தமிழர் அணிகலன்கள்

தமிழர் அழகியலில் அணிகலங்களுக்கு அல்லது நகைகளுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. பண்டைய காலம்தொட்டு நகைகளை ஆக்குவதும் அணிவதும் தமிழர் பண்பாட்டில் ஒரு முக்கிய அம்சம். பொன்னாலும் நவமணிகளாலும் (வைரம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், நீலம், கோமெதகம், முத்து, பவளம்) ஆன அணிகலன்களே தமிழருள் மதிப்பு பெற்றவை. "அம்மதிப்பு பணமதிப்பு (பொருள் மதிப்பு) மனமதிப்பு என இரண்டாகும்." [1] இத்தகைய தமிழர்களால் ஆக்கப்பட்ட அணியப்பட்ட அணிகலன்களைத் தமிழர் அணிகலன்கள் எனக் குறிக்கலாம்.

பாம்படம்


பொருளாதார ரீதியிலும் தமிழர் தமது சேமிப்பை பொன் நகைகளாக மாற்றி வைத்தனர். நீண்ட காலமாக பொன் பணத்துக்கு ஈடாக இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்று அமெரிக்க டொலர் ஒழுங்குடைமை இருப்பதால், இந்த செயற்பாடு அல்லது வழக்கம் சேமிப்பை தகுந்த வகையில் முதலீடு செய்து வருவாய் ஈட்ட தடையாக இருப்பதாகவும் பொருளியல் அறிஞர்கள் சிலர் கருதுகின்றார்கள்.

தமிழர் அணிகலன்கள் வரலாறு

தொகு

முஸ்லீம்கள், ஐரோப்பியர் வருகைக்கு முன்பு தமிழ் ஆண்களும், பெண்களும் "அரையில் மட்டும் ஆடையுடுத்தி, அரைக்குமேல் வெற்றுடம்பாக இருந்தார்கள். உடம்பில் சட்டை அணிவதை அநாகரிமாக அக்காலத்தவர் கருதினார்கள். அரசர்களிடம் ஊழியம் செய்தவர்களே சட்டை அணிந்தனர்".[2] உடைக்கு பதிலாக ஆண்களும் பெண்களும் பல நகைகளால் தம்மை அலங்காரம் செய்து கொண்டார்கள்.

நகை அணி வகைகள்

தொகு

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்)

தொகு

பண்டைய தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. [3]

தலையணி

தொகு
  1. தாழம்பூ
  2. தாமரைப்பூ
  3. சொருகுப்பூ
  4. சாமந்திப்பூ
  5. அடுக்குமல்லிப்பூ
  6. இலை
  7. அரசிலை
  8. இராக்குடி
  9. இலம்பகம்
  10. கடிகை
  11. கன்னசரம்
  12. குச்சம்
  13. குஞ்சம்
  14. கொண்டைத்திருகு
  15. கோதை
  16. சடாங்கம்
  17. சடைநாகம்
  18. சடைத்திருகு
  19. சந்திரப்பிரபை
  20. சரம்
  21. சுடிகை
  22. சுட்டி
  23. சுரிதம்
  24. சூடிகை
  25. சூடாமணி
  26. சூடை
  27. சூட்டு
  28. சூரியப்பிரபை
  29. சூழி
  30. சூளாமணி
  31. சேகரம்
  32. சொருகுப்பூ
  33. தலைப்பாளை
  34. தெய்வ உத்தி
  35. தலைப்பட்டம்
  36. பதுமம்
  37. பிறை
  38. புல்லகம்
  39. பூரப்பாளை
  40. பொலம்பூந்தும்பை
  41. பொற்பூ
  42. பொற்றாமரைப்பூ
  43. பொன்வாகை
  44. பொன்னரிமாலை
  45. மாராட்டம்
  46. முகசரம்
  47. முஞ்சம்
  48. வயந்தகம்
  49. வலம்புரி.
  50. திருகு பூ

காதணி

தொகு
  1. தோடு
  2. கொப்பு
  3. ஓலை
  4. குழை
  5. இலை
  6. குவளை
  7. கொந்திளவோலை
  8. கன்னப்பூ
  9. முருகு
  10. விசிறி முருகு
  11. சின்னப்பூ
  12. வல்லிகை
  13. செவிப்பூ
  14. மடல்
  15. டோலாக்கு
  16. தண்டட்டி.

கழுத்தணிகள்

தொகு
  1. கொத்து
  2. கொடி
  3. தாலிக்கொடி
  4. கொத்தமல்லி மாலை
  5. மிளகு மாலை
  6. நெல்லிக்காய் மாலை
  7. மருதங்காய் மாலை
  8. சுண்டைக்காய் மாலை
  9. கடுமணி மாலை
  10. மாங்காய் மாலை
  11. மாதுளங்காய் மாலை
  12. காரைப்பூ அட்டிகை
  13. அரும்புச்சரம்
  14. மலர்ச்சரம்
  15. கண்டசரம்
  16. கண்டமாலை
  17. கோதை மாலை
  18. கோவை.
  19. பவளத்தாலி

புய அணிகலன்கள்

தொகு
  1. கொந்திக்காய்.

கை அணிகலன்

தொகு
  1. காப்பு
  2. கொந்திக்காய்ப்பூ
  3. கொலுசு.

கைவிரல் அணிகலன்கள்

தொகு
  1. சிவந்திப்பூ
  2. மோதிரம்
  3. அரும்பு
  4. வட்டப்பூ.

கால் அணிகலன்கள்

தொகு
  1. மாம்பிஞ்சுக் கொலுசு
  2. அத்திக்காய்க் கொலுசு
  3. ஆலங்காய்க் கொலுசு

கால்விரல் அணிகள்

தொகு
  1. கான் மோதிரம்
  2. காலாழி
  3. தாழ்
  4. செறி
  5. நல்லணி
  6. பாம்பாழி
  7. பில்லணை
  8. பீலி
  9. முஞ்சி
  10. மெட்டி

ஆண்களின் அணிகலன்கள்

தொகு
  1. வீரக்கழல்
  2. வீரக் கண்டை
  3. சதங்கை
  4. அரையணி
  5. அரைஞாண்
  6. பவள வடம்
  7. தொடி
  8. கங்கணம்
  9. வீரவளை
  10. கடகம்
  11. மோதிரம்
  12. கொலுசு
  13. காப்பு
  14. பதக்கம்
  15. வகுவலயம்
  16. கழுத்தணி
  17. வன்னசரம்
  18. முத்து வடம்
  19. கடுக்கண்
  20. குண்டலம்

நகைகள் பட்டியல்

தொகு

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. மாத்தளை சோமு. (2005). வியக்க வைக்கும் தமிழர் அறிவியல். திருச்சி: தமிழ்க்குரல் பதிப்பகம். பக்கம்: 186
  2. மாத்தளை சோமு. (2005). வியக்க வைக்கும் தமிழர் அறிவியல். திருச்சி: தமிழ்க்குரல் பதிப்பகம். பக்கங்கள்: 168-169.
  3. சிங்கப்பூர் கிருஷ்ணன் எழுதிய அடையாளமாகும் ஆபரணங்கள் கட்டுரை

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_அணிகலன்கள்&oldid=3595762" இலிருந்து மீள்விக்கப்பட்டது