தித்திக்கும் இளமை
தித்திக்கும் இளமை (Thithikkum Ilamai) என்பது 2008 ஆம் ஆண்டய இந்திய தமிழ் பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இப்படத்தை அறிமுக இயக்குநர் சந்திரமோகன் இயக்க, புதுமுகங்களான கே. தினேஷ் குமார், ஜே. பிரணவ், அல்தரா, நிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், மன்சூர் அலி கான், செந்தில், நிழல்கள் ரவி, நெல்லை சிவா, தலைவாசல் விஜய், அஜய் ரத்னம், சந்தான பாரதி, கோலங்கள் சியாம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். சங்கை சுப்பிரமணியன் தயாரித்த இப்படத்திற்கு, கே. மனிஷ் இசை அமைத்துள்ளார். இப்படமானது 30 மே 2008 அன்று வெளியிடப்பட்டது.[1][2][3]
தித்திக்கும் இளமை | |
---|---|
இயக்கம் | சந்திரமோகன் |
தயாரிப்பு | எஸ். சுப்பிரமணியன் |
கதை | சந்திரமோகன் |
இசை | கே. மனிஷ் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | சஞ்சை வாஸ் |
படத்தொகுப்பு | ராஜ்கீர்த்தி |
கலையகம் | நரேஷ் நாகா பிக்சர்ஸ் |
வெளியீடு | மே 30, 2008 |
ஓட்டம் | 135 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுபரணி (கே. தினேஷ்குமார்) மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் கல்லூரி மாணவர்கள். அவர்கள் சென்னையில் ஒரு சிறிய கூரை வீட்டில் ஒன்றாக வசிக்கிறார்கள். அவர்கள் நல்ல மாணவர்கள் என்று அவர்களின் பெற்றோர் நம்புகிறார்கள். ஆனால் உண்மையில், அவர்கள் பெற்றோரிடமிருந்து பெறும் பணத்தைக் கொண்டு முடிந்தவரை உல்லாசமாக வாழ்கின்றனர். எளிதாக பணம் சம்பாதிக்க பரணி ஒரு ஆண் விபச்சாரியாக மாறுகிறான். பரணியும் அவரது கல்லூரித் தோழர் அனிதாவும் (அல்தாரா) காதலிக்கிறார்கள். அவர்கள் உடலுறவும் கொள்கிறார்கள். இதற்கிடையில், ஊமை டேவிட் (ஜே. பிரணவ்) அவர்களுடன் தங்க வருகிறான்.
டேவிட் ஊமையாக நடிப்பவர். பழிவாங்கும் எண்ணத்துடன் மூன்று நண்பரின் வாழ்க்கையில் நுழைகிறார். டேவிட் சத்தமில்லாமல் பரணியின் இரு நண்பர்களை ஜோசப் (கோலங்கள் சியாம்) உதவியுடன் கொன்று, ஆதாரங்களை அழிக்க அவர்களின் உடல்களை எரிக்கிறான். டேவிட் தனது கடைசி இலக்கான பரணியைக் கொல்ல திட்டமிட்டுள்ளான். கொடைக்கானலிலுக்கு கல்லூரி சுற்றுலாவில் இருக்கும் பரணி அங்கு டேவிட்டைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். டேவிட் பரணியைக் கொன்று அவனது உடலை காட்டில் எரிக்கிறான். காவல் ஆய்வாளர் தர்மா ( மன்சூர் அலி கான் ) டேவிட்தான் கொலையாளி என்பதைக் கண்டுபிடித்து, அவனைக் கைது செய்கிறார். நீதிமன்றத்தில், டேவிட் நான்கு பேரைக்கும் தண்டனை அளிக்கவே அவர்களைக் கொன்றதாக கூறுகிறான். மேலும் திறந்த வெளியில் நீதிமன்ற விசாரணை நடத்த கோருகிறான், நீதிபதி மிகவும் சிந்தித்தபின் அதை ஏற்றுக்கொள்கிறார்.
கடந்த காலத்தில், மனை வணிகத்தில் ஈடுபட்ட டேவிட் தனது அன்பு சகோதரி அனிதா (நிஷா) உடன் வசித்து வருகிறார். அனிதாவும் அவரது நண்பர் ஜோசப்பும் திருமணம் செய்யவிருந்தனர். ஒரு நாள், அனிதாவின் செல்பேசியை ஒரு உணவக பணியாளர் திருடி, அதை பரணிக்கு விற்கிறார். பரணி அந்த செல்பேசியில் அனிதாவின் ஒளிப்படங்களைக் காண்கிறான். அவன் அவளது படங்களை ஆபாசப் படங்களாக மார்பிங் மூலம் செய்து தனது தொடர்பு எண்களுக்கு அனுப்புகிறான். அதன்பிறகு அனிதாவின் படங்களை பார்த்த ஆண்களால் அவள் துன்புறுத்தப்படுகிறாள். இதனால் அவமானத்துக்கு ஆளான அனிதா தற்கொலை செய்து கொள்கிறாள். இதனால் ஆத்திரமுற்ற டேவிட் தனது சகோதரியின் படங்களைத் திருத்தி வெளியிட்டவனை பழிவாங்க முடிவு செய்கிறான். உணவக பணியாளர் தனது சகோதரியின் செல்பேசியைத் திருடியதை டேவிட் கண்டுபிடிக்கிறான். டேவிட் அவனைப் பிடித்து அவனை மிரட்டி எல்லாவற்றையும் அறிந்து கொள்கிறான். பின்னர் டேவிட் அவனைக் கொன்று அவனது உடலை எரிக்கிறான்.
நீதிமன்றத்தில், ஊடகங்களும் பொதுமக்களும் டேவிட்டின் செயலை பாராட்டுகின்றன. ஆனால் நீதிபதி டேவிட் சட்டத்தை கைகளில் எடுத்ததற்காக அவனுக்கு மரண தண்டனை விதிக்கிறனர். இருப்பினும், மின்சாரத்தினால் தன்னுயிரைப் போக்கிக் கொள்ள டேவிட் முடிவு செய்கிறான்.
நடிகர்கள்
தொகு- கே. தினேஷ் குமார் பரணியாக
- ஜே. பிரணவ் டேவிட்டாக
- அல்தரா அனிதாவாக
- நிஷா ஏஞ்சலாக
- மன்சூர் அலி கான் காவல் ஆய்வாளர் தர்மனாக
- செந்தில்
- நிழல்கள் ரவி அனிதாவின் தந்தை திருவேங்கடமாக
- நெல்லை சிவா பரந்தாமனாக
- தலைவாசல் விஜய் ஆறுகமாக
- அஜய் ரத்னம் ஆணாயாளராக
- சந்தான பாரதி பரணியின் தந்தையாக
- கோலங்கள் சியாம் ஜோசப்பாக
- விஜய் கிருஷ்ணராஜ் அரசு வழக்கறிஞராக
- எல். ஐ. சி. நரசிம்மன் நீதியரசராக
- சேது விநாயகம் திருவேங்கடத்தின் தந்தையாக
- கோவை செந்தில் முனுசாமியாக
- பயில்வான் ரங்கநாதன் பழனிசாமியாக
- லம்பேர்ட் டேனியல் கஜாவாக
- அழகு துரைசாமியாக
- சூரியன் தண்டபாணியாக
- சபிதா ஆனந்த் அனிதாவின் தாய் கல்யாணியாக
- பாத்திமா பாபு எதிர்தரப்பு வழக்கறிஞராக
- சி. ஆர். சரஸ்வதி வள்ளியாக
- லக்சா
- பாரதி மருத்துவராக
- கல்பாஸ்ரீ மல்லிகாவாக
- அஞ்சலி தேவி மீனாட்சியாக
- மல்லிகா
தயாரிப்பு
தொகுநரேஷ் நாகா பிக்சர்ஸ் பதாகையின் கீழ் தித்திகும் இளமை தயாரிக்கபட்ட இப்படத்திம் மூலமாக சந்திரமோகன் இயக்குநராக அறிமுகமானார். முக்கிய பாத்திரங்களில் நடிக்க புதுமுகங்களான கே. தினேஷ் குமார் மற்றும் ஜே. பிரணவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.[4]
இசைப்பதிவு
தொகுபடத்திற்கான பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையை இசையமைப்பாளர் கே. மனிஷ் மேற்கொண்டார். படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெற்றன.[5][6][7]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "வானம் என்ன பூமி என்ன" | திப்பு | 5:06 | |||||||
2. | "சொற்கம் கண்ணருகே" | அனுராதா ஸ்ரீராம், கே. மனீஷ் | 5:09 | |||||||
3. | "வணக்கண்ணே அண்ணே" | கிருஷ்ணராஜ் | 4:30 | |||||||
4. | "நெஞ்சைத் தொடும் இசையே" | சித்ரா | 5:44 | |||||||
5. | "நைசா பாத்து நைசா பேசி" | ஹரிஷ் ராகவேந்திரா | 4:08 | |||||||
6. | "ஓ கொடியுறவே எங்கே என் சொந்தம்" | விஜய் யேசுதாஸ் | 5:27 | |||||||
மொத்த நீளம்: |
30:04 |
வரவேற்பு
தொகுபிஹைண்ட்வுட்ஸ்.காம் இந்த படத்துக்கு 5 நட்சத்திரங்களில் 1 என மதிப்பீடு அளித்து, "மோசமான நடிப்பு மற்றும் கவர்ச்சியான பெண்கள் என்ற பெயரில் அருவருப்பான ஆடைகளில் உள்ள பெண்கள் பார்வையாளர்களை சங்கடத்தில் ஆழ்த்துகின்றன" என்று கூறிப்பட்டது.[8]
குறிப்புகள்
தொகு- ↑ "Find Tamil Movie Thithikkum Ilamai". jointscene.com. Archived from the original on 31 January 2010. பார்க்கப்பட்ட நாள் 8 September 2019.
- ↑ "Thithikkum Ilamai (2008) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 8 September 2019.
- ↑ "Thithikkum Ilamai Tamil Movie". nowrunning.com. பார்க்கப்பட்ட நாள் 8 September 2019.
- ↑ "Malayalam Tv Actress Althara Biography". nettv4u.com. பார்க்கப்பட்ட நாள் 8 September 2019.
- ↑ "Thithikkum Ilamai (2008) - Bharani". mio.to. Archived from the original on 15 ஜனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 8 September 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Thithikkum Ilamai Songs". jiosaavn.com. பார்க்கப்பட்ட நாள் 8 September 2019.
- ↑ "Thithikkum Ilamai Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 8 September 2019.
- ↑ "Thithikkum Ilamai - Movie review - Behindwoods". behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 8 September 2019.