டாட்டா கிளிக்
டாட்டா கிளிக் (Tata CLiQ) என்பது இந்தியாவின் மும்பையில் உள்ள ஓர் இந்திய இணைய வணிக நிறுவனமாகும்.[1] இது டாட்டா குழுமத்தின் டாட்டா யுனிஸ்டோர் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமானது.[2] டாட்டா கிளிக் ஒய்யாரப் பொருட்கள், பாதணிகள் மற்றும் துணைப்பொருட்கள் போன்ற பொருட்களின் வணிகத்தில் ஈடுபடுகிறது/ டாட்டா குழுமத்தின் இணைய வணிகத் தளமான டாட்டா கிளிக் ஆனது ஒரு முனைமம மற்றும் ஆடம்பர ஒய்யார மற்றும் வாழ்முறை பொருட்களுக்கான, டாட்டா கிளிக் ஆடம்பரம் எனும் சேவையினை வழங்குகிறது. இதன் மூலம் பலவகையான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பரந்த அளவிலான ஆடைகள் மற்றும் ஆபரணங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
நிறுவன வகை | தனியார் நிறுவனம் |
---|---|
வலைத்தள வகை | |
கிடைக்கும் மொழி(கள்) | ஆங்கிலம், இந்தி |
தோற்றுவிப்பு | 27 மே 2016 |
சேவைத்தளங்கள் | இந்தியா |
துறை |
|
சேவை | இணையவழி கொள்முதல் |
வணிக நோக்கம் | ஆம் |
பதிவு செய்தல் | தேவை |
தற்போதைய நிலை | செயலில் |
உரலி | www |
வரலாறு
தொகுடாட்டா கிளிக் 27 மே 2016 அன்று தொடங்கப்பட்டது.[3] இது பன்னாட்டு ஆடம்பர தரப் பொருட்களை விற்க ஜெனிசிஸ் லக்ஸரி பேஷனுடன் இணைந்தது.[4] மேலும் எண்ணிம சந்தைக்காக அடோபி சிஸ்டமுடன் சேர்ந்தது.[5] டாட்டா கிளிக் திசம்பர் 2016-ல் டாட்டா கிளிக் லக்சுரி, எனும் ஆடம்பர அலங்கார மற்றும் வாழ்க்கை முறை பொருட்களுக்கான சேவையினை அறிமுகப்படுத்தியது.[6][7] 2022ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், டாட்டா கிளிக் இதன் நுகர்வோர் மின்னணு வணிகத்திலிருந்து வெளியேறியது. இந்த பிரிவு டாட்டாவின் முதன்மை நுகர்வோர் மின்னணு சில்லறை விற்பனைச் சங்கிலியான குரோமாவுடன் ஒருங்கிணைக்கப்பட்டது.[8]
வியாபார மாதிரி
தொகுடாட்டா கிளிக் ஆம்னி-அலை சந்தை மாதிரியைக் கொண்டுள்ளது.
டாட்டா கிளிக் என்பது டாட்டா குழுமத்தின் முதன்மையான எண்ணிம வர்த்தக முயற்சியாகும். இது இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய கூட்டு நிறுவனமாகும். இதன் ஆண்டு வருமானம் சுமார் US$100 பில்லியன் ஆகும்.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Mukherjee, Writankar (2018-03-28). "Tata CLiQ takes on bigger rivals with big discounts". economictimes.indiatimes.com. India: தி எகனாமிக் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 2019-04-26.
- ↑ "Tata Unistore to launch its e-commerce platform, Tata CLiQ". www.tata.com. India: Tata. பார்க்கப்பட்ட நாள் 2019-04-26.
- ↑ "Tata Enters E-Commerce Market With Apparel, Electronics Site 'Cliq'". gadgets.ndtv.com. என்டிடிவி Gadgets. பார்க்கப்பட்ட நாள் 2019-04-26.
- ↑ Chaturvedi, Anumeha (2016-05-20). "Tata CLiQ ties up with Genesis Luxury, to bring international brands for online portal". economictimes.indiatimes.com. India: தி எகனாமிக் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 2019-04-26.
- ↑ PTI. "Tata Cliq, Adobe partner for enhancing digital shopping experience". thehindubusinessline.com. India: பிசினஸ் லைன். பார்க்கப்பட்ட நாள் 2019-04-26.
- ↑ "Tata CLiQ launches Tata CLiQ Luxury". economictimes.indiatimes.com. India: தி எகனாமிக் டைம்ஸ். 2016-12-21. பார்க்கப்பட்ட நாள் 2019-04-26.
- ↑ "Tata Cliq History".
- ↑ "Tata Cliq exits electronics business".