டமால் டுமீல்

டமால் டுமீல் (Damaal Dumeel) 2014இல் வெளிவந்த தமிழ் திரைப்படம். இதை இயக்கியவர் சிறீ. இப் படம் சி. ஜெ. ஜெயக்குமாரால் தயாரிக்கப்பட்டது.[1] இதில் வைபவ் மற்றும் ரம்யா நம்பீசன் முக்கிய கதாபாத்திரத்திலும், சாயாஜி சிண்டே மற்றும் கோட்டா சீனிவாச ராவ் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இத் திரைப்படம் ஏப்ரல் 18, 2014இல் வெளியிடப்பட்டு மக்களிடையே நேர்மறையான வரவேற்பை பெற்றது.[2] இப் படம் "தனா தன்" என்கிற பெயரில் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு 2016இல் வெளிவந்தது.[3]

டமால் டுமீல்
இயக்கம்சிறீ
தயாரிப்புசி. ஜெ. ஜெயக்குமார்
இசைதமன் (இசையமைப்பாளர்)
நடிப்பு
ஒளிப்பதிவுஎட்வின் சாகே
படத்தொகுப்புபரமேஷ் கிருஷ்ணா
கலையகம்கேமியோ பிலிம்ஸ் இந்தியா
வெளியீடு18 ஏப்ரல் 2014 (2014-04-18)
ஓட்டம்118 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மணிகண்டன் (வைபவ்) தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி புரியும் ஒரு இளைஞன். பணம் அவனது வாழ்க்கையில் மிக முக்கியமானதொன்றாக இருக்கிறது. தனது சகோதரியின் திருமணம் மற்றும் தன் தாயை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்வதே அவனது கனவாக இருக்கின்றது. அவனுக்கு மீரா (ரம்யா நம்பீசன்), என்கிற காதலி இருக்கிறாள். இவர்களுடன் தனது வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் என எண்ணுகிறான். திடீரென்று, மணிகண்டனுக்கு வேலை பறிபோனதால் அவனது வாழ்க்கை தலைகீழாக மாறியது. ஒரு நாள், தவறுதலாக ரூபாய் 5 கோடி அடங்கிய பணப்பெட்டி மணிகண்டன் வீட்டிற்கு வந்தது. இது இளவரசு (கோட்டா சீனிவாச ராவ்) மற்றும் காமாட்சி சுந்தரத்திற்கும் (சாயாஜி சிண்டே) இடையே நடந்த பங்குப்பிரிவில் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியாகும். மணிகண்டன் பணத்தை எடுத்துக்கொண்டு வெளிநாட்டிற்கு தப்பிச்சென்று புது வாழ்க்கையை தொடர எண்ணினான். ஆனால் புலியின் வாலை பிடித்த மாதிரி தான் வசமாக கயவர்களிடம் அகப்பட்டுக் கொண்டதை அறிந்தான். பிறகு நடக்கும் சம்பவங்கள் கதையின் முடிவாகிறது.[4]

நடிப்பு

தொகு

வெளியீடு

தொகு

இத் திரைப்படம் ஏப்ரல் 18, 2014இல் வெளியிடப்பட்டது. சிபி தனது விமர்சனத்தில் "டமால் டுமீல்" சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் என்றும் அறிமுக இயக்குநர் சிறீ விறுவிறுப்பான காட்சிகளை திறம்பட செய்திருக்கலாம் என்றும் எழுதியுள்ளார்.[5] M Suganth of தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் நிருபரான எம். சுகந்த் இப்ப்டத்திற்கு 5க்கு 3 மதிப்பெண்கள் வழங்கியதோடு அறிமுக இயக்குநரின் நல்ல முயற்சி என்று குறிப்பிட்டுள்ளார்.[6] மேலும் "இந்தோ - ஆசியன் நியூஸ் சர்வீஸ்" இப் படத்திற்கு 5க்கு 3 என்கிற தகுதியும் பொழுதுபோக்கு நிறைந்த மசாலா திரைப்படம் என்று கூறியுள்ளது.[7]

இப் படத்திற்கு இசை அமைத்தவர் தமன் (இசையமைப்பாளர்).

எண்-List
# பாடல்பாடியவர்கள் நீளம்
1. "டமால் டுமீல்" (வாத்தியம்)  1:31
2. "டுமீல்"  உஷா உதூப் 4:01
3. "ஓடி ஓடி"  சங்கர் மகாதேவன் 3:45
4. "போகாதே போகாதே"  ரம்யா நம்பீசன் 4:20
5. "சகா சகா"  நவீன் மாதவ், ஆண்ட்ரியா ஜெரெமையா 4:22
மொத்த நீளம்:
17:59

மேற்கோள்கள்

தொகு
  1. Ramesh, Deepika (30 November 2013). "Shree's debut is a black comedy". தி டெக்கன் குரோனிக்கள். பார்க்கப்பட்ட நாள் 1 January 2014.
  2. "'Damaal Dumeel' Review Roundup: Enjoyable Fun Ride; Worth a Watch". Ibtimes.co.in. 2014-04-18. பார்க்கப்பட்ட நாள் 2014-04-27.
  3. "Dhana Dhan Telugu Movie Review". 123telugu.com. பார்க்கப்பட்ட நாள் 29 August 2017.
  4. "Damaal Dumeel (2014)". IMDb.com. பார்க்கப்பட்ட நாள் 29 August 2017.
  5. "Movie Review : Damaal Dumeel". Sify.com. Archived from the original on 2014-04-18. பார்க்கப்பட்ட நாள் 2014-04-27.
  6. "Damaal Dumeel movie review: Wallpaper, Story, Trailer at Times of India". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2014-04-27.
  7. "Movie review: Damaal Dumeel is a reasonably good dark comedy". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 2014-04-19 இம் மூலத்தில் இருந்து 26 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140426194814/http://www.hindustantimes.com/entertainment/reviews/movie-review-damaal-dumeel-is-a-reasonably-good-dark-comedy/article1-1209922.aspx. பார்த்த நாள்: 2014-04-27. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டமால்_டுமீல்&oldid=4146439" இலிருந்து மீள்விக்கப்பட்டது