திண்ம அமிலம்
திண்ம அமிலங்கள் (Solid acids) வேதிவினை ஊடகத்தில் கரையாத அமிலங்கள் ஆகும். அவை பெரும்பாலும் பலபடித்தான வினையூக்கிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
உதாரணங்கள்
தொகுபெரும்பாலான திட அமிலங்கள் பொதுவாக கரிம அமிலங்களாகும், இதில் ஆக்சாலிக் அமிலம், டார்டாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம், முதலியனவும் சிலிகோ-அலுமினேட்டுகள் (செயோலைற்றுகள், அலுமினா, சிலிகோ-அலுமினோ-பாசுபேட்டு) உள்ளிட்ட லூயிசு அமிலங்களாக செயல்படுகின்ற ஆக்சைடுகள் மற்றும் சல்பேட்டட் சிர்கோனியா ஆகியவையும் உள்ளடங்கும். டைட்டானியா, சிர்கோனியா மற்றும் நியோபியா உள்ளிட்ட பல மாற்ற உலோக ஆக்சைடுகள் அமிலத்தன்மை கொண்டவை.[1] இத்தகைய அமிலங்கள் பிளத்தல் வேதிவினைகளில் பயன்படுத்தப்படுகின்றன. சல்போனேட்டட் பாலிஸ்டிரீன், திண்ம பாசுபோரிக் அமிலம், நியோபிக் அமிலம் மற்றும் ஹீட்டோரோ பாலிஆக்ஸோமெட்டலேட்டுகள் உட்பட பல திண்ம ப்ரான்ஸ்டெட் அமிலங்கள் தொழில்துறையிலும் பயன்படுத்தப்படுகின்றன. [2]
பயன்பாடுகள்
தொகுதிட அமிலங்கள் பல தொழில்துறை வேதியியல் செயல்முறைகளில் வேதி வினையூக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன, பெட்ரோலியம் சுத்திகரிப்பதில் பெரிய அளவிலான வினையூக்கிகள் முன்னிலையிலான சிதைவு வினைகள் முதல் பல்வேறு நுண்ணிய வேதிப்பொருள்களின் தொகுப்பு முறை தயாரிப்பு வரை இவை பயன்படுகின்றன. [3]
ஒரு பெரிய அளவிலான பயன்பாடு அல்கைலேற்றம் ஆகும், எ.கா. பென்சீன் மற்றும் எத்திலீன் ஆகியவற்றின் கலவை எத்தில்பென்சீனைக் கொடுக்கிறது. மற்றொரு பயன்பாடு சைக்ளோயெக்சனோன் ஆக்சைமை கேப்ரோலாக்டமாக மறுசீரமைப்பதாகும். [4] பல ஆல்கைல் அமீன்கள் திண்ம அமிலங்களால் வினையூக்கப்பட்டு, ஆல்கஹாலின் அமீனேற்றம் மூலம் தயாரிக்கப்படுகின்றன.
திண்ம அமிலங்களை எரிபொருள் கலங்களில் மின்பகுபொருளாகப் பயன்படுத்தலாம். [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Boysen, Dane A.; Uda, Tetsuya; Chisholm, Calum R. I.; Haile, Sossina M. (2004-01-02). "High-Performance Solid Acid Fuel Cells Through Humidity Stabilization" (in en). Science 303 (5654): 68–70. doi:10.1126/science.1090920. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:14631049. Bibcode: 2004Sci...303...68B. http://science.sciencemag.org/content/303/5654/68.Boysen, Dane A.; Uda, Tetsuya; Chisholm, Calum R. I.; Haile, Sossina M. (2004-01-02). "High-Performance Solid Acid Fuel Cells Through Humidity Stabilization". Science. 303 (5654): 68–70. Bibcode:2004Sci...303...68B. doi:10.1126/science.1090920. ISSN 0036-8075. PMID 14631049.
- ↑ Busca, Guido "Acid Catalysts in Industrial Hydrocarbon Chemistry" Chemical Reviews 2007, volume 107, 5366-5410. எஆசு:10.1021/cr068042e
- ↑ "Solid Acid Catalysis: From Fundamentals to Applications". CRC Press. பார்க்கப்பட்ட நாள் 2016-09-15.
- ↑ Michael Röper, Eugen Gehrer, Thomas Narbeshuber, Wolfgang Siegel "Acylation and Alkylation" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2000. எஆசு:10.1002/14356007.a01_185