தம்பிதுரை (திரைப்படம்)

செந்தில்நாதன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தம்பிதுரை (Thambi Durai) என்பது 1997 ஆம் ஆண்டய இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். செந்தில்நாதன் இயக்கி, கே. சாந்தமணி தயாரித்தத இப்படத்தில் சரவணன், சுகன்யா, மா. நா. நம்பியார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார்.[1][2] இந்த படத்தின் பணிகள் 1994 இல் நிறைவடைந்தது, என்றாலும் படம் 1997 இல் தான் தாமதமாக வெளியானது.

தம்பிதுரை
இயக்கம்செந்தில்நாதன்
தயாரிப்புகே. செந்தாமரை
கதைசெந்தில்நாதன்
இசைஇளையராஜா
நடிப்புசரவணன்
சுகன்யா
மா. நா. நம்பியார்
ஒளிப்பதிவுஜா. ராஜா
படத்தொகுப்புஜா. இளங்கோ
கலையகம்ஸ்ரீ மாரியம்மன் பிலிம்ஸ்
விநியோகம்ஸ்ரீ மாரியம்மன் பிலிம்ஸ்
வெளியீடுதிசம்பர் 5, 1997 (1997-12-05)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

இருக்கங்குடியில் நடந்த உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கபட்டது என்ற விவரிப்புடன் படம் தொடங்குகிறது. தனது தாத்தா (எம். என். நம்பியார்) உடன் தங்கியிருக்கும் தம்பிதுரை (சரவணன்) ஒரு ஏழை படகோட்டி. அவன் செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்த செண்பகத்தைக் (சுகன்யா) காதலிக்கிறான். செண்பகம் அவளது பணக்கார சித்தியால் (மஞ்சுளா விஜயகுமார்) கொடுமை செய்யப்படுகிறாள். தம்பிதுரையும், செண்பகமும் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பும் செண்பகத்தின் மாமன் (நளினிகாந்த்) அவர்களைப் பிரிக்க ஒரு காமுகனானான நிலக்கிழாருடன் (செந்தில்நாதன்) சேர்ந்து சதி செய்கிறான். அவர்கள் தம்பிதுரையின் தாத்தாவையும், செண்பகத்தின் பாட்டியையும் கொலை செய்கிறார்கள். சூனியக்காரரனான ஒரு மந்திரவாதியை (பயில்வான் ரங்கநாதன்) அணுகுகிறார்கள். சூனியக்காரனின் மந்திரசக்தியால் தம்பிதுரை கிட்டத்தட்ட இறந்துவிடுகிறான். தம்பிதுரை இறந்துவிட்டதாக கருதப்படுகிறது. இருப்பினும் அவனை ஒரு பாதிரியார் (சண்முகசுந்தரம்) பராமரித்து வருகிறார். செண்பகம் விதவைக் கோலம் பூணவேண்டிய நிலைக்கு ஆளாகிறாள். செண்பகத்தின் சகோதரியான (மௌனிகா) தனது மனைவியை சிற்றுண்டி பெட்டியில் குண்டு வைத்து நில உரிமையாளர் கொலை செய்கிறார்.

படத்தின் இறுதிக்கட்டத்தில், தெய்வத்தின் கோபத்தால், நில உரிமையாளர் கைகால் வலிப்பால் பாதிக்கப்படுகிறார். தம்பிதுரை அதிசயத்தால் மீண்டெழுகிறான். நளினிகாந்த் மஞ்சுளாவால் கொல்லப்படுகிறான்.

நடிகர்கள் தொகு

இசை தொகு

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார் .[3]

எண். பாடல் பாடகர்(கள்) பாடல் வரிகள் நீளம் (மீ: கள்)
1 ஆத்து மேட்டுல மனோ பிறைசூடன் 04.55
2 ஏழைகளின் மலேசியா வாசுதேவன் வாலி 04.43
3 கன்னியாகுமரி நீயே அருண்மொழி வாலி 05.01
4 மாமா மனோ, எஸ். ஜானகி வாலி 04.58
5 உன்னை நம்பி எஸ். ஜானகி வாலி 05.36
6 விதியா விதவையா மலேசியா வாசுதேவன் வாலி 05.06

குறிப்புகள் தொகு

  1. "Thambi Durai". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-10.
  2. "Thambi Durai". gomolo.com. Archived from the original on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-10.
  3. "Thambi Durai Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-10.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்பிதுரை_(திரைப்படம்)&oldid=3660161" இலிருந்து மீள்விக்கப்பட்டது