தட்டை (உணவு)
தட்டை (Thattai) என்பது தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் நன்கு வறுத்த சிற்றுண்டியாகும். இது அரிசி மாவு கொண்டு தயாரிக்கப்படுகிறது. பொதுவாக ஜன்மாஷ்டமி அல்லது கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையின் போது தயாரிக்கப்படுகிறது. இந்த தயாரிப்பில் உப்பு மற்றும் இனிப்பு வகைகள் உள்ளன. இது கர்நாடகாவில் நிப்பட்டு என்றும் ஆந்திரா/தெலுங்கானாவில் செக்கலு என்றும் அழைக்கப்படுகிறது.
தேவையான பொருட்கள்
தொகுதட்டைத் தயாரிக்க வழக்கமாகப் பயன்படுத்தும் பொருட்களாக அரிசி மாவு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வறுத்த கொண்டைக் கடலை, மற்றும் பிற சுவையூட்டிகள் பல்வேறு விகிதங்களில் கலக்கப்பட்டு எண்ணெய்யில் நன்கு பொரித்து எடுக்கப்படுகிறது. இது வெண்ணெய், இஞ்சி மற்றும் மசாலா கலந்த பல்வேறு சுவைகளில் கிடைக்கிறது.[1] தமிழ்நாட்டின் சேலம் இதன் 'தட்டுவடை செட்'களுக்கு பெயர் பெற்றது.[2] இது தட்டைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. இதில் பல்வேறு காய்கறிகளாகப் பீட்ரூட், கேரட், சட்னி மற்றும் எண்ணெய் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Foods, Tredy. "thattuvadai". Tredy Foods (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.
- ↑ கே.ரமேஷ், வீ. "மொறு மொறு தட்டுவடை செட் வெறும் பத்து ரூபாய்தான்! - சேலத்தைக் கலக்கும் ஆரோக்கிய உணவு #MyVikatan". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2023-02-09.
{{cite web}}
: External link in
(help)|website=
- கேரளாவில் உள்ள தமிழ் பிராமணர்களின் பாரம்பரிய உணவு வகைகள்.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-264-7121-8ஐஎஸ்பிஎன் 978-81-264-7121-8