சோயல் வில்சன்
சோயல் வில்சன் (ஜோயல் ஷெல்டன் வில்சன்) (பிறப்பு: டிசம்பர் 30, 1966) டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த ஒரு பன்னாட்டுத் துடுப்பாட்ட நடுவர் ஆவார்.[1] வில்சன் தற்போது மேற்கிந்திய தீவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்றட்டு நடுவர்களின் குழுவில் உறுப்பினராக உள்ளார்.[2] அவர் பனாட்டுத் துடுப்பாட்டத்தின் மூன்று வடிவங்களினான தேர்வுப் போட்டிகள், ஒரு நாள் பன்னாட்டுப் போட்டிகள் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய அனைத்துப் போட்டிகளிலும் நடுவராகக் கடமையாற்றுகிறார்.
2019 ஆசசுப் போட்டியொன்றின் போது வில்சன் | |
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
முழுப்பெயர் | சோயல் செல்டன் வில்சன் |
பிறப்பு | 30 திசம்பர் 1966 சிப்பாரியா, டிரினிடாட், டிரினிடாட் மற்றும் டொபாகோ |
பங்கு | நடுவர் |
நடுவராக | |
தேர்வு நடுவராக | 34 (2015–2023) |
ஒநாப நடுவராக | 85 (2011–2023) |
இ20ப நடுவராக | 43 (2012–2022) |
பெஒநாப நடுவராக | 13 (2014–2022) |
பெஇ20 நடுவராக | 16 (2012–2021) |
மூலம்: ஈஎஸ்பிஎன்கிரிக்கின்ஃபோ, 5 மே 2023 |
நடுவர் தொழில்
தொகுஆத்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து நடாத்திய 2015 துடுப்பாட்ட உலகக் கோப்பையின் போது போட்டிகளில் நிற்க தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது நடுவர்களில் சோயல் வில்சன் ஒருவர் ஆவர்.[3] அந்தத் தொடரின் போது ஆத்திரேலியாவில் நடந்த மூன்று போட்டிகளில் கள நடுவராக வில்சன் பணியாற்றினார். சில மாதங்களுக்குப் பிறகு, வில்சன் தனது முதல் தேர்வுப் போட்டியில் 21-25 சூலை 2015 இல் சிட்டகாங்கில் வங்காளதேசத்துக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையேயான போட்டியில் நடுவராக நின்றார் [4]
ஏப்ரல் 2019 இல், 2019 துடுப்பாட்ட உலகக் கோப்பையின் போது போட்டிகளில் நிற்கும் பதினாறு நடுவர்களில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டார்.[5][6] ஜூலை 2019 இல், இயன் கோல்டின் ஓய்வு மற்றும் சுந்தரம் ரவி விலக்கப்பட்டதைத் தொடர்ந்து வில்சன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்றட்டு நடுவர் குழுவுக்கு உயர்த்தப்பட்டார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Player profile: Joel Wilson from West Indies". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 28 February 2017.
- ↑ "ICC names two new umpires in elite panel for 2019-20". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 30 July 2019.
- ↑ "ICC announces match officials for ICC Cricket World Cup 2015". ICC Cricket. 2 December 2014. பார்க்கப்பட்ட நாள் 12 February 2015.
- ↑ "South Africa tour of Bangladesh, 1st Test: Bangladesh v South Africa at Chittagong, Jul 21-25, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ "Match officials for ICC Men's Cricket World Cup 2019 announced". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.
- ↑ "Umpire Ian Gould to retire after World Cup". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.
- ↑ "Michael Gough, Joel Wilson added to ICC Elite umpires panel; S Ravi omitted". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 July 2019.