ஞானாலயா ஆய்வு நூலகம்

ஞானாலயா ஆய்வு நூலகம், புதுக்கோட்டைக்கருகிலுள்ள திருக்கோகர்ணம் என்ற ஊரில் உள்ள தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் நூலகமாகும் [1]. இது 1959 ஆம் ஆண்டு நூறு புத்தகங்களுடன் தொடங்கப்பட்டது. இந்நூலகத்தில் தற்சமயம் சுமார் 90,000 புத்தகங்கள் உள்ளன. இவை தவிர முக்கிய ஆவணங்களும், அரிய புகைப்படங்களும், பிரசுரமாகாத பிரபல அறிஞர்களின் கையெழுத்து கடிதங்களும் உள்ளன. 1920 முதல் 2010 வரை வெளியான தமிழ் இலக்கிய சிற்றிதழ்கள் மிக அதிக அளவில் உள்ளன.[2] இந்நூலகம் அரிய முதல் பதிப்புகளைக் கொண்டுள்ள இந்தியாவிலுள்ள பெரிய தனியார் நூலகங்களில் ஒன்றாகும்.[3] இந்த நூலகத்தை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அவரது மனைவி டோரதியுடன் இணைந்து நடத்தி வருகிறார்.[4]

ஞானாலயா ஆய்வு நூலகம்
புத்தகம் பூத்த பொய்கை பவள விழா மலர்
நெஞ்சையள்ளும் ஞானாலயா

வரலாறு தொகு

ஞானாலயாவின் தந்தையார் பாதுகாத்து வைத்திருக்கும் படி கொடுக்கப்பட்ட 100 நூற்களுடன் இந்த நூலகம் தொடங்கியது. அரிய நூல்களின் மதிப்பை உணர்ந்த ஞானாலயா பல இடங்களுக்குச் சென்று அரிய நூல்களைச் சேகரித்தார். இவரது மனைவி டோரதியும் இணைந்து நூற் சேகரிப்பில் ஈடுபட்டனர்.[4]

அமைப்பு தொகு

இரு தளங்களில் இந்நூலகம் செயல்பட்டு வருகிறது. இரண்டாவது தளத்தில் அறிஞர்கள், ஆய்வாளர்கள் சந்திப்பிற்கான கூடம் உள்ளது. நூலகத்தில் உள்ள நூல்களுக்கு எண்ணிடப்பட்டு ஒவ்வொரு அலமாரியிலும் அந்த பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. பட்டியலை வைத்து, நூலக உதவியாளர் உதவியுடன் தேவைப்படும் நூலை எடுத்துப் படிக்கும் வசதி உள்ளது.

குறிப்பிடத்தக்கவை தொகு

கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க அரிய நூல்களும், இதழ்களும் இந்நூலகத்தில் உள்ளன.[5] 100 வருடங்களுக்கு முந்தைய 400 நூல்கள் இங்கு உள்ளன.[6][7] 1578-இல் தமிழில் அச்சான முதல் நூலான தம்பிரான் வணக்கம் செராக்ஸ் பிரதி தமிழ்நாட்டில் இரண்டே இடங்களில் உள்ளன. அவற்றில் ஒன்று இந்நூலகம் ஆகும்.[6]

அரிய நூல்கள் தொகு

அரிய இதழ்கள் தொகு

அரிய தொகுப்புகள் தொகு

  • இந்திய அரசின் பதிப்புப்பிரிவு வெளியிட்ட 55,000 பக்கங்கள் கொண்ட 100 தொகுதிகள் அடங்கிய மகாத்மா காந்தியைப் பற்றிய நூல்.[5]
  • பாரதியாரின் முதல் பாடல் தொகுதி விவேக பானு (1904)

அரிய கடிதங்கள் தொகு

முதல் பதிப்புகள் தொகு

தமிழில் 70,000 நூல்களும், ஆங்கிலத்தில் 15,000 நூல்களும் உள்ள இந்நூலகத்தில் சென்ற நூற்றாண்டில் பதிப்பிக்கப்பட்ட முக்கியமான நூல்களின் அரிய முதல் பதிப்புகளைக் காணமுடியும். அவற்றில் கீழ்க்கண்ட நூல்கள் அடங்கும்.[6]

  • அண்ணாதுரை எழுதி அவரது பரிமளம் பதிப்பகம் வெளியிட்ட, இங்கிலாந்து புரட்சியைப் பற்றிப் பேசும் 'மக்கள் கரமும் மன்னன் சிரமும்' (1968)
  • பெரியார் அணிந்துரை, வ.ரா சிறப்புரையுடன் கூடிய பாரதிதாசன் கவிதைகள் (1938)

சிறப்புகள் தொகு

  • வெளிநாடுகளிலிருந்தும் ஆய்வாளர்கள் இங்கு வந்து, தங்கி ஆய்வு மேற்கொள்ளும் வசதி உள்ளது.
  • 500க்கும் அதிகமான தமிழ் நூல்கள் மறு பதிப்பு காண மூல நூல்கள் இங்கிருந்து பெறப்பட்டன.
  • இந்நூலக உதவியுடன் பாரதியார், பாரதிதாசனின் எழுத்துப்படைப்புகள் (அது வரை வெளிவராதவை) வெளிக்கொணரப்பட்டன.
  • 100க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.[8]

புத்தகம் பூத்த பொய்கை தொகு

புத்தகம் பூத்த பொய்கை [9] என்ற தலைப்பிலான நூல் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி டோரதி இணையரின் பவள விழா மலராகும். இந்நூலில் ஞானாலயா நூலகம் உருவான வரலாறு, அந்நூலகத்தைப் பற்றி முக்கிய பிரமுகர்களும், ஊடகங்களும் வெளியிட்ட செய்திகள், இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் சேகரிக்கப்பட்ட விதம் உள்ளிட்ட அனைத்தையும் பற்றி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பிறரால் எழுதப்பட்ட கட்டுரைகளையும், பல துறையைச் சார்ந்த அறிஞர்கள் இலக்கியம், வரலாறு, சமயம், கலை, கல்வெட்டு உள்ளிட்ட தலைப்புகளில் எழுதிய கட்டுரைகளையும் கொண்டு அமைந்துள்ளது.[10]

நெஞ்சையள்ளும் ஞானாலயா தொகு

நெஞ்சையள்ளும் ஞானாலயா [11] என்ற நூலில் இந்நூலகத்திற்கு வந்து பாராட்டியவர்களின் கருத்துக்களைக் கொண்டு அமைந்துள்ளது. பிரபலமான எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தந்துள்ள பதிவுகளைக் காணும்போது இந்நூலகத்தின் இன்றியமையாமையை உணரமுடிகிறது.[12]

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. எதிரொலி விசுவநாதன், அறிவுச்சோலை ஞானாலயா ஆய்வு நூலகம் (நூல்), ஞானாலயா ஆய்வு நூலக மேம்பாட்டுக்குழு, புதுக்கோட்டை, 2007, பக்.17-18
  2. 2.0 2.1 Bonding with books, The Hindu, Metroplus, Trichy, 9.10.2010
  3. The book collector, The Hindu, 22.2.2013
  4. 4.0 4.1 எதிரொலி விசுவநாதன். (2007). அறிவுச்சோலை ஞானாலயா ஆய்வு நூலகம். புதுக்கோட்டை: ஞானாலயா ஆய்வுநூலக மேம்பாட்டுக்குழு.
  5. 5.0 5.1 புதுக்கோட்டையில் 40,000 புத்தகங்களுடன் தலைமை ஆசிரியர் நடத்தும் நூலகம், மாலை மலர், 15.5.2003
  6. 6.0 6.1 6.2 கே.சுரேஷ், புதுக்கோட்டையில் ஒரு பொக்கிஷம், தி இந்து, சித்திரை மலர் 2015
  7. எதிரொலி விசுவநாதன், அறிவுச்சோலை ஞானாலயா ஆய்வு நூலகம், ஞானாலயா ஆய்வு நூலக மேம்பாட்டுக்குழு, புதுக்கோட்டை, 2007
  8. விளையாட்டுக் களஞ்சியம், பிப்ரவரி 2013
  9. தமிழ் இலெமுரியா
  10. புத்தகம் பூத்த பொய்கை, ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி டோரதி இணையர், பவள விழா மலர், 16.8.2015
  11. தனிநபரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலும் என்பதற்கு ஞானாலயா நூலகம் சான்று, தினமணி, ஆகஸ்டு 17, 2015
  12. நெஞ்சையள்ளும் ஞானாலயா, தொகுப்பும் பதிப்பும் வைகறை, பவள விழாக்குழு, புதுக்கோட்டை, 2015

மேலும் பார்க்க தொகு

  • அக்கினி, ஒரு தேடலில் பிறந்தது நூலகம், மக்கள் ஓசை, ஜனவரி 29-பிப்ரவரி 4, 2004
  • அரவிந்த் சுவாமிநாதன் சந்திப்பு, ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, தென்றல், செப்டம்பர் 2007
  • ஊரகாளி, சாதனை மனிதர்கள், இன்னொரு உ.வே.சா. பல்சுவை காவியம், மார்ச் 2015
  • எதிரொலி விசுவநாதன். (2007). அறிவுச்சோலை ஞானாலயா ஆய்வு நூலகம். புதுக்கோட்டை: ஞானாலயா ஆய்வுநூலக மேம்பாட்டுக்குழு.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானாலயா_ஆய்வு_நூலகம்&oldid=3770183" இலிருந்து மீள்விக்கப்பட்டது