கிருஷ்ணா புஷ்கரம்

கிருஷ்ணா புஷ்கரம் கிருஷ்ணா ஆற்றில் 12 வருடங்களுக்கொரு முறை கொண்டாடப்படுகின்ற விழாவாகும்.

கிருஷ்ணா புஷ்கரம்
Krishna Pushkaram
நிகழ்நிலைநடப்பில்
வகைஇந்து சமய விழா
தொடக்கம்12 ஆகத்து 2016
முடிவு23 ஆகத்து 2016
காலப்பகுதி12 ஆண்டுகளுக்கு ஒருமுறை (lasts for 12 days)
நிகழ்விடம்
அமைவிடம்(கள்)கிருஷ்ணா ஆறு
நாடுஇந்தியா
முந்தைய நிகழ்வு2016
அடுத்த நிகழ்வு2028
பரப்புதென்னிந்தியா
செயல்பாடுபுனித நீராடலும், ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோயில்களில் வழிபாடும்

12 நாள் விழா

தொகு

இந்த புஷ்கரம் 12 நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குரு கன்னி ராசியில் கடக்கின்ற சமயத்தில் இவ்விழா நடைபெறுகிறது. இவ்வகையில் ஓராண்டிற்கு சிறப்பு இருக்கின்ற போதிலும் முதல் 12 நாள்கள் புனிதமான நாள்களாக இந்தியர்களால் கருதப்படுகிறது. [1] ஆந்திரப்பிரதேசம், கர்னாடகம், தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களில் புஷ்கரம் என்பதானது கொண்டாடப்பட்டு வருகிறது. 2016இல் இவ்விழா ஆகஸ்டு 12இல் தெர்டங்கி ஆகஸ்டு 23இல் நிறைவு பெற்றது.

படித்துறைகள்

தொகு

ஆந்திரா மற்றும் கர்னாடகாவில் கீழ்க்கண்ட படித்துறைகளில் இவ்விழா கொண்டாடப் படுகிறது.

ஆந்திரா

தொகு

விஜயவாடா : பத்மாவதி படித்துறை, கிருஷ்ணவேணி படித்துறை, துர்க்கா படித்துறை, சீதாநகரம் படித்துறை, புன்னாமி படித்துறை, பவானி படித்துறை, பவித்ர சங்கம் படித்துறை

அமராவதி : சிவாலயம் படித்துறை, தியான புத்தர் படித்துறை, தரணிகோட்டா படித்துறை

கர்னூல் மாவட்டம்: படாலா கங்கா படித்துறை (ஸ்ரீசைலம்), சங்கமேஸ்வரம் படித்துறை

கட்வால், மகாபூப் நகர் ஜுரல்லா, பீச்சுப்பள்ளியில் உள்ள படித்துறைகள்

கர்னாடகா

தொகு

கர்னாடகா : சிகோடி (பாகல்கோட்), ராய்ச்சூர் (கிருஷ்ணா வட்டம்)

பிற புஷ்கரங்கள்

தொகு

இந்த புஷ்கரத்தினைப் போல இந்தியாவின் பிற இடங்களில் கங்கா புஷ்கரம், நர்மதா புஷ்கரம், சரஸ்வதி புஷ்கரம், யமுனா புஷ்கரம், கோதாவரி புஷ்கரம், காவிரி புஷ்கரம் , பீமா மற்றும் தாமிரபரணி புஷ்கரம், பிரம்மபுத்ரா புஷ்கரம், துங்கபத்திரா புஷ்கரம், சிந்து புஷ்கரம், பிராணஹிதா புஷ்கரம் ஆகிய புஷ்கரங்கள் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணா_புஷ்கரம்&oldid=3240153" இலிருந்து மீள்விக்கப்பட்டது