திக்பாலர்கள்

திக்பாலகர்கள்(दिक्पाल) திசைகளை காப்பவர்கள் ஆவார். வடமொழியில் திக்(दिक्) என்றால் திசை என்று பொருள், பாலகர்(पाल) என்றால் காப்பவர்கள் என்று பொருள். எனவே திசைகளை காப்பவர்கள் திக்பாலகர்கள் என அழைக்கப்பட்டனர். எட்டுதிக்குகளை காப்பவர்களை மொத்தமாக அஷ்டதிக்பாலகர்கள் என அழைப்பர். எட்டுதிக்குகளுடன் ஊர்த்துவம்(மேல்) மற்றும் அதம்(கீழ்) திக்குகளை காப்பவர்களையும் சேர்த்து தசதிக்பாலகர்கள் எனவும் அழைப்பதுண்டு.

இந்து மதத்தில், திக்பாலகர்களின உருவங்களை கோவில் கோபுரங்கள், வாயில்கள், கூரைகள் மற்றும் சுவர்களில் காணலாம்.

தசதிக்பாலர்கள்

தொகு

தசதிக்பாலர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

பெயர் திசை மந்திரம் ஆயுதம் துணை கிரகம்
குபேரன் வடக்கு ஓம் ஷம் குபேராய நம: ॐ षं कुभेराय नमः கதாயுதம் குபேரஜாயை சந்திரன்
யமன் தெற்கு ஓம் மம் யமாய நம: ॐ मं यमाय नमः தண்டம் வராகஜாயை குரு
இந்திரன் கிழக்கு ஓம் லம் இந்திரயா நம: ॐ लं इन्द्राय नमः வஜ்ஜிராயுதம் சசி(शची) சூரியன்
வருணன் மேற்கு ஓம் வம் வருணாய நம: ॐ वं वरुणाय नमः பாசம்(पाशं) வாருணஜாயை சுக்கிரன்
ஈசானன் வடகிழக்கு ஓம் ஹம் ஈசானாய நம: ॐ हं इशानाय नमः திரிசூலம் ஈசானயஜாயை ராகு
அக்னி தென்கிழக்கு ஓம் ரம் அக்னயே நம: ॐ रं अग्नये नमः சக்தி சுவாகா தேவி செவ்வாய்
வாயு பகவான் வடமேற்கு ஓம் யம் வாயுவே நம: ॐ यं वायुवे नमः அங்குசம் வாயுஜாயை சனி
நிருதி தென்மேற்கு ஓம் க்ஷம் ராக்ஷசாய நம: ॐ क्षं राक्षसाय नमः கட்கம்(வாள்) கட்கி புதன்
பிரம்மன் ஊர்த்துவம் ஓம் ஹ்ரிம் பிரம்மணே நம: ॐ ह्रिं ब्रह्मणे नमः தாமரை மலர் சரஸ்வதி கேது
விஷ்ணு அதம் ஓம் நமோ நாரயாணாயா: ॐ नमो नारायणाय சக்கரம் லக்ஷ்மி லக்னம்

திசைகளின் பெயர்கள்

தொகு

இந்து சாஸ்திரங்களில் திசைகளின் பெயரை அந்தந்த திசைகளின் அதிபதிகளை வைத்து கூறுவதுண்டு. அதாவது வடகிழக்கு திசையினை ஈசானியம் என்றும் தென்கிழக்கு திசையினை அக்னேயம் என்று திசைக்குறிய திகபாலர்களின் பெயர்களை வைத்து அழைப்பதுண்டு. இந்த முறை வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியமாக காணப்படுகிறது.

லோகபாலர்கள்

தொகு

இந்து மதத்தில் நான்கு பெரும் திசையை காப்பவர்கள் லோகபாலர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

இந்த லோகபாலர்களின் சிலைகளை கோபுரவாசல்களின் வைப்பது வழக்கம்

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திக்பாலர்கள்&oldid=3760517" இலிருந்து மீள்விக்கப்பட்டது