தாமிரபரணி புஷ்கரம்

தாமிரபரணி புஷ்கரம் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றில் கொண்டாடப்படுகின்ற விழாவாகும்.

தீர்த்த கட்டங்கள்

தொகு

குரு விருச்சிக ராசியில் கடக்கின்ற சமயத்தில், 12 நாள்கள் இவ்விழா நடைபெறுகிறது. [1] 144 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்விழா அக்டோபர் 2018இல் கொண்டாடப்படுகிறது. [2] [3] தாமிரபரணி ஆற்றின் இருகரைகளிலும் உள்ள 200 புஷ்கரணி படித்துறைகள் (தீர்த்தக்கட்டம்) சீர் செய்யப்பட்டு, பொதுமக்களின் தீர்த்தமாடலுக்காக ஆயத்தப்படுத்தப்பட்டன. [4] பொதிகை மலை தொடங்கி புன்னைக்காயல் வரை தாமிரபரணி ஆறு பாய்கின்ற 149 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள 143 தீர்த்த கட்டங்களில் 64 தீர்த்த கட்டங்கள் மட்டுமே பக்தர்கள் நீராட ஏற்றதாக உள்ளன. அவ்வகையில் பல தீர்த்த கட்டங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. [5]

ஜடாயு தீர்த்தம்

தொகு

ஜடாயு உயிர்நீத்த இடத்தில் ஜடாயு தீர்த்தம் தீர்த்தம் உள்ளது. 12 அக்டோபர் 2018 முதல் 22 அக்டோபர் 2018 வரை நடைபெறவுள்ள இவ்விழாவிற்காக, தாமிரபரணி நதியில் அமைத்து வழிபடப்படுவதற்காக இந்த தீர்த்தத்தில் புதிய படித்துறையும், தாமிரவருணி (தாமிரபரணி) அன்னை சிலையும் அகத்தியர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளன. [6] [7]

பிற புஷ்கரங்கள்

தொகு

இந்த புஷ்கரத்தினைப் போல இந்தியாவின் பிற இடங்களில் கங்கா புஷ்கரம், நர்மதா புஷ்கரம், சரஸ்வதி புஷ்கரம், யமுனா புஷ்கரம், கோதாவரி புஷ்கரம், கிருஷ்ணா புஷ்கரம், காவிரி புஷ்கரம், பிரம்மபுத்ரா புஷ்கரம், துங்கபத்திரா புஷ்கரம், சிந்து புஷ்கரம், பிராணஹிதா புஷ்கரம் ஆகிய புஷ்கரங்கள் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிரபரணி_புஷ்கரம்&oldid=3637597" இலிருந்து மீள்விக்கப்பட்டது