தர்மநாதபுரம்
தர்மநாதபுரம் (Dharmanathapuram) திருச்சிராப்பள்ளியிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் லால்குடிக்கு மேற்கே அமைந்துள்ள மாந்துறை என்ற கிராமத்திலிருந்து வடக்கே சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 2001 கணக்கீட்டின்படி இவ்வூரின் மக்கட்தொகை 200 ஆகும்.[2]
தர்மநாதபுரம் | |
---|---|
Country | இந்தியா |
மாநிலம் , மண்டலம் | தமிழ்நாடு, சோழ நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
கோட்டம் | லால்குடி வருவாய் கோட்டம் [1] |
வட்டம் (தாலுகா) | இலால்குடி வட்டம் |
தமிழக சட்டமன்றத் தொகுதிகள் | லால்குடி (1952 முதல்) |
இந்திய மக்களவைத் தொகுதிகள் | பெரம்பலூர் 2009 முதல் |
அரசு | |
• வகை | சிற்றூர் |
• நிர்வாகம் | ஊராட்சி |
ஏற்றம் | 57 m (187 ft) |
Languages | |
• Official | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
தொலைபேசி இலக்கத் திட்டம் | 0431 |
வாகனப் பதிவு | TN-48 |
வரலாறு
தொகுசவரிமுத்து உடையார் என்ற நிலக்கிழாரால் இந்த ஊர் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில் ஏற்படுத்தப்பட்டது.[சான்று தேவை] இவ்வூர் மக்கள் அனைவரும் பார்க்கவகுலத்தினர்[சான்று தேவை].
ஊர் பெயர்க்காரணம்
தொகுபசியோடு வருவோர்க்கு சோறும், மோரும் வயிறார இலவசமாகக் கொடுத்து வந்தமையாலும், வறியோருக்கு நடவு செய்ய நெல்நாற்று, கூரைவேய தென்னங்கீற்று, மூங்கில் போன்றவற்றை இலவசமாக கொடுத்து தானத்தில் சிறந்தோங்கியதால் ஒத்தைமச்சு என்ற பெயர் மாறி, தர்மநாதபுரம் என்ற பெயர் பெற்றது.[சான்று தேவை]
தேவாலயம்
தொகுஇங்குள்ள புனித வனத்து சின்னப்பர் ஆலயம் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தது. இது 19 ஆம் நூற்றாண்டு காலத்திய தேவாலயம். இதன் பழைய கட்டிடம் அழிக்கப்பட்டு புதிய கட்டிடம் 1983 இல் துவக்கப்பட்டு 1987 இல் கட்டி முடிக்கப்பட்டது. அந்நாளின் கும்பகோணம் பிஷப்பான பால் அருள்சாமியால் புது ஆலயம் திறந்து வைக்கப்பட்டது.
விழாக்கள்
தொகுபுனித வனத்து சின்னப்பருக்கு ஆண்டுப் பெருவிழா, கிறித்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாக்கள் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன.
போக்குவரத்து
தொகுமாவட்டச் சாலையில் அமைந்துள்ளதால் பேருந்து வசதியுள்ளது. இவ்வூருக்கு அருகிலுள்ள வானூர்தி நிலையம் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் (25 கிமீ தொலைவு) ஆகும்.[3]
இதற்கு அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள் மாந்துறை, வாளாடி, இலால்குடி ஆகிய தொடருந்து நிலையங்கள் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Residents question move to locate Marungapuri taluk office at Kallupatti". தி இந்து. 21 June 2013. http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/residents-question-move-to-locate-marungapuri-taluk-office-at-kallupatti/article4836812.ece.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
- ↑ "Airports Authority of India". Aai.aero. 23 January 2013. Archived from the original on 15 March 2013. பார்க்கப்பட்ட நாள் 29 March 2013.