தாம்பரம் சானடோரியம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதி

தாம்பரம் சானடோரியம் (Tambaram Sanatorium) என்பது தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள பகுதியாகும். சென்னைக் கடற்கரை - விழுப்புரம் பிரிவில் உள்ள தாம்பரம் சானடோரியம் தொடருந்து நிலையத்தால் சென்னை புறநகர் இருப்புவழியில் தாம்பரம் தொடருந்து நிலையம் வழியாக இந்த பகுதி தோடருந்து சேவை செய்யப்படுகிறது.

அரசு மருத்துவமனைகள்

தொகு

தேசிய சித்த மருத்துவ கல்வி நிறுவனம் என்பது தம்பரம் சானடோரியத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவத்திற்காக அமைந்துள்ள ஒரு முதன்மை நிறுவனமாகும்.

தாம்பரம் காசநோய் சானடோரியம் என்று பிரபலமாக அறியப்படும் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை 1928 இல் தொடங்கப்பட்டது.[1] இது தேசிய நெடுஞ்சாலை எண் 45 இல் அமைந்துள்ளது. [2]

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாம்பரம்_சானடோரியம்&oldid=3606916" இலிருந்து மீள்விக்கப்பட்டது