தழூர் பகவதி கோயில்

இந்தியாவில் உள்ள இந்து கோயில்

தழூர் பகவதி கோயில் இந்தியாவில் கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் வாழமுட்டம் என்ற இடத்தில் அச்சன்கோவில் ஆற்றின் கரையில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் ஆகும். [1] இக்கோயிலின் மூலவர் தேவி ஆவார்.[2] [3] பல நூற்றாண்டுகள் பழமையான இக்கோயில் 2020ல் முழுமையாக புனரமைக்கப்பட்டது.

தழூர் பகவதி கோயில்

நாட்டுப்புறக் கலைகள்

தொகு

கும்பத்தில் படையணி கொண்டாடப்படுகிறது.[4] வள்ளிக்கோடு, வாழமுட்டம், வ.கோட்டயம், பிரமாதொம் ஆகிய பகுதிகளிலும் அருகிலுள்ள பகுதிகளிலும் இது புகழ்பெற்றதாகும். தேவி தழூரம்மாவின் இந்த சிறப்பான விழாவிற்காக பக்தர்கள் பிற நகரங்களிலிருந்து வந்து கலந்துகொள்கிறார்கள். ஆண்டுதோறும் படையணி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. படையணிப்பாடல்கள் கேரளாவின் பழமையான நாட்டுப்புறக்கலையாகும். கேரளாவின் இப்பகுதியில் காலங்காலமாக இந்த நாட்டுப்புற நடனங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மேடத்தில் விஷு தினத்தன்று முடிவடையும் கும்பத்தில் பாரெழுந்நெல்லிப்பு நடைபெறுகிறது. [5] வாழமுட்டம் கிழக்கு, வாழமுட்டம், பிரமடம், முல்லானிக்காடு, வள்ளிக்கோடு ஆகிய அனைத்துப் பகுதிகளிலும் பாரெழுநெல்லிப்பு பரவியிருப்பதைக் காணமுடியும். அந்தப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு இந்துக் குடும்பத்தாலும் இது கொண்டாடப்படுகிறது. நிகழ்வின்போது பக்தர்கள் காணிக்கையாக இளநீர் உள்ளிட்டவற்றை காணிக்கையாக வழங்குகின்றனர்.

இக்கோயில் நாட்டுப்புறக் கலைகளுக்கும், காலா (காளை உருவம்) மற்றும் குதிரை வேலா (குதிரை உருவம்) ஆகியவற்றுடன் கூடிய "கெட்டுக்காட்சி" என்றழைக்கப்படுகின்ற ஊர்வலத்திற்கு மிகவும் புகழ்பெற்றதாகும்.

தழூர் பகவதி வலஞ்சுழி தேவியின் சகோதரி என்பது நாட்டுப்புறக் கதையாக உள்ளது.. திருமண சடங்குகளை நடத்த மக்கள் வருவதால், பல திருமண விழாக்களுக்கு இந்த கோயில் புகழ்பெற்ற இடமாகக் கருதப்படுகிறது.

கும்பப் பொங்கல்

தொகு

கும்பம் 1ம் தேதி காலை பொங்கல் விழா துவங்குகிறது. இவ்விழாவிற்கு பாரம்பரிய சுத்தமான ஆடைகளை அணிந்துவருகின்ற பெண்கள், தம் கைகளால் அம்மனுக்கு நைவேத்தியம் செய்கின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்களின் காணிக்கைகளை அம்மன் ஏற்றுக்கொள்கிறார். இவ்வாறான அவர்களுடைய தரிசனம் தம்மை அனைத்து பாவங்களிலிருந்தும் தீமைகளிலிருந்தும் விடுபடுவார்கள் என்று மக்கள் நம்புகின்றனர்.

மேலும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Thazhoor Bhagavathy Kshetram, Pathanamthitta, India Tourist Information" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-22.
  2. "Kerala History". Archived from the original on 2006-08-26. பார்க்கப்பட்ட நாள் 2006-10-30. Kerala-History
  3. Tourist Guide to Kerala By Motilal (UK) Books of India, Various, V. Subburaj
  4. "Thazhoor Bhagavathy Kshetram – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-22.
  5. "Thazhoor Bhagavathy Kshetram". Travelyy.com (in ஆங்கிலம்). 2020-04-25. பார்க்கப்பட்ட நாள் 2023-11-22.

வெளி இணைப்புகள்

தொகு

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=தழூர்_பகவதி_கோயில்&oldid=4108761" இலிருந்து மீள்விக்கப்பட்டது