டென்ச்சு மீன்
டெஞ்சு மீன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | சைப்ரினிபார்மிசு
|
குடும்பம்: | சைப்ரினிடே
|
பேரினம்: | தின்கா குவெயர், 1816
|
இனம்: | தி. தின்கா
|
இருசொற் பெயரீடு | |
தின்கா தின்கா (லின்னயேசு, 1758) |
டென்ச்சு (tench) அல்லது மருத்துவ மீன் (doctor fish அல்லது தின்கா தின்கா) என்றழைக்கப்படும் நன்னீர் மற்றும் உவர் நீர்-வாழ் மீன்கள் பொதுவாக யூரேசியா கண்டம் முழுவதிலும் காணப்படுகின்ற சைப்ரினிடே குடும்பத்தைச் சார்ந்த மீன்வகையாகும். இவ்வகை மீன்கள் மேற்கு ஐரோப்பாவிலுள்ள பிரித்தானியத் தீவுகள் முதல் கிழக்கு ஆசியாவிலுள்ள ஒபு மற்றும் ஏநிசை ஆறுகள் வரை பரவலாகக் காணப்படுகின்றன.[2] இது பைக்கால் ஏரியிலும் காணப்படுகிறது. இம்மீன்கள் பொதுவாக மெல்ல ஓடும் நன்னீர் ஓடைகளிலும், குறிப்பாக ஏரிகள் மற்றும் தாழ்நில ஆறுகளிலும் வாழ்கின்றன.[3]
வாழிடச் சூழல்
தொகுடென்ச்சு மீன்கள் களிமண் கலந்த, ஏராளமானத் தாவரங்களைத் தன்னகத்தே கொண்ட தேங்கிய நீர்நிலைகளில் மிக அதிக அளவில் வாழ்கின்றன.[4] இவ்வகை மீன் இனம் தெளிந்த நீர்நிலைகளில் அரிதாகவே காணப்படுகின்றன. வேகமாகப் பாய்ந்து செல்லும் நீரோடைகளில் இவை காணப்படுவதில்லை. கெண்டை மீன்கள் வாழ முடியாத சூழல் நிலவும்,[4] ஆக்சிசனின் அளவு மிகவும் குறைந்துள்ள நீரிலும்[4][5] இவ்வகை மீன்கள் தாக்குப் பிடித்து வாழ்கின்றன.
இம்மீன்கள் பெரும்பாலும் இரவில் இரை தேடும் அசைவப் பிராணிகளாகும். தாவரங்கள் நிறைந்த நீர்நிலைகளின் அடியில் வாழ்கின்ற சிரோநோமிட்சு,[6] நத்தைகள் மற்றும் மட்டிகள் ஆகிய உயிரினங்களை உணவாக உட்கொள்கின்றன. இவை வழக்கமாக ஆழமற்ற நீர்நிலைகளில் வளரும் நீர்த்தாவரங்களின் மீது ஒட்டிக் கொள்ளுமாறு பச்சை நிற முட்டைகளை இட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.[2] வழக்கமாக கோடைகாலத்தில் நடைபெறுகின்ற இந்த இனப்பெருக்கத்தின்போது[3] இம்மீன்கள் 3,00,000 முட்டைகள் வரை இடுகின்றன.[7] மீன்குஞ்சுகள் விரைவான வளர்ச்சி பெற்று ஓராண்டிற்குள் 0.11கி.கி. எடையினைப் பெற்றுவிடுகின்றன.
உருவ அமைப்பு
தொகுடென்ச்சு மீன் கட்டுக்கோப்பான, கெண்டை மீனைப் போன்ற உடல் வடிவத்தையும் மேற்புறத்தில் அடர் ஆலிவு நிறத் தோலும் கீழ் பகுதியில் பொன்னிறத் தோலும் கொண்டிருக்கிறது. இதன் வால் துடுப்பானது சதுரமாகவும் மற்றத் துடுப்புகள் வளைவான வடிவத்துடனும் காணப்படுகின்றன. இதன் வாய்ப் பகுதி குறுகலாகவும் அதன் இருபுறமும் சிறிய தொடுவுணர் நீட்சிகளும் உள்ளன. இந்த மீனின் மாதிரிகள் மிகச் சிறியதாக இருந்த போதிலும் இது 70செ.மீ நீளம் வரை வளரக் கூடிய்தாகும். 2001ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிடிக்கப்பட்ட ஒரு டென்ச்சு மீன் 15 பவுண்டு 3 அவுன்சு (6.89 கி.கி.) எடையுடன் இருந்தது. இம்மீன் சிறிய சிவந்த ஆரஞ்சு நிறக் கண்களைக் கொண்டுள்ளது. ஆண் மீன்களுடன் ஒப்பிடும்போது பெண் மீன்கள் வெளிப்புறம் குவிந்த உடல் தோற்றம் கொண்டவையாக உள்ளன. ஆண் மீன்கள் தடித்த தட்டையான கீழ்ப்புறத் துடுப்புகளைக் கொண்டுள்ளன. பொதுவாக இவ்வகையில் ஆண்மீன்கள் பெண்மீன்களைக் காட்டிலும் உருவத்தில் சிறியவை. ஆண்மீன்களின் கீழ்த் துடுப்புகள் நன்கு வளைந்த வடிவத்துடனும் அத்துடுப்புகளின் அடிப் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் தசைகளையும் கொண்டுள்ளன. இந்த தசைகள் பெண்மீன்களிடம் காணப்படுவதில்லை. இம்மீன்கள் ஈல்மீனைப் போன்று வழவழப்பான தடித்த தோலை கொண்டுள்ளன. நோயுற்ற பிற மீன்கள் இம்மீனை உரசுகின்றபோது குணமடைகின்றன என நாட்டுப்புறக் கதை ஒன்று கூறுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Freyhof, J.; Kottelat, M. (2008). "Tinca downloaded = January 25, 2010". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்.
- ↑ 2.0 2.1 "Tinca tinca". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. 5 2007 version. N.p.: FishBase, 2007.
- ↑ 3.0 3.1 B. Whitton (1982). Rivers, Lakes and Marshes p 163. Hodder & Staughton, London.
- ↑ 4.0 4.1 4.2 A. F. Magri MacMahon (1946). Fishlore, pp 156-158. Pelican Books.
- ↑ Bronmark, C. (1994). "Effects of Tench and Perch on Interactions in a Freshwater, Benthic Food Chain". Ecology 75 (6): 1818. doi:10.2307/1939640. https://archive.org/details/sim_ecology_1994-09_75_6/page/1818.
- ↑ http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1095-8649.1996.tb01481.x/abstract
- ↑ A. Lawrence Wells (date unknown). Observer Book of Freshwater Fishes, pp 101-105. Frederick Warne & Co.