துங்கபத்திரா புஷ்கரம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
துங்கபத்திரா புஷ்கரம் துங்கபத்திரை ஆற்றில் 12 ஆண்டுகளுக்கொரு முறை கொண்டாடப்படுகின்ற விழாவாகும்.
துங்கபத்திரா புஷ்கரம் Tungabhadra Pushkaralu | |
---|---|
நிகழ்நிலை | நடப்பில் |
வகை | இந்து சமய விழா |
காலப்பகுதி | 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை |
நிகழ்விடம் | முதன்மைப் படித்துறைகள் பட்டியல் |
அமைவிடம்(கள்) | துங்கபத்திரை ஆறு |
நாடு | இந்தியா |
மிக அண்மைய | 9, திசம்பர் 2008 |
அடுத்த நிகழ்வு | நவம்பர் 20 - டிசம்பர் 1, 2020 |
பங்கேற்பவர்கள் | 1 கோடி |
பரப்பு | கருநாடகம், Andhra Pradesh, Telangana |
செலவு மதிப்பீடு | Rs. 125 கோடிகள்[1] |
செயல்பாடு | புனித நீராடல் |
ராசிக்குரிய நதிகள்
தொகுமேஷம்-கங்கை, ரிஷபம்-நர்மதை, மிதுனம்-சரஸ்வதி, கடகம்-யமுனை, சிம்மம்-கோதாவரி, கன்னி-கிருஷ்ணா, துலாம்-காவிரி, விருச்சிகம்-தாமிரபருணி, தனுசு-பிரம்மபுத்திரா, மகரம்-துங்கபத்திரா, கும்பம்-சிந்து, மீனம்-பிரணீதா என்ற வகையில் ராசிக்குரிய நதிகள் அமையும். மகர ராசிக்குரிய துங்க-பத்திரா மேற்குத் தொடர்ச்சி மலையில் கங்கா மூலா என்னுமிடத்தில் உற்பத்தியாகி கர்நாடக மாநிலத்திலிருந்து ஆந்திர மாநிலம் வரை பாய்கிறது. [2]
12 நாள்கள்
தொகுகுரு மகர ராசியில் கடக்கின்ற சமயத்தில், 12 நாள்கள் இவ்விழா நடைபெறுகிறது. [3][1] 20 நவம்பர் 2020 முதல் 1 டிசம்பர் 2020 வரை ஆனேகுந்தி சிந்தாமணி கோயில் படித்துறையில் இவ்விழா நடைபெறுகிறது. நாட்டில் நிலவும் அசாதாரண நிலையைக் கருத்தில் கொண்டு தொற்று நோய்ப் பரவல் தடுப்புக்காக மத்திய அரசும் கர்நாடக அரசும் வகுத்துள்ள விதிகளின்படி விழா எளிமையாக நடைபெறும். [2]
பிற புஷ்கரங்கள்
தொகுஇந்த புஷ்கரத்தினைப் போல இந்தியாவின் பிற இடங்களில் கங்கா புஷ்கரம், நர்மதா புஷ்கரம், சரஸ்வதி புஷ்கரம், யமுனா புஷ்கரம், கோதாவரி புஷ்கரம், கிருஷ்ணா புஷ்கரம், காவிரி புஷ்கரம், பீமா மற்றும் தாமிரபரணி புஷ்கரம், பிரம்மபுத்ரா புஷ்கரம், சிந்து புஷ்கரம், பிராணஹிதா புஷ்கரம் ஆகிய புஷ்கரங்கள் கொண்டாடப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "One crore pilgrims likley [sic] for Tungabhadra Pushkaralu". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2008-09-08.
- ↑ 2.0 2.1 எஸ்.வெங்கட்ராமன், துங்கபத்ர புஷ்கர விழா, தினமணி, 30 அக்டோபர் 2020
- ↑ Roshen Dalal (18 April 2014). Hinduism: An Alphabetical Guide. Penguin Books Limited. pp. 921–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8475-277-9.