காவிரி புஷ்கரம்

காவிரி புஷ்கரம் என்பது கர்நாடகத்தின் தலைக்காவிரி தொடங்கி, தமிழ்நாட்டின் பூம்புகார் வரை காவிரி ஆற்றின் கரையில் நடைபெறுகின்ற விழாவாகும்.

காவிரி புஷ்கரம்
Kaveri Maha Pushkaram
நிகழ்நிலைகொண்ணாடப்பட்டது
வகைஇந்து சமய விழா
காலப்பகுதி12 ஆண்டுகளுக்கு ஒருமுறை (144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாபுஷ்கரம்)
நிகழ்விடம்
அமைவிடம்(கள்)காவிரி ஆறு
நாடுஇந்தியா
மிக அண்மையசெப்டம்பர் 12–23, 2017
அடுத்த நிகழ்வு2161 ஆம் ஆண்டு
பரப்புகர்நாடகம், தமிழ்நாடு
செயல்பாடுபுனித நீராடல்

ராசி

தொகு

புஷ்கரம் என்பதற்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளும் அந்தந்த ராசிகளுக்கு உரித்தான புண்ணிய ஆறுகளில் வாசம் செய்து மக்களுக்கு நன்மை பயப்பதாகும். துலாம் ராசி காவிரி நதிக்குரியதாகும்.[1] ராசிக்குப் பொருத்தமான புண்ணிய நதி என்ற நிலையில் 12 செப்டம்பர் 2017இல் குரு பகவான், துலாம் ராசியில் பிரவேசிப்பதால், காவிரி ஆற்றில், புஷ்கரம் கொண்டாடப்படுகிறது.[2] தற்பொழுது நடைபெறும் குருப் பெயர்ச்சியானது 144 ஆண்டுக்கொரு முறை வருகின்ற மகா குருப் பெயர்ச்சியாகும்.[3] குரு பகவான் மேஷம் முதல் மீனம் முதல் ராசிகளைக் கடக்கின்ற சமயத்தில் கங்கை, நர்மதா, சரஸ்வதி, யமுனா, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, சிந்து , துங்கபத்திரை , பிரம்மபுத்ரா, பிராணஹிதா எனப்படுகின்ற 12 ஆறுகளிலும் அநதந்த ராசிகளில் இவ்விழா நடைபெறுகின்றது.[4] 177 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்விழா நடைபெறுகிறது.[5] இதற்கு முன்னர் 12 செப்டம்பர் 1840இல் இவ்விழா நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.[6]

2017 புஷ்கரம்

தொகு

கர்நாடகாவில், தலைக்காவிரி துவங்கி பல்வேறு இடங்களில், புஷ்கரம் நடக்கிறது. தமிழ்நாட்டில் 144 ஆண்டுகளுக்குப் பின் இவ்விழா கொண்டாடப்படுகிறது. 12 செப்டம்பர் 2017இல் தொடங்கும் காவிரி மகா புஷ்கரம் என்னும் புனித நீராடல் 23 செப்டம்பர் 2017 வரை நடைபெறுகிறது.[2] [7] இவ்விழா வட இந்தியாவிலும், ஆந்திரப்பிரதேசத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட போதிலும் காவிரி புஷ்கரத்திற்கான சிறப்பு ஏற்பாடுகள் 1981இல் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டன. அரங்கநாதசாமி கோயிலின் ஸ்தலத்தாரான பராசர சுதர்சன பட்டர்சாமி, புஷ்கரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் முயற்சிகள் மேற்கொண்டார்.[8] இவ்விழாவிற்காக மேட்டூர் அணையிலிருந்து 10,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.[9]

இந்தியாவில் புஷ்கரங்கள்

தொகு

இந்தியாவில் ராசியின் அடிப்படையிலும், நதிகளின் அடிப்படையிலும் புஷ்கரங்கள் 12 இடங்களில் கொண்டாடப்படுகின்றன.[4][10]

ராசி நதி புஷ்கரம் கொண்டாடப்படும் இடங்கள்
மேஷம் கங்கை கங்கா புஷ்கரம் காசி, ஹரித்வார், ரிஷிகேஷ்
ரிஷபம் நர்மதை நர்மதா புஷ்கரம் ஓங்காரேஸ்வரர் தலம் (நர்மதா நதிக்கரை, மத்தியப் பிரதேசம்)
மிதுனம் சரஸ்வதி சரஸ்வதி புஷ்கரம் குருசேத்திரம், கேசவ பிரயாகை, சோம்நாதபுரம் (குஜராத்), திரிவேணி சங்கமம் (அலகாபாத்), காலேஸ்வரம் (ஆந்திரப்பிரதேசம்), பேடாகட் (மத்தியப் பிரதேசம்)
கடகம் யமுனை யமுனா புஷ்கரம் யமுனோத்ரி, ஹரித்வார், விருந்தாவன், மதுரா, திரிவேணி சங்கமம்
சிம்மம் கோதாவரி கோதாவரி புஷ்கரம் திரியம்பகம் (நாசிக் மாவட்டம்), கோதாவரி நதி தீர்த்தக்கரை (ஆந்திரப்பிரதேசம்)
கன்னி கிருஷ்ணா கிருஷ்ணா புஷ்கரம் பஞ்ச கங்கா நதி (துளசி, காசரி, போகவதி, கும்பி, சாவித்ரி ஆகிய ஐந்து நதிகள் சேர்ந்து), பிரயாக் சங்கமம் (கிருஷ்ணா நதியோடு சேருமிடம்), விஜயவாடா (ஆந்திரப்பிரதேசம்)
துலாம் காவிரி காவிரி புஷ்கரம் [4] ஒக்கனேக்கல், மேட்டூர், ஈரோடு, பவானி, பள்ளிபாளையம், கொடுமுடி, நெரூர், வேலூர் (நாமக்கல்), திருச்சி, ஸ்ரீரங்கம், திருவையாறு, சுவாமிமலை, கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால், பூம்புகார்,[4] தலைக்காவிரி(கர்நாடக மாநிலம்), கொக்கராயன்பேட்டை (திருச்செங்கோடு) கரூர் (கரூர் மாவட்டம்), பரமத்தி வேலூர், திருஈங்கோய்மலை, குளித்தலை, திருப்பராய்த்துறை, கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, குத்தாலம் [11]
விருச்சிகம் தாமிரபரணி பீமா மற்றும் தாமிரபரணி புஷ்கரம் பீமாசங்கரம் (ஜோதிர்லிங்கத்தலம்), பண்டரிபுரம், பாண தீர்த்தம் (தாமிரபரணி நதிக்கரை), பாபநாசம், திருவிடைமருதூர், சிந்துபூந்துறை
தனுசு பிரம்மபுத்ரா பிரம்மபுத்ரா புஷ்கரம் பிரம்மபுத்ரா நதிக்கரை (அஸ்ஸாம்)
மகரம் துங்கபத்ரா துங்கபத்திரா புஷ்கரம் சிருங்கேரி, மந்த்ராலயம்
கும்பம் சிந்து சிந்து புஷ்கரம் சிந்து நதி பாயும் ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப்
மீனம் பிராணஹிதா (கோதாவரியின் உப நதி) பிராணஹிதா புஷ்கரம் காலேஸ்வரம் (அடிலாபாத், தெலுங்கானா)

மயிலாடுதுறை

தொகு
 
மயிலாடுதுறையில் புஷ்கரத்திற்காக ஆற்றில் தயாராகும் நீர்த்தேக்கம்

இவ்விழா நாள்களில் காவிரியில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்று நம்புகின்றனர். ஆகையால் இக்காலகட்டத்தில் சங்கராச்சாரியார்கள், ஆதீனங்கள், மடாதிபதிகள், ஜீயர்கள், துறவியர்கள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் நீராடுவதற்காக மயிலாடுதுறையில் துலாக்கட்டத்தில் நீராடுவர். விழா நாள்களில் பக்தர்கள் நீராடுவதற்காக குளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.[3] புஷ்கரத்திற்காக நிரந்தரத் நீர்த்தேக்கம் அமைக்கும் பணி நடைபெற்று வரும்போது காவிரி ஆற்றின் நடுவில் நந்திக்கோயிலைச் சுற்றி மூன்றடி ஆழத்தில் ஒன்பது பழங்காலக் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[12] விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.[13] நீர்த்தேக்கத்தில் நீர் நிரப்பட்டுள்ளது.[14] அன்னை காவிரி அம்மையின் சிலை துலாக்கட்ட காவிரிக்கரையில் அமைக்கப்பட்டது. விழா நடைபெறும் இடமான துலாக்கட்டத்தில் ஸ்ரீஅன்னை காவிரி அம்மனின் சிலை அமைக்கப்பட்டது.[15] விழாவின் முதல் நாளில் (12 செப்டம்பர் 2017) பக்தரகள் புனித நீராடினர்.[16] நிறைவு நாளான 24 செப்டம்பர் 2017 அன்று ஒரு இலட்சம் பேர் துலாக்கட்டத்தில் நீராடினர். [17]

குத்தாலம்

தொகு

நிகழ்ச்சிக்காக காவிரி ஆற்றை சுத்தம் செய்யும் பணி பல்வேறு கட்சிகள், அமைப்புகள் மூலம் 20 நாட்களாக நடைபெற்றது.[18] 12 செப்டம்பர் 2017 மற்றும் 20 செப்டம்பர் 2017 ஆகிய நாள்களில் மகா ஆரத்தி நடைபெற்றது.[19] [20]

ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி

தொகு

திருச்சியில் காவிரியில் பக்தர்கள் நீராடுகின்ற ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இந்நிகழ்ச்சி 12 செப்டம்பர் 2017 முதல் 24 செப்டம்பர் 2017 வரை நடைபெறுகிறது.[21][22] ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் இவ்விழாவில் 25 ஜீயர்கள் பங்கேற்க உள்ளனர்.[23] விழாவிற்கான முகூர்த்தக் கால் 24 ஆகஸ்டு 2017இல் நடப்பட்டது.[24][25] ஸ்ரீரங்கத்தில் புஷ்கரம் விழா 12 செப்டம்பர் 2017இல் தொடங்கியது.[26][27] ஸ்ரீரங்கத்தில் கடந்த 12 நாள்களில் இவ்விழாவின்போது 20 லட்சம் பேர் நீராடினர். [28]

கும்பகோணம்

தொகு

காவிரி ஆற்றில் பகவத் படித்துறையில் 19 செப்டம்பர் 2017இல் காவிரியில் புனித நீராடலும், மாலையில் மகா ஆரத்தியும் நடைபெறவுள்ளது.[29]

திருவையாறு

தொகு

காவிரி புஷ்கர விழாவை முன்னிட்டு உலக நன்மை மற்றும் மழை பெய்ய வேண்டி திருவையாறு காவிரி ஆற்றில் புஷ்ய மண்டப படித்துறையில் 21 மார்ச் 2017இல் நடைபெற்றது.[30] 18 செப்டம்பர் 2017இல் விழா நடைபெறுகிறது.[31]

காரைக்கால்

தொகு

காவிரி பாயக்கூடிய நண்டலாறு, நாட்டாறு, வாஞ்சியாறு, நூலாறு, அரசலாறு, திருமலைராஜனாறு, பிராவடையனாறு ஆறு கிளை ஆறுகளைக் கொண்டுள்ள காரைக்கால் பகுதியில் முதன்முறையாக இவ்விழா நடத்தப்படுகிறது. திருநள்ளாறு அருகே அகலங்கண்ணு என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தில் 12 செப்டம்பர் 2017 அன்று விழா தொடங்கியது.[32] பக்தர்கள் அங்கு புனித நீராடினர்.[33] அகலங்கண்ணு பகுதியில் தீர்த்தவாரியுடன் 24 செப்டம்பர் 2017 அன்று நிறைவுற்றது. [34]

பவானி

தொகு

ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறையில் இவ்விழா 20 செப்டம்பர் 2017 தொடங்கி 24 செப்டம்பர் 2017 வரை கொண்டாடப்படுகிறது. விழாவின்போதுநாமக்கல், சேலம், கரூர், திருப்பூர், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் கூடுதுறையில் புனித நீராடுகின்றனர்.[35]

மேற்கோள்கள்

தொகு
  1. காவிரி புஷ்கரம் விழாவை அரசு விழாவாக ஏற்று நடத்த வலியுறுத்தல், தினமலர் கோயில்கள், 8 மார்ச் 2017
  2. 2.0 2.1 144 ஆண்டுக்கு பின் காவிரி மஹா புஷ்கரம்,தினமலர், 21 ஆகஸ்டு 2017
  3. 3.0 3.1 காவிரி புஷ்கரம் திருவிழா : துலாக்கட்ட காவிரியில் குளம் அமைக்க முடிவு, தினமணி, 25 மே 2017
  4. 4.0 4.1 4.2 4.3 காவிரி புஷ்கரம், தினமணி, 25 ஆகஸ்ட் 2017
  5. மயிலாடுதுறையில் 177 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி புஷ்கரம் விழா!,விகடன், 26 ஆகஸ்டு 2017
  6. 177 ஆண்டுகளுக்கு பிறகு மயிலாடுதுறையில் காவிரி புஷ்கரம் விழா 12-ந்தேதி தொடங்குகிறது, மாலை மலர், 26 ஆகஸ்டு 2017
  7. Mahapushkaram: Rice Bowl to see 5 lakh pilgrims for 12 day fest, Deccan Chronicle, 11 September 2017
  8. Cauvery Pushkaram' at Srirangam from Sept. 28, The Hindu, 26 September 2005
  9. காவிரி மகா புஷ்கரம் விழாவையொட்டி மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு: தொடக்க நாளில் 25 ஆயிரம் பேர் புனித நீராடினர், தி இந்து, 14 செப்டம்பர் 2017
  10. காவிரி புஷ்கரம், தினமணி, 18 ஆகஸ்டு 2017
  11. Cauvery Maha Pushkaram begins today, The Hindu, 12 September 2017
  12. மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் 9 கிணறுகள் கண்டுபிடிப்பு - பொதுமக்கள் வியப்பு, விகடன், 21 ஆகஸ்டு 2017
  13. Works on for Cauvery Mahapushkaram, The Hindu, 25 August 2017
  14. Mayiladuthurai gets ready for Cauvery Maha Puskharam, The Hindu, 11 September 2017
  15. மயிலாடுதுறையில் ஸ்ரீஅன்னை காவிரி அம்மன் பிரதிஷ்டை, தினமணி, 11 செப்டம்பர் 2017
  16. Cauvery Maha Pushkaram: devotees take holy dip, The Hindu, 13 September 2017
  17. மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் காவிரி மகா புஷ்கரம் விழா நிறைவு: ஒரே நாளில் 1 லட்சம் பேர் நீராடினர், தி இந்து, 25 செப்டம்பர் 2017
  18. காவிரி ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணி, தினமணி, 4 ஆகஸ்டு 2017
  19. குத்தாலம் காவிரி தீர்த்தப் படித்துறையில் மகா ஆரத்தி, தினமணி, 14 செப்டம்பர் 2017
  20. குத்தாலத்தில் காவிரி மகா புஷ்கரம்: ஆரத்தி வழிபாடு, தினமணி, 21 செப்டம்பர் 2017
  21. காவிரி புஷ்கர் கும்பமேளாவிற்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரிய வழக்கு, தினமணி, 22 ஆகஸ்டு 2017
  22. காவிரி மகாபுஷ்கர் கும்பமேளா விழா ஏற்பாடுகள் : உயர்நீதி மன்றத்தில் ஆட்சியர் ஆஜராகி விளக்கம், தினமணி, 23 ஆகஸ்டு 2017
  23. ஸ்ரீரங்கத்தில் 144 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி மகா புஷ்கர விழா: அடுத்த மாதம் 12-ந்தேதி தொடங்குகிறது, மாலை மலர், 21 ஆகஸ்டு 2017
  24. புஷ்கரம் : ஸ்ரீரங்கத்தில் முகூர்த்தக்கால், தினமலர், 25 ஆகஸ்டு 2017
  25. Srirangam gets ready for Maha Pushkaram, The Hindu, 11 September 2017
  26. ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கரம் விழா, தினமணி, 13 செப்டம்பர் 2017
  27. ஸ்ரீரங்கம் காவிரியில் குவிந்த பக்தர்கள், தினமலர், கோயில்கள், 12 செப்டம்பர் 2017
  28. காவிரி மகா புஷ்கர விழா நிறைவு: 20 லட்சம் பேர் புனித நீராடல், தினமணி, 24 செப்டம்பர் 2017
  29. காவிரி மகா புஷ்கர விழா: குடந்தையில் செப்.19-இல் புனித நீராடல்; மகா ஆரத்தி, தினமணி, 29 ஆகஸ்டு 2017
  30. திருவையாறில் வருணஜெபம்: காஞ்சி இளைய சங்கராச்சாரியார் தொடங்கி வைத்தார், மாலை மலர், 22 மார்ச் 2017
  31. திருவையாறில் 18-ந் தேதி புஷ்கரம், மாலை மலர், 11 செப்டம்பர் 2017
  32. காரைக்காலில் காவிரி புஷ்கரம் விழா தொடக்கம்: திரளான பக்தர்கள் புனித நீராடல், தினமணி, 13 செப்டம்பர் 2017
  33. Number of devotees dips at Cauvery Maha Pushkaram, The Hindu, 15 September 2017
  34. காவிரி புஷ்கரம் விழா நிறைவு: ஆயிரக்கணக்கானோர் புனித நீராடல், தினமணி, 25 செப்டம்பர் 2017
  35. பவானி கூடுதுறையில் 144 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி மகா புஷ்கர விழா, மாலை மலர், 13 செப்டம்பர் 2017

வெளியிணைப்புகள்

தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காவிரி_புஷ்கரம்&oldid=3355841" இலிருந்து மீள்விக்கப்பட்டது