திமில்மூக்குக் குழிவிரியன்

பாம்பு இனம்
திமில்மூக்குக் குழிவிரியன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
வைப்பரிடே
பேரினம்:
கைப்னாலே
இனம்:
கை. கைப்னாலே
இருசொற் பெயரீடு
கைப்னாலே கைப்னாலே
மெரம், 1820
வேறு பெயர்கள் [1]
  • கோபியாசு கைப்னாலே
    மெரம், 1820
  • கைப்னாலே கைப்னாலே
    — குளோய்ட், 1977

திமில்மூக்குக் குழிவிரியன்[2] (Hypnale hypnale) என்பது இந்தியா மற்றும் இலங்கையில் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1][3] இது ஒரு நச்சு விரியன் சிற்றினமாகும்.[1]

இவற்றில் எந்த துணையினமும் தற்போது வரை அங்கீகரிக்கப்படவில்லை.[4]

விளக்கம் தொகு

 
திமில்மூக்குக் குழிவிரியன், செந்தூர்னி காட்டுயிர் உய்விடம், கேரளம், இந்தியா.

இந்தப் பாம்பு சராசரியாக 30-45  செமீ (11¾-17¾ அங்குலம்) வரை (வால் உட்பட) வளரும்.[3] ஆயுதப் படைகளின் பூச்சி மேலாண்மை வாரியம் மொத்த நீளம் இதன் 0.4-0.6 மீ (15¾-23⅝ அங்குலம்) எனக் கூறுகிறது.[5]

இது தடிமனான உடலும், அகலமான முக்கோண வடிவ தலையுடன் இருக்கும். மூக்குப் பகுதி வழக்கத்தைவிட உயர்ந்து திமில்போல் ஓங்கி இருக்கும்.[3][5] கண்களுக்கும் நாசித் துவாரத்திற்கும் இடையே ஒரு குழிவான வெப்ப உணர் உறுப்பைக் கொண்டிருக்கும். சுற்றி இருப்பதை உணர்வதற்கும், இரையைப் பிரிப்பதற்கும் இது உதவுகிறது. இதன் உடல் நிறம் இலைச் சருகுகளில் உருமறைப்பு செய்யத்தக்கதாக இருக்கும். இவை அச்சுறுத்தலுக்கு ஆளானால் தலையைத் தூக்கி எச்சரிக்கும்.[2]

தலையின் பக்கவாட்டில் நாசித்துவாரத்தில் துவங்கும் வெள்ளை நிறக் கோடு கழுத்து வரை நீண்டிருக்கும். வயிறு பழுப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். வால் முனை மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.[3]

புவியியல் எல்லை தொகு

 
கேரளத்தின் கஞ்சிரப்பள்ளியில்.

மால்கம் ஆர்தர் சுமித் (1943) கருத்துப்படி, திமில்மூக்குக் குழிவிரியன் இந்தியாவின் தீபகற்பத்தில் இருந்து மேற்குத் தொடர்ச்சி மலை வரை வடக்கே 16° N வரையிலும், இலங்கையிலும் காணப்படுகிறது.

வாழ்விடம் தொகு

திமில்மூக்குக் குழிவிரியன் அடர்ந்த அடர் காடுகளிலும், மலைப்பாங்கான காபி தோட்டங்களிலும் காணப்படுகிறது.[3]

நடத்தை தொகு

 
கண்டலமாவில், அச்சுறுத்தப்படும்போது தட்டையாகும் உடலைக் கவனியுங்கள்
 
இந்தியாவின், கர்நாடகத்தின், காளி புலிகள் சரணாலயத்தில், இலைச் சருகுகளில் மறைந்திருக்கும் திமில் மூக்குக் குழி விரியன்.

திமில்மூக்குக் குழிவிரியன் அதிகாலையிலும், இரவு நேரங்களிலும் சுறுசுறுப்பாக இருக்கும். இது பகலில் இலைச் சருகுகளிலும் அடர்ந்த புதர்களிலும் நேரத்தைக் கழிக்கிறது. சூரிய உதயத்தின் போது நீரோடைகளின் ஓரத்தில் இந்த இனத்தை காணலாம். இது மெதுவாக நகரக்கூடியது என்றாலும், விரைந்து தாக்கும் திறன் கொண்டது. இலங்கையில் அதிக பாம்பு கடிக்கு காரணமான பாம்பு இதுவாகும். [6]

நஞ்சு தொகு

திமில்மூக்குக் குழிவிரியன் கடித்தால், அதனால் தீங்கு நேராது என்று முன்னர் கருதப்பட்டாலும், இப்போது இரத்த உறைவு மற்றும் கடிய சிறுநீரகக் காயம் போன்ற தீவிர சிக்கல்கள் ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. கடிபட்ட சில மணிநேரங்களுக்குள் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கடிபட்ட மனிதர்களுக்கு ஆபத்து நேரலாம். [7] துவக்கத்தில் இது இலங்கையில் அதிக நஞ்சுள்ள பாம்புகள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்றாலும், தற்போது இது அதிக நஞ்சுள்ளதாகவும், இலங்கை மற்றும் இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் காணப்பபடும் மருத்துவ ரீதியாக முக்கியமான நச்சுப்பாம்புகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.[6]

2016 நவம்பர் நிலவரப்படி, தற்போது கோஸ்ட்டா ரிக்கன் குளோடோமிரோ பிகாடோ நிறுவனம் மற்றும் இலங்கையில் மருத்துவ பரிசோதனைக் கூடம் ஆகியவை இதற்கான நச்சுமுறியை உருவாக்கியுள்ளன. [8]

இனப்பெருக்கம் தொகு

திமில்மூக்குக் குழிவிரியனின் வயது வந்த பெண் பாம்புகள் மார்ச் முதல் சூலை வரை குட்டிகளை இடுகின்றன. பிறந்த குட்டிகள் 13-14.5 செமீ (5⅛-5¾ அங்குலம்) நீளம் இருக்கும். [9]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 McDiarmid RW, Campbell JA, Touré TA (1999). Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, Volume 1. Washington, District of Columbia: Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
  2. 2.0 2.1 "நல்ல பாம்பு - 20: மேற்கு மலைத் தொடரின் தனித்துவப் பாம்புகள்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-04.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 United States Navy (1991). Poisonous Snakes of the World. New York: United States Government/Dover Publications Inc. 203 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-26629-X.
  4. "Hypnale hypnale". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 17 November 2006.
  5. 5.0 5.1 Defense Pest Management Information Analysis Center (2001). Regional Disease Vector Ecology Profile for South Central Asia. 219 pp. PDF பரணிடப்பட்டது 2006-08-30 at the வந்தவழி இயந்திரம் at Armed Forces Pest Management Board. Accessed 17 November 2006.
  6. 6.0 6.1 "Enzymatic and toxinological activities of Hypnale hypnale (hump-nosed pit viper) venom and its fractionation by ion exchange high performance liquid chromatography". Journal of Venomous Animals and Toxins Including Tropical Diseases 17 (4): 473–485. 2011. doi:10.1590/S1678-91992011000400015. பன்னாட்டுத் தர தொடர் எண்:1678-9199. 
  7. Kularatna SA, Ratnatunga N (1999).
  8. Rodrigo M (2016).
  9. Das, Indraneil (2002).