப்படம் மற்றும் தொடர்களில் நடித்தார். இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம், என்டிடிவி லைவ் இந்தியா, எஸ் எபி மற்றும் சன்சுகர் தொலைக்காட்சி ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார். [1] செங்கோட்டையில் தேசியக் கவிஞராக பாடும் வாய்ப்பினைப் பெற்றார்.[2] மனிசாவின் சமூகப் பணி 2001 இல் தொடங்கியது, செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு சாதி மறுப்புத் திருமணம் உள்ளிட்ட சமூகப் பிரச்சனைகள் தொடர்பாக எழுதியுள்ளார்.யுக் யாத்ரா (2013) என்பது உள்ளிட்ட நூல்களையும் வெளியிட்டுள்ளார். [2] 2013 ஆம் ஆண்டில், மனிசா மூத்த குடிமக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் தேசிய செய்தித்தாளான சாஞ்சி சாஞ்ஜை நிறுவினார், இருப்பினும் அது சில காலமே நீடித்தது.

இவர் பல திரைப்படங்கள், ஆவணப்படங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றிற்கு திரைக்கதை எழுதியுள்ளர் மற்றும் தயாரித்துள்ளார். 2013 இல் பிஜியில் பேஜ் நம்பர் 217 என்ற படத்தைத் தயாரித்து வந்தார்.[3][4]

சொந்த வாழ்க்கை

தொகு

மனிசா 1993 இல் தேவேந்திர குமார் பசாசை மணந்தார். இந்த தம்பதிக்கு பஞ்சம், பவன் என இரு மகன்கள் உள்ளனர்.[ மேற்கோள் தேவை ]

சான்றுகள்

தொகு
  1. "Team". Harikrit Films Delhi. Archived from the original on 1 April 2014. பார்க்கப்பட்ட நாள் 10 March 2014.
  2. 2.0 2.1 {{cite web}}: Empty citation (help)
  3. Stolz, Ellen (18 March 2013). "Film company sees potential in shooting films here". Fiji Sun. Archived from the original on 5 October 2021. பார்க்கப்பட்ட நாள் 25 February 2023.
  4. Gopal, Avinesh (19 March 2013). "BOLLYWOOD EYES BIG BUDGET MOVIES IN FIJI". Indian Weekender. பார்க்கப்பட்ட நாள் 25 February 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேவி_மனிசா&oldid=3817001" இலிருந்து மீள்விக்கப்பட்டது