டையைசோபியூட்டைல் தாலேட்டு
டையைசோபியூட்டைல் தாலேட்டு (Diisobutyl phthalate) என்பது C16H22O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதனுடைய கட்டமைப்பு வாய்ப்பாடு C6H4(COOCH2CH(CH3)2)2 என்று எழுதப்படுகிறது. ஐசோபியூட்டனாலுடன் தாலிக் நீரிலியைச் சேர்த்து எசுத்தராக்கல் வினையின் மூலமாக டையைசோபியூட்டைல் தாலேட்டு தயாரிக்கப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பிசு(2-மெத்தில்புரோப்பைல்) பென்சீன்-1,2-டைகார்பாக்சிலேட்டு | |
வேறு பெயர்கள்
தாலிக் அமிலத்தின் டையைசோபியூட்டல் எசுத்தர்
1,2-பென்சீன்டைகார்பாக்சிலிக் அமில பிசு(2-மெத்தில்புரோப்பைல் எசுத்தர் டை(ஐசோபியூட்டைல்) 1,2-பென்சீன் டைகார்பாக்சிலேட்டு | |
இனங்காட்டிகள் | |
84-69-5 | |
ChEBI | CHEBI:79053 |
ChemSpider | 6524 |
EC number | 201-553-2 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C15205 |
பப்கெம் | 6782 |
வே.ந.வி.ப எண் | TI1225000 |
| |
பண்புகள் | |
C16H22O4 | |
வாய்ப்பாட்டு எடை | 278.35 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற பாகுத்தன்மை நீர்மம் |
அடர்த்தி | 1.038 கி/செ.மீ3 |
உருகுநிலை | −37 °C (−35 °F; 236 K) |
கொதிநிலை | 320 °C (608 °F; 593 K) |
20 °செல்சியசில் 1 மி.கி/லி | |
மட. P | 4.11 |
ஆவியமுக்கம் | 20 பாகை செல்சியசில் 0.01 பாசுக்கல் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீங்கானது (Xn), சுற்றுச்சூழலுக்கு அபாயமானது (N) |
R-சொற்றொடர்கள் | R50/53-R62-R63 |
S-சொற்றொடர்கள் | S36/37-S61 |
தீப்பற்றும் வெப்பநிலை | 185 °C (365 °F; 458 K) c.c. |
Autoignition
temperature |
400 °C (752 °F; 673 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நெகிழியாக்கியாகப் பயன்படுத்தப்படும் இந்த தாலேட்டு சேர்மம் நெடியற்றதாகவும் வெப்பம் மற்றும் ஒளியில் நிலைப்புத்தன்மையோடும் காணப்படுகிறது. செல்லுலோசு நைட்ரேட்டுக்கான மிகக் குறைந்த விலை நெகிழியாக்கி இதுவேயாகும். தொடர்புடைய டைபியூட்டைல் தாலேட்டுடன் ஒப்பிடுகையில் இது குறைவான அடர்த்தியையும் உருகும் புள்ளியையும் பெற்றுள்ளது. மற்ற பண்புகளில் இது டைபியூட்டைல் தாலேட்டை ஒத்திருக்கிறது. பெரும்பாலும் டைபியூட்டைல் தாலேட்டுக்கு மாற்றாக டையைசோபியூட்டைல் தாலேட்டு பயன்படுத்தப்படுகிறது. 20 பாகை செல்சியசு வெப்பநிலையில் இதன் ஒளிவிலகல் எண் 1.488–1.492 ஆகும்.
உடல்நலம்
தொகு1999 முதல் 2008 வரையிலான காலத்தில் டையைசோபியூட்டைல் தாலேட்டின் வளர்சிதை மாற்றத்தில் மோனோ ஐசோபியூட்டைல் தாலேட்டின் அடர்த்தி அமெரிக்கர்களின் சிறுநீரில் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. [1]
தைவான் நாட்டில் சீனாவைச் சேர்ந்த எபோ இயற்கை விளைபொருள்கள் நிறுவனம் தயாரித்த பொருள்களில் டையைசோபியூட்டல் தாலேட்டு கலந்த இஞ்சி கண்டறியப்பட்டது. இம்மாசுபட்ட இஞ்சி தூளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 80000 ஊட்டச்சத்து மருந்து பொருள்களை 2011 ஆம் ஆண்டு தைவான் நாட்டின் பொது சுகாதாரத் துறை தடை செய்தது. [2] இவற்றைத் தவிர தூள் வடிவத்தில் தயாரிக்கப்பட்ட சோயா பீன்சு, ஆலிவ் இலை வடிநீர் போன்றவற்றிலும் டையைசோபியூட்டல் தாலேட்டு மற்றும் டைபியூட்டைல் தாலேட்டு சேர்மங்களால் மாசுபட்டிருந்ததும் கண்டறியப்பட்டன. [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Center for Disease Control Fourth National Report on Human Exposure to Environmental Chemicals, Updated Tables, February 2011 CDC Exposure Report.
- ↑ News, Taiwan. "Taiwan News Online - Breaking News, Politics, Environment, Immigrants, Travel, and Health". Taiwan News. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2020-05-17.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ http://www.chinapost.com.tw/taiwan/national/national-news/2011/06/15/306275/Plasticizer-found.htmChina Post பரணிடப்பட்டது 2011-06-25 at the வந்தவழி இயந்திரம்