ஜோலார்பேட்டை சந்திப்பு தொடருந்து நிலையம்
ஜோலார்பேட்டை சந்திப்பு (Jolarpettai Junction railway station)[1] (நிலையக் குறியீடு: JTJ) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். ஜோலார்பேட்டை சந்திப்பு சென்னை மத்திய தொடருந்து நிலையம்-பெங்களூரு நகரத் தொடருந்து பாதையில் பங்காரப்பேட்டை சந்திப்பு வழியாகச் செல்லும் பாதையில் உள்ளது. இதன் வழியாக கிருஷ்ணராஜபுரம் மற்றும் ஜோலார்பேட்டை-சொரனூர் வழியாகச் சேலம், ஈரோடு சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு, பாலக்காடு வழியாகக் கேரளா செல்லும் பாதையில் உள்ளது. எனவே சென்னையிலிருந்து மங்களூருக்கு சொரனூர், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் வழியாக இணைக்கிறது. திருச்சூர், எர்ணாகுளம் மற்றும் கொல்லம் வழியாகச் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் தொடருந்துகள் இதன் வழியே செல்கிறது.[2]
ஜோலாபேட்டை சந்திப்பு Jolarpettai Junction | |||||
---|---|---|---|---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |||||
ஜோலாபேட்டை சந்திப்பு | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | திருப்பத்தூர் – வாணியம்பாடி சாலை, ஜோலாபேட்டை சந்திப்பு, திருப்பத்தூர் மாவட்டம் இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 12°33′33″N 78°34′36″E / 12.5593°N 78.5767°E | ||||
ஏற்றம் | 417 மீட்டர்கள் (1,368 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | சென்னை மத்தி-பெங்களூர் நகரம்-பாதை ஜோலார்பேட்டை–சொரணூர்]] பாதை | ||||
நடைமேடை | 5 | ||||
கட்டமைப்பு | |||||
தரிப்பிடம் | உண்டு | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | JTJ | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
தடங்கள்கள்
தொகு- காட்பாடி சந்திப்பு- (வடக்கு) இரட்டை மின்மயமாக்கப்பட்ட அகலப்பாதை
- பங்காருபேட்டை சந்திப்பு (மேற்கு) இரட்டை மின்மயமாக்கப்பட்ட அகலப்பாதை
- சேலம் சந்திப்பு நோக்கி (தெற்கு) இரட்டை மின்மயமாக்கப்பட்ட அகலப்பாதை
தொடருந்துகள்
தொகுசுமார் 190 தொடருந்துகள் இங்கு நின்று சேலம் சந்திப்பு, பெங்களூர் நகரம் மற்றும் காட்பாடி சந்திப்புக்குச் செல்கின்றன.[3]
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
தொகுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [4][5][6][7]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சென்னை கோட்டத்தில் 17 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, ஜோலார்பேட்டை சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[8][9][10][11][12][13]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jolarpettai".
- ↑ "Line".
- ↑ "Trains".
- ↑ "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980.
- ↑ https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
- ↑ https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
- ↑ https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
- ↑ https://swarajyamag.com/infrastructure/amrit-bharat-station-scheme-60-suburban-railway-stations-to-get-facelift-in-tamil-nadu
- ↑ https://www.dtnext.in/news/city/upgradation-of-15-stations-in-chennai-division-under-amrit-bharat-station-scheme-762832
- ↑ https://sr.indianrailways.gov.in/cris//uploads/files/1705928319674-PRESS%20RELEASE%20-%20REDEVELOPMENT%20UNDER%20ABSS%20IN%20CHENNAI%20BEACH%20-%20CHENGALPATTU%20SECTION.pdf
- ↑ https://sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=14090&id=0,4,268
- ↑ https://tamil.oneindia.com/news/tamilnadu/tirupattur-jolarpettai-bjp-and-do-you-know-what-did-annamalai-say-about-dmk-government-in-jolarpet-m-579365.html
- ↑ https://tamil.news18.com/photogallery/lifestyle/travel-indian-railways-selected-1309-railway-stations-under-amrit-bharat-station-scheme-development-1074666.html