திருகோணமலை தானைவைப்பு
திருகோணமலை தானைவைப்பு (Trincomalee Garrison) என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பிரட்ரிக் கோட்டை மற்றும் திருக்கோணமலை நகரத்தில் அமைந்துள்ள இலங்கை தரைப்படையின் இராணுவ தளங்கள் போன்றவறைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான பெயராகும். இங்கு உள்ள பெரிய இயற்கை துறைமுகம் காரணமாக, இது இலங்கையின் பழமையான இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றாக உள்ளது. இதனால் இது போர்த்துகேயர், இடச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், பிரித்தானியர் போன்றோரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது இது திருகோணமலை கோட்டை என அழைக்கப்பட்டது.[1]
திருகோணமலை தானைவைப்பு | |
---|---|
திருக்கோணமலை, கிழக்கு மாகாணம், இலங்கை | |
வகை | படைத்தளம் |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | இலங்கைப் படைத்துறை |
இட வரலாறு | |
பயன்பாட்டுக் காலம் |
???? – தற்போது |
காவற்படைத் தகவல் | |
காவற்படை | கஜபா படையணி |
திருகோணமலையில் இலங்கை தரைப்படையின் கிழக்கு மற்றும் 22வது டிவிசன் பாதுகாப்புப் படைத் தலைமையகம், இலங்கைக் கடற்படையின் கிழக்கு கடற்படை கட்டளையகம், இலங்கை வான்படையின் கிழக்கு மண்டல கட்டளையகம் ஆகியவை உள்ளன. இங்கு கடற்படை மற்றும் கடல்சார் அகாதமி மற்றும் சீனக்குடா விமானப்படை அகாதமி உட்பட இலங்கை ஆயுதப்படைகளின் பல பயிற்சி மையங்கள் உள்ளன. திருகோணமலைக் கோட்டையில் இரண்டாவது கஜபா படையணி உள்ளது. திருகோணமலையில் மருத்துமனை ஒன்றை கடற்படை பராமரித்துவருகிறது. சீனக்குடா வானூர்தி நிலையம் மற்றும் எஸ். எல். என் கப்பல்துறை ஆகியவை நகரத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளன.
வரலாறு
தொகுபண்டைய இலங்கை மன்னர்களின் காலத்திலிருந்து திருகோணமலை எப்போது துறைமுகமாகச் செயல்படத் தொடங்கியது அல்லது இராணுவ முக்கியத்துவம் பெற்றது என்பது தெரியவில்லை. கோகன்னா துறைமுகம் பற்றிய ஆரம்பகால குறிப்பு மகாவம்சத்தில் காணப்படுகிறது.
முதலாம் பராக்கிரமபாகு மன்னன் 12 ஆம் நூற்றாண்டில் பர்மாவின் மீதான வெற்றிகரமான படையெடுப்பைத் தொடங்க கோகன்னாவை (திருகோணமலை) தனது கிழக்குத் துறைமுகமாகப் பயன்படுத்தினான்.[2] திருகோணமலை ஒரு இயற்கையான ஆழ்மான துறைமுகமாகும். இது சீனா மற்றும் கிழக்காசியாவிலிருந்து வந்த மார்க்கோ போலோ, தொலெமி, மற்றும் கடல் வணிகர்களை ஈர்த்தது. ஆங்கிலேய கடல் கப்டனும், வரலாற்றாசிரியருமான இராபர்ட் நொக்சு திருகோணமலைக்கு அருகில் தற்செயலாக கரைக்கு வந்து 1659 இல் கண்டி மன்னரின் திசாவா (அதிகாரப்பூர்வ) இராணுவப் பிரிவினரிடம் சரணடைந்தார். எனவே, இது இலங்கைக்கும் வெளி உலகிற்கும் இடையிலான ஒரு முக்கியமான வணிக நகரமாக இருந்தது.
கடலோரப் பகுதிகளில் போர்த்துக்கேய காலனித்துவத்தின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, அவர்கள் 1623 இல் இங்கு ஒரு கோட்டையைக் கட்டினார்கள். இது 1639 இல் இடச்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. ஃபோர்ட் ஃப்ரெட்ரிக் என அழைக்கப்பட்ட இக்கோட்டை 1672 ஆம் ஆண்டில் பிரெஞ்சுக்காரர்களால் தாக்கப்பட்டு கைப்பற்றப்படும் வரை இடிக்கப்பட்டும், புனரமைக்கபட்டும் மாறுதல்களுக்கு உள்ளானது. 1784 இல் பாரிஸ் அமைதி உடன்பாட்டின் ஒரு பகுதியாக பிரெஞ்சுக்காரர்கள் இதை மீண்டும் இடச்சு கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைத்தனர். 1795 ஆம் ஆண்டில் இது ஆங்கிலேயர்களால் கையகப்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர்கள் 1948 வரை ஒரு காவல்படையை இங்கு பராமரித்துவந்தனர்.
திருகோணமலையின் இயற்கைத் துறைமுகம் காரணமாக ஃபோர்ட் ஃப்ரெட்ரிக்க் கோட்டை முக்கியத்துவம் கொண்டதாக இருந்தது. திருகோணமலை வழியாக, இந்தியத் துணைக்கண்டத்தின் சோழ மண்டலக் கடற்கரையின் கட்டுப்பாட்டை ஒரு வலுவான கடற்படைப் படை வழியாக பாதுகாக்க முடியும் என்று நம்பப்பட்டது. கர்னல் ஆர்தர் வெல்லஸ்லி (பின்னர் ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு) மற்றும் மிட்ஷிப்மேன் ஹோரஷியோ நெல்சன் (பின்னர் தி முதலாவது விஸ்கவுண்ட் நெல்சன்) ஆகியோர் இந்தியாவில் தங்கள் பணியின் போது வெவ்வேறு காலங்களில் திருகோணமலைக்கு விஜயம் செய்ததாகக் கூறப்படுகிறது. நெல்சன் பிரபு எச்.எம்.எஸ் சீஹார்ஸ் கப்பலில் மிட்ஷிப்மேனாக பணியாற்றிய போது இங்கு விஜயம் செய்தார், மேலும் இதை உலகின் மிகச்சிறந்த துறைமுகங்களில் ஒன்று என்று அழைத்தார். ஆர்தர் வெல்லஸ்லி பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் கர்னலாக இருந்தபோது இங்கு வந்துள்ளார். அவர் தங்கியிருந்த பங்களா ஃபிரெட்ரிக் கோட்டைக்குள் இருக்கும் வெல்லஸ்லி லாட்ஜ் என்று அழைக்கப்படுகிறது. இப்போது அது கஜபா படையணியின் 2வது (தன்னார்வ) பட்டாலியனின் அதிகாரியின் உணவகமாக உள்ளது.[3]
இரண்டாம் உலகப் போருக்கு முன்னர், பிரித்தானியரால் அரச விமானப்படைத் தளம், சீனக்குடா வானூர்தி நிலையம், அத்துடன் எரிபொருள் எண்ணெய் சேமிப்பு மற்றும் அரச கடற்படைக்கான ஆதரவு வசதிகள் போன்றவற்றை உருவாக்கபட்டன. சிங்கப்பூரின் வீழ்ச்சிக்குப் பின்னர், திருகோணமலை அரச கடற்படையின் கிழக்கு கடற்படை, டச்சு கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பறக்கும் படகுகளுக்கான துறைமுகமாகவும் மாறியது. 1942 ஏப்ரலில் இந்தியப் பெருங்கடல் தாக்குதலின் போது துறைமுகமும், வானூர்திநிலையமும் யப்பானிய கேரியர் கடற்படையால் தாக்கப்பட்டது.
1957 வரை, திருகோணமலை அரச கடற்படைக்கு ஒரு முக்கியமான தளமாக இருந்தது. மேலும் பிரித்தானிய கடற்படைத் தலைமையில் பணியாற்றிய பல பிரித்தானிய அதிகாரிகள் இங்கு பணிபுரிந்தவர்களே. 1950 களின் முற்பகுதியில் பிரித்தானிய அரசாங்கம் தங்கள் ஊழியர்களுக்காக குறிப்பாக கோட்டைக்குள் பங்களாக்களைக் கட்டியது. இந்த பங்களாக்கள் இன்னும் உள்ளன. அவை இலங்கை இராணுவ வீரர்களின் தங்குமிடங்களாக உள்ளன. ஒரு பங்களா குழுவுக்கு எடின்பர்க் டெரஸ் என்று பெயரிடப்பட்டது. பிரித்தானிய குடியிருப்பாளர்களின் குழந்தைகள் கடற்படை தளத்தின் ஒரு பகுதியாக இருந்த அரச கடற்படை பள்ளியில் பயின்றனர்.
இலங்கையின் விடுதலைக்குப் பிறகு 1957 இல் இங்கிருந்த கடற்படை மற்றும் விமான தளங்கள் இலங்கை அரசின் வசம் வந்தன. தற்காலத்தில் எஸ்.எல்.என்.எஸ் திஸ்சா மற்றும் எஸ்.எல்.என் தோக்கியார்ட் ஆகியவை இலங்கைக் கடற்படையால் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் சீனக்குடா வானூர்தி நிலையத்தில் இலங்கை வான்படை உள்ளது. இலங்கைத் தரைப்படையின் பாதுகாப்பு படைகளின் தலைமையகம்-கிழக்கு திருகோணமலையில் உள்ளது.
திருகோணமலை போர் கல்லறை, இலங்கையில் உள்ள ஆறு காமன்வெல்த் போர் கல்லறைகளில் ஒன்றாகும். இது காமன்வெல்த் போர் கல்லறைகள் ஆணையத்தின் சார்பாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தால் பராமரிக்கப்படுகிறது.
கடற்படை தளத்தில் குட் கோபுர நூதனசாலை என்று அழைக்கப்படும் கடற்படை அருங்காட்சியகம் உள்ளது. அருங்காட்சியகத்தின் பெயரானது துறைமுகம் மற்றும் விரிகுடாவின் 360 பாகை காட்சியை அளிக்கும் ஒரு மலையில் கட்டப்பட்ட காவற்கோபுரத்தைக் குறிக்கிறது.
பயிற்சி மையங்கள்
தொகு- கடற்படை மற்றும் கடல்சார் அகாதமி
- விமானப்படை அகாதமி, சீனா பே
- லாஜிஸ்டிக்ஸ் இராணுவ பள்ளி[4]
அலகுகள்
தொகுதிருகோணமலையை தளமாகக் கொண்ட அலகுகள்
- இலங்கை இராணுவம்
- 22 டிவிசன் - பலந்தன் புள்ளி
- 221 காலாட்படை படை - ஃபோர்ட் ஃப்ரெட்ரிக்
- 4 வது கவச படையணி, இலங்கை கவசப் படை - கிளாப்பன்பெர்க்
- 2 வது (தன்னார்வ) பட்டாலியன், கஜபா படையணி - ஃபோர்ட் ஃப்ரெட்ரிக்
- இலங்கை கடற்படை
- 3 வது ஃபாஸ்ட் பீரங்கி படகுகள் படை (3 எஃப்ஜிஎஸ்)
- 4 வது வேகமான தாக்குதல் புளோட்டிலா (4 FAF)
- 7 வது கண்காணிப்பு கட்டளை படை
- இலங்கை விமானப்படை
- எண் 1 பறக்கும் பயிற்சி பிரிவு
- எண் 14 படை
மேற்கோள்கள்
தொகு- ↑ The British Armies in World War Two: An Organisational History, vol 9:
- ↑ Sumana Saparamadu (4 March 2007). "Trincomalee". www.amazinglanka.com. பார்க்கப்பட்ட நாள் 30 April 2011.
- ↑ Lalin's Column: Obrigado (Thank you) Portugal
- ↑ First School of Logistics in the Army Founded; Maiden Course Inaugurated பரணிடப்பட்டது 2011-05-21 at the வந்தவழி இயந்திரம்