தஞ்சோங் துவாலாங்
தஞ்சோங் துவாலாங் (ஆங்கிலம்: Tanjung Tualang; மலாய்: Tanjung Tualang; சீனம்: 丹绒都阿朗) என்பது மலேசியா, பேராக் மாநிலம், கிந்தா மாவட்டத்தில் (Kinta District) அமைந்துள்ள ஒரு கிராமப்புற நகரம்; முக்கிம் ஆகும். பத்து காஜா மாவட்ட நகராண்மைக் கழகத்தின் கீழ் நிர்வகிக்கப் படுகிறது. ஈப்போ மாநகரத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. [1]
ஆள்கூறுகள்: 4°19′N 101°04′E / 4.317°N 101.067°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
மாவட்டம் | கிந்தா |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 31800 |
தொலைபேசி எண் | +60-5-36000 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | P |
1900-ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், இந்தக் கிராமப்புற நகர்ப்பகுதி மலேசியாவின் முக்கிய ஈயச் சுரங்க நகரங்களில் ஒன்றாக விளங்கியது. தஞ்சோங் துவாலாங் நகரம் அதன் பெயரை துவாலாங் (Tualang) எனப்படும் ஒரு வகை மரத்தில் இருந்து பெற்றதாக அறியப்படுகிறது. பின்னர் ஒரு பெரிய ஈயச் சுரங்க நிறுவனமான தோ ஆலாங் (Toh Allang Chinese Tin Ltd) நிறுவனத்தின் பெயரும் இந்த இடத்திற்குப் பயன்படுத்தப்பட்டது.[2]
பொது
தொகு1939-இல் தஞ்சோங் துவாலாங் மலாயா பொதுவுடைமை கட்சிக்கு (Communist Party of Malaya) ஒரு முக்கியப் புகலிடமாகவும் விளங்கியது. அந்த்க கட்சியில் அந்த்க கட்டத்தில் நன்கு அறியப்பட்ட மலாய்த் தலைவர் ரசீட் மைதீன் (Rashid Maidin) என்பவர் து லுங் சான் (Tu Lung Shan) எனும் மற்றொரு சீனத் தலைவரால் தஞ்சோங் துவாலாங் பகுதியில் பணியில் அமர்த்தப்பட்டார்.
பொருளாதாரம்
தொகு1900-களின் மத்தியப் பகுதியில் தஞ்சோங் துவாலாங்கின் சுரங்கப் பகுதிகளைப் பல பன்னாட்டு ஈயச் சுரங்க நிறுவனங்கள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தன. அந்த நிறுவனங்கள்:
- கீழ் பேராக் ஈய நிறுவனம் – Lower Perak Tin Dredging
- தெற்கு கிந்தா ஒருங்கிணைந்த நிறுவனம் – Southern Kinta Consolidated
- தெற்கு மலாயன் ஈய நிறுவனம் – Southern Malayan Tin Dredging
- ஆசுட்ரல் அமேல்கமேட் ஈய நிறுவனம் – Austral Amalgamated Tin
- ஆசுபோர்ன் & சாப்பிள் ஈய நிறுவனம் – Osborne & Chapple
- பெர்னாஸ் பட்டய மேலாண்மை ஈய நிறுவனம் – Pernas Chartered Management
- மலேசிய சுரங்க நிறுவனம் – Malaysian Mining Corporation
1970-ஆம் ஆண்டுகளில் சுமார் 5 மிகப் பெரிய ஈய அகழ்வாய்வு இயந்திரங்கள் (Dredging Machines) இருந்தன. அவை உலகின் மிகப்பெரிய ஈயம் தோண்டும் இயந்திரங்களில் ஒரு பகுதியாகும். தஞ்சோங் துவாலாங்கில் பல சிறிய வகை ஈயம் தோண்டும் இயந்திரங்களும் இருந்தன. பெரிய இயந்திரங்கள் பொதுவாக ஐரோப்பிய நிறுவனங்களுக்குச் சொந்தமானவை. உள்ளூர் சுரங்க நிறுவனங்கள் "பாலோங்" (Palong) வகை சுரங்க முறைகளைப் பயன்படுத்தின.[3]
நன்னீர் குளங்கள்
தொகுஇன்றைய நிலையில் அந்தப் பழைய சுரங்கப் பகுதிகள், நன்னீர் இறால் மீன்களை வளர்ப்பதற்கான நன்னீர் குளங்களாக மாற்றப்பட்டுள்ளன. சில பகுதிகள் செம்பனை தோட்டங்களாக மாற்றப்பட்டன. அதே வேளையில் ஏராளமான ரப்பர் தோட்டங்களும் உள்ளன. அந்தத் தோட்டங்கள் தனிநபர்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சொந்தமானவையாக உள்ளன.[4]
காட்சியகம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Tanjung Tualang, Perak". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 January 2024.
- ↑ "Tanjung Tualang Tin Dredge". Malaysia Traveller. பார்க்கப்பட்ட நாள் 14 January 2024.
- ↑ "Tanjung Tualang, Malaysia - Facts and information on Tanjung Tualang - Malaysia.Places-in-the-world.com". malaysia.places-in-the-world.com. பார்க்கப்பட்ட நாள் 14 January 2024.
- ↑ Loh, Ivan. "Tanjung Tualang: Perak's prawn town". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 January 2024.