டூசுன் மொழி
டூசுன் மொழி, (மலாய்: Bahasa Dusun; ஆங்கிலம்: Central Dusun அல்லது Dusun Language அல்லது Bunduliwan; டூசுன் மொழி: Boros Dusun); என்பது மலேசியா, சபா மாநிலத்தில் உள்ள டூசுன் மக்களின் (Dusun People) பேச்சு வழக்கினைச் சார்ந்த மொழியாகும். அத்துடன், இந்த மொழியைச் சபா மாநிலத்தைச் சேர்ந்த கடசான் மக்களும் (Kadazan People) பயன்படுத்துகின்றனர்.[3]
டூசுன் மொழி Boros Dusun Bunduliwan Dusun Language | |
---|---|
நாடு(கள்) | மலேசியா புரூணை |
பிராந்தியம் | சபா, சரவாக், லபுவான் |
இனம் | டூசுன் மக்கள், கடசான் மக்கள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தெரியவில்லை (1,40,000 டூசுன் மொழி காட்டடப்பட்டது: 1991)[1] 1,00,000 மற்ற பேச்சுவழக்கு இன மக்கள் (1981–2000)[1] |
ஆஸ்திரோனீசிய
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | ஐ.எசு.ஓ 639-3 |
மொழிக் குறிப்பு | cent2100[2] |
இந்த பேச்சுவழக்கு, குரோக்கர் மலைத்தொடரின் (Crocker Range) புண்டு (Bundu) மற்றும் லிவான் (Liwan) பள்ளத்தாக்குகளில் உள்ள மக்களாலும் அதிகமாய்ப் பேசப்படுகின்றது. ரானாவ் (Ranau), தம்புனான் (Tambunan), கெனிங்காவ் (Keningau) மாவட்டங்கள்; புண்டு-லிவான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் உள்ளன.[4]
சபாவின் பூர்வீக மக்களில் முதன்மை வகிப்பவர்கள் கடசான் மக்கள், டூசுன் மக்கள் ஆகும். இவர்களுக்கு அடுத்த நிலையில் பஜாவு மக்கள், மூருட் மக்கள் உள்ளனர்.
டூசுன் மொழி வரிவடிவம்
தொகுடூசுன் மொழி 22 இலத்தீன் (Latin Alphabet) எழுத்துக்களைப் பயன்படுத்தி எழுதப்படுகிறது:
- A B D G H I K L M N O P R S T U V W Y Z
டூசுன் மொழி எழுத்துக்கள் "பிமாடோ" (Pimato) என்று அழைக்கப் படுகின்றன.
சொல்லகராதி
தொகுதமிழ் | ஆங்கிலம் | டுசுன் |
---|---|---|
ஒன்று | one | iso |
இரண்டு | two | duo |
மூன்று | three | tolu |
நான்கு | four | apat |
ஐந்து | five | limo |
ஆறு | six | onom |
ஏழு | seven | turu |
எட்டு | eight | walu |
ஒன்பது | nine | siam |
பத்து | ten | hopod |
நூறு | hundred | hatus |
ஆயிரம் | thousand | soriong |
மேற்கோள்
தொகு- ↑ 1.0 1.1 639-3 டூசுன் மொழி
Boros Dusun
Bunduliwan
Dusun Language at Ethnologue (18th ed., 2015) - ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Central Dusun". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ "Official Language & Dialects". Kadazandusun Cultural Association Sabah (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 June 2021.
- ↑ Lasimbang, Rita; Kinajil, Trixie (2004). "Building Terminology in the Kadazandusun Language" (in en). Current Issues in Language Planning 5 (2): 131–141. doi:10.1080/13683500408668253.
- ↑ Price, Daniel Charles (2007). Bundu Dusun Sketch Grammar (in ஆங்கிலம் and Central Dusun). Crawley: University of Western Australia.
வெளி இணைப்புகள்
தொகுமேலும் காண்க
தொகு