தென்னிசு இரிட்சி

(டென்னிசு ரிச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தென்னிசு மெக்காலிசிட்டர் இரிட்ச்சி (டென்னிஸ் ரிட்ச்சி, Dennis MacAlistair Ritchie, செப்டம்பர் 9, 1941அக்டோபர் 08, 2011)[1][2][3][4][5] என்பவர் அமெரிக்க கணினி அறிவியலாளர் ஆவார். இவர் சி நிரலாக்க மொழியை உருவாக்கி வளர்த்தெடுத்தார், ஏனைய நிரலாக்க மொழிகளில் தாக்கங்களை ஏற்படுத்தினார், கென் தாம்ப்சன், பிறையன் கேர்னிகன், டக்லசு மெக்கில்ராய், ஜோ ஒசானா போன்ற பெல் ஆய்வுகூட பொறியாளர்களுடன் இணைந்து யுனிக்சு இயங்குதளத்தை உருவாக்கினார். இதன் பயனாக பெரும் புகழ் ஈட்டினார். 1983 ஆம் ஆண்டில் கணிப்பொறி குழுமம் (கபொகு (ACM)) வழங்கும் டூரிங் விருதும், 1990 இல் ஐஇஇஇ வழங்கும் ஆமிங் பதக்கமும் (Hamming Medal), 1998 ஆம் ஆண்டில் தொழில்நுட்பத்துக்கான அமெரிக்காவின் உயர் தேசிய விருதும் ஆகிய விருதுகள் இவருக்குக் கிடைத்தன. இரிட்சி பெல் ஆய்வுகூடங்களில் இலூசெண்ட் டெக்னாலாச்சீசு ஆய்வுகூடத்தின் தலைவராகப் பணியாற்றி 2007 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

தென்னிசு மெக்காலிசிட்டர் இரிட்ச்சி
Dennis MacAlistair Ritchie
பிறப்பு(1941-09-09)செப்டம்பர் 9, 1941
புரொங்க்ஃசுவில், நியூயோர்க், ஐஅ
இறப்புஅக்டோபர் 8, 2011(2011-10-08) (அகவை 70)
பெர்க்லி ஃகைட்ஃசு, நியூ செர்சி, ஐஅ
துறைகணினி அறிவியல்
பணியிடங்கள்லூசெண்ட் டெக்னாலாச்சீசு
பெல் ஆய்வுகூடங்கள்
கல்வி கற்ற இடங்கள்ஃகார்வர்டு பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஆல்ட்ரான்
பி
BCPL
சி
மல்ட்டிக்ஸ்
யுனிக்சு
விருதுகள்டூரிங் விருது
தொழில்நுட்பத்துக்கான தேசிய விருது

மறைவு

தொகு

நீண்டகாலமாக டெனிசு இரிட்சி ஆண்மைச்சுரப்பிப் புற்றுநோய், மற்றும் இதயநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். நியூ ஜெர்சியில் பேர்க்லி ஹைட்சில் தனிமையில் வந்தார். 2011 அக்டோபர் 12 இல் இவர் தனது வீட்டில் காலமானார்[1].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Lohr, Steve (அக்டோபர் 12, 2011), "Dennis Ritchie, Programming Trailblazer, Dies at 70", நியூயார்க் டைம்சு, பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 13, 2011, Dennis M. Ritchie, who helped shape the modern digital era by creating software tools that power things as diverse as search engines like Google and smartphones, was found dead on Wednesday at his home in Berkeley Heights, N.J. He was 70. Mr. Ritchie, who lived alone, was in frail health in recent years after treatment for prostate cancer and heart disease, said his brother Bill.
  2. "Unix creator Dennis Ritchie dies aged 70". பிபிசி. 2011-10-13. பார்க்கப்பட்ட நாள் 2011-10-13.
  3. "Unix and C creator Dennis Ritchie dies". Computerworld UK. 2011-10-13. http://www.computerworlduk.com/news/operating-systems/3310655/unix-and-c-creator-dennis-ritchie-dies/. 
  4. "Dennis Ritchie obituary", The Guardian, அக்டோபர் 13, 2011, பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 13, 2011{{citation}}: CS1 maint: date and year (link)
  5. BoingBoing - Dennis Ritchie, 1941-2011: Computer scientist, Unix co-creator, C programming language co-inventor

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னிசு_இரிட்சி&oldid=3435794" இலிருந்து மீள்விக்கப்பட்டது