தியான் தான் புத்தர்

தியான் தான் புத்தர் (Tian Tan Buddha) அல்லது பெரிய புத்தர் (Big Buddha) என்பது ஹொங்கொங், லந்தாவு தீவில், நொங் பிங் எனும் உயர்நிலப் பகுதியில், ஒரு மலைக்குன்றின் மீது அமைக்கப்பட்டுள்ள, ஒரு பிரமாண்டமான வெண்கலப் புத்தர் சிலையாகும். இருப்பினும் இந்த புத்தர் சிலை லந்தாவு தீவில் இருப்பதனால் லந்தாவு புத்தர் என்றே உள்ளூர்வாசிகளால் அழைக்கப்படுகிறது. இந்த புத்தர் சிலை 34 மீட்டர் (112 அடி) உயரமானதாகும். இதன் நிறை 250 மெற்றிக்குத் தொன் ஆகும். அத்துடன் 2007ம் ஆண்டு வரை, திறந்த வெளியில் கட்டப்பட்ட, உலகில் அதியுயரமான வெண்கலப் புத்தர் சிலையாக இதுவே இருந்தது[1]. இந்தப் புத்தர் சிலை போ லின் மடாலயத்தின் முன்பாகக் கட்டப்பட்டுள்ளது. இப்புத்தர் சிலையும் போ லின் மடாலய வளாகமும், மலைத்தொடர்கள் சூழ, அடர்ந்த கானகத்தின் நடுவே இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் உள்ளன. இந்த இடமே ஹொங்கொங் பௌத்தத்தின் மையமாக விளங்குகிறது. அத்துடன் வரும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத் தெரிவுகளில் இந்த இடமும் ஒன்றாக இருக்கிறது. அதற்கான சிறப்பு வசதிகளையும் ஹொங்கொங் அரசாங்கம் செய்துள்ளது.

தியான் தான் புத்தர்
பெரிய புத்தர்
சீன எழுத்துமுறை 天壇大佛

வரலாறு தொகு

 
டயான் டான் புத்தர் வெண்கலச் சிலை
 
மலைத்தொடர்களின் நடுவே டயான் டான் புத்தர் சிலை
 
பேருந்தில் இறங்கி நடந்து செல்லும் வழியின் முகப்பு
 
புத்தரை வணங்கும் தேவர் சிலைகள்

இந்த புத்தர் சிலையின் கட்டுமாணப் பணிகள் 1990ம் ஆண்டு ஆரம்பம் ஆகின. 1993 டிசம்பர், 29ம் திகதி இதன் கட்டுமாணப் பணிகள் நிறைவுற்றது. இந்த புத்தரின் சிலை ஒரே முழுச்சிலையாக அல்லாமல், 202 துண்டுகளாக செய்யப்பட்டு, பின்னர் தற்போது சிலை வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் கொண்டுவந்து பொருத்தப்பட்டது. அத்துடன் இந்த சிலையை தாங்கும் திறனுக்கு ஏற்ப உறுதியான இரும்பு வலையங்கள் அமைக்கப்பட்டே சிலையை வைக்கப்பட்டது. சிலை பொருத்தப்பட்டதன் பின்னர் உலகெங்கும் உள்ள பௌத்தப் பிக்குகள் அழைக்கப்பட்டு திறப்பு விழா நடாத்தப்பட்டது. திறப்பு விழாவின் போது சிறப்பு விருந்தினர்களாக சீனா, ஹொங்கொங், தாய்வான், இந்தியா, சப்பான், கொரியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் அமெரிக்கா பொன்ற நாடுகளில் இருந்தும் பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர். 1999 ஒற்றோபர், 18ம் திகதி ஹொங்கொங் தபால் நிலையம் "தியான் தான் புத்தரின்" உருவ அஞ்சற்றலையை வெளியிட்டது. ஹொங்கொங் எம்டிஆர் தொடருந்துக் கூட்டுத்தாபனம் பயண அட்டைகளில் "தியான் தான் புத்தர்" உருவப் படம் வெளியிட்டது.

அதன் பின்னர் நொங் பிங் கிராமம் எனும் பெயரில் ஒரு கவர்ச்சிக் கிராமம், நொங் பிங் தொங்கூர்தி சேவை போன்றவை, ஹொங்கொங் அரசாங்கத்தால் 2005ம் ஆண்டு கட்டப்பட்டது. இதற்கு ஹொங்கொங் அரசாங்கம் 750 பில்லியன் ஹொங்கொங் டொலர் செலவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் போ லின் மடாலயக் கட்டத்தையும் பெருபித்து கட்டும் திட்டம் ஒன்றும் நடைபெற்றவண்ணம் உள்ளது.

பிற தகவல்கள் தொகு

இந்த புத்தரின் சிலையின் பெயர் "தியான் தான் புத்தர்" என வழங்கப்பட்டத்தற்கான காரணம் சீனாவில், பீஜிங் நகரில், மிங், குயிங் அரச மரபினரால் "தியான் தான்" எனும் பெயரில் கட்டப்பட்ட மூன்று அடுக்கு பலிபீடத்தின் மாதிரி வடிமாக, இந்த புத்தரின் சிலை வைக்கப்பட்டிருக்கும் குன்றின் மேல் மூன்று அடுக்கு பீடம் கட்டப்பட்டமையாகும். சீனாவில் உள்ள ஐந்து பிரமாண்டமான பௌத்தக் கோயில் கட்டடங்களில் "தியான் தான்" கோயில் கட்டமும் ஒன்றாகும். பெய்ஜிங் தியான் தான் பலிபீடத்தின் மாதிரி வடிவில், மூன்று மாடி வட்டவடிவான வலையங்கள் போன்ற அமைப்பின் மேல், வெண்கலத்திலான தாமரை பூவின் மேல் புத்தர் அமர்ந்திருப்பது போன்றே இச்சிலை கட்டப்பட்டுள்ளது. குன்றின் மீது முதலாவது வலைய மாடியில் ஆறு தேவர்களின் சிலைகள் புத்தருக்கு பணிவிடை செய்வதைப் போன்ற வடிவமைப்பில், புத்தரை நோக்கி விளக்கு, ஊதுவத்தி, பழம் போன்ற வெவ்வேறு பொருற்களை ஏந்தியவண்னம் கட்டப்பட்டுள்ளன. இந்த சிலைகளும் வெண்கலச் சிலைகளே ஆகும். புத்தரின் சிலையைச் சுற்றி, மூன்று வலையங்களாக அமைக்கப்பட்டிருக்கும் கட்டடத்தின் வெளிப்புறச் சுற்றில் ஏறிப் பார்வையிடலாம்.

நிலமட்டத்தில் இருந்து இந்த புத்தர் சிலையடிக்கு 268 படிகள் உள்ளன. இருப்பினும் அங்கவீனர்கள் மற்றும் வயோதிபர் போன்றோர் செல்வதற்கான வசதியும் உள்ளது. புத்தரின் மார்பில் பிள்ளையார் குறி இடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த புத்தரின் முகம் வடக்கு நோக்கியதாக இருக்கின்றது. குறிப்பாக ஏனைய புத்தர் சிலைகள் தெற்கு நோக்கியே கட்டப்படுவதாகவும், இச்சிலை மட்டும் வடக்கு நோக்கியதாக இருப்பது ஒரு சிறப்பு என கூறப்படுகின்றது.

இந்த புத்தரின் சிலை வைக்கப்பட்டுள்ள, மூன்று வலையங்கள் போன்ற அமைப்பின் வெளிப்பக்கச் சுற்றில் மக்கள் ஏறி பார்வையிடுவதற்காக அமைக்க்ப்பட்டிருந்தாலும். பீடத்தின் கீழ் பகுதி, அதாவது புத்தர் சிலை தாங்கி நிற்கும் அடித்தளம் மூன்று மாடிகளாக உள்ளன. அவைகளாவன: பிரபஞ்ச மண்டபம், பௌத்த சின்னங்கள் விற்கும் கடைகள், மற்றும் ஒன்றில் புத்தரின் புனித தாதுப்பொருள் போன்றவைகளும் உள்ளன. உள்ளே மங்கல நாதம் ஒலித்த வண்ணம் இருக்கும்.

போக்குவரத்து வசதி தொகு

 
நொங் பிங் தொங்கூர்தி பயனம்

இந்த புத்தர் சிலை இருக்கும் இடத்திற்கு செல்வோர் அநேகமானோர் சுற்றுலா பயணிகளாகவே உள்ளனர். இந்த இடத்திற்கு ஹொங்கொங் தீவில் இருந்து சொகுசு படகுச் சேவையில் லந்தாவு தீவு எனும் தீவில் முய் வூ எனும் இடத்தில் இறங்கி, அங்கிருந்து டயான் டான் புத்தர் சிலையடிக்கு செல்வதற்கான பேருந்து ஊடாக செல்ல முடியும். வாடகை மகிழுந்து சேவைகள் ஊடாகவும் செல்லலாம். லந்தாவு தீவு ஹொங்கொங்கில் உள்ள முதலாவது பெரிய தீவு ஆகும். அங்கிருந்து செல்லும் பேருந்து காடுகள் ஊடாக நீண்ட நேரப் பயனத்தின் ஊடாகவே செல்லும். இருப்பினும் ஹொங்கொங் அரசாங்கத்தால் 2005ம் ஆண்டு கட்டப்பட்ட நொங் பிங் தொங்கூர்தி சேவை தொடங்கியதில் இருந்து பெரும்பாலானோர் லந்தாவு தீவில் ஒரு நகரமான, டுங் சுங் எனும் இடத்திற்கு எம்டிஆர் தொடருந்து அல்லது பேருந்து ஊடாகச் சென்று, அங்கிருந்து தொங்கூர்தி ஊடாக செல்லவே விரும்புகின்றனர். இந்த தொங்கூர்தி போக்குவரத்து சேவை 5.7 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. அடர்ந்த காணகத்தின் மலைத்தொடர்கள் ஊடாக இச்சேவை அமைக்கப்பட்டுள்ளது. வானில் தொங்கிய வண்ணம், லந்தாவு தீவின் முழுமையான இயற்கை அழகையும் இரசித்த வண்ணம், மலைத்தொடர்கள் ஊடாக செய்யும் இப்பயண அனுபவம் உல்லாசப் பயணிகளையும், சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாகக் கவரும் ஒன்றாகும்.

படக்காட்சியகம் தொகு

 
புத்தரின் சிலை நோக்கிய நடைப் பாதை
 
புத்தர் சிலை இருக்கும் குன்றின் கீழ் நிலப்பகுதி
 
குன்றின் கீழுள்ள வட்ட பீடம்
 
குன்றின் முகப்பில் உள்ள காணப்படும் சீன பௌத்த வடிவப் பாத்திரச் சிலை
 
சூழலுள்ள அடர்ந்த காணகம்
 
குன்றில் இருந்து கீழ் காட்சி

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தியான்_தான்_புத்தர்&oldid=3637416" இலிருந்து மீள்விக்கப்பட்டது