திருக்கரிப்பூர் சட்டமன்றத் தொகுதி
திருக்கரிப்பூர் சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: Thrikaripur State Assembly constituency, மலையாளம்: തൃക്കരിപ്പൂർ നിയമസഭാമണ്ഡലം), முன்பு நீலேசுவரம் தொகுதி கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] 2021 சட்டமன்றத் தேர்தலின்படி, தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியின் எம். ராஜகோபாலன் உள்ளார்.[2]
உட்பட்ட பகுதிகள்
தொகுதிருக்கரிப்பூர் சட்டமன்றத் தொகுதியின் தற்போதுள்ள உள்ளூராட்சி பிரிவுகளை பின்வரும் பட்டியல் கொண்டுள்ளது: [3][4]
எண். | பெயர் | நிலை (கிராம ஊராட்சி/நகராட்சி) | வட்டம் |
---|---|---|---|
1 | நீலேசுவரம் | நகராட்சி | ஹோஸ்துர்க் |
2 | செறுவத்தூர் | கிராம ஊராட்சி | ஹோஸ்துர்க் |
3 | படன்ன | கிராம ஊராட்சி | ஹோஸ்துர்க் |
4 | பீலிக்கோடு | கிராம ஊராட்சி | ஹோஸ்துர்க் |
5 | திருக்கரிப்பூர் | கிராம ஊராட்சி | ஹோஸ்துர்க் |
6 | வலியபறம்பு | கிராம ஊராட்சி | ஹோஸ்துர்க் |
7 | கய்யூர்-சீமேனி | கிராம ஊராட்சி | ஹோஸ்துர்க் மற்றும் வெள்ளரிக்குண்டு |
8 | கிழக்கு எளேரி | கிராம ஊராட்சி | வெள்ளரிக்குண்டு |
9 | மேற்கு எலேரி | கிராம ஊராட்சி | வெள்ளரிக்குண்டு |
2008-ஆம் ஆண்டு மறுசீரமைப்பிற்கு முன்பு திருக்கரிப்பூர், கிழக்கு எளேரி, மேற்கு எளேரி, கய்யூர்-சீமேனி, பீலிக்கோடு, படன்ன, வலியபறம்பு ஆகிய ஊராட்சிகளும், கண்ணூர் மாவட்டத்தில் தளிப்பறம்பு வட்டத்தில் உள்ள கரிவெள்ளூர்-பெரளம், பெரிங்ஙோம்-வயக்கரை, காங்கோல்-ஆலப்படம்பு ஆகிய ஊராட்சிகளையும் கொண்டிருந்தது. [5]
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஇத்தொகுதியின் கேரள சட்டமன்ற உறுப்பினராக இருந்த அனைவரும் பின்வருமாறு:
நீலேசுவரம் தொகுதி
தேர்தல் | சட்டமன்றம் | உறுப்பினர் | கட்சி | பதவிக்காலம் | |
---|---|---|---|---|---|
1957 | 1வது | ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | 1957 – 1960 | |
1960 | 2வது | சி. குன்கி கிருஷ்ணன் நாயர் | இந்திய தேசிய காங்கிரசு | 1960 – 1965 | |
1967 | 3வது | வி. வி. குஞ்சம்பு | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 1967 – 1970 | |
1970 | 4வது | 1970 – 1977 |
திருக்கரிப்பூர் தொகுதி
தேர்தல் | சட்டமன்றம் | உறுப்பினர் | கட்சி | பதவிக்காலம் | |
---|---|---|---|---|---|
1977 | 5வது | பி. கருணாகரன் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 1977 – 1980 | |
1980 | 6வது | 1980 – 1982 | |||
1982 | 7வது | ஓ. பரதன் | 1982 – 1987 | ||
1987 | 8வது | எ. கி. நாயனார் | 1987 – 1991 | ||
1991 | 9வது | 1991 – 1996 | |||
1996 | 10வது | கே. பி. சதீசு சந்திரன் | 1996 – 2001 | ||
2001 | 11வது | 2001 – 2006 | |||
2006 | 12வது | கே. குஞ்ஞிராமன் | 2006 – 2011 | ||
2011 | 13வது | 2011 – 2016 | |||
2016 | 14வது | எம். ராஜகோபாலன் | 2016 - 2021 | ||
2021 | 15வது | பதவியில் |
தேர்தல் முடிவுகள்
தொகு(±%) என்பது முந்தைய தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறது.
2021
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% |
---|---|---|---|---|
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | எம். ராஜகோபாலன் | 86151 | 53.71 | 2.78 |
கேரள காங்கிரசு | எம். பி. ஜோசப் | 60014 | 37.41 | |
பாரதிய ஜனதா கட்சி | சிபின் டி வி | 10961 | 6.83 | ▼0.09 |
இந்திய சமூக மக்களாட்சி கட்சி | லியாகதலி பி | 1211 | 0.75 | |
இந்திய நலன் கட்சி | டி. மகேசு | 817 | 0.51 | |
நோட்டா | நோட்டா | 558 | 0.35 | |
வெற்றி விளிம்பு | 26137 | 16.3 | 5.41 | |
பதிவான வாக்குகள் | 1,60,408 | 78.95 | ▼2.21 |
2006-2011
தொகுஆண்டு | மொத்த வாக்காளர்கள் | வாக்களித்தோர் | வென்றவர் | பெற்ற வாக்குகள் | முக்கிய எதிராளி | பெற்ற வாக்குகள் | மற்றவர்கள் |
---|---|---|---|---|---|---|---|
2006 [7] | 185121 | 144994 | கே. குஞ்ஞிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் | 81050 | ஏ. வி. வாமனகுமார், காங்கிரசு | 57222 | டி. குஞ்ஞிராமன், BJP |
2011 [8] | 169019 | 135988 | கே. குஞ்ஞிராமன், மார்க்சிஸ்ட் | 67871 | கே. வி. கங்காதரன், காங்கிரசு | 59106 | டி. ராதாகிருஷ்ணன், பி.ஜே.பி |
இதையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-04.
- ↑ "Members Profile". www.niyamasabha.nic.in. Archived from the original on 2024-01-05. பார்க்கப்பட்ட நாள் 2024-02-22.
- ↑ Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 719
- ↑ "Local Self Governments in Assembly Constituencies of Kasaragod District".
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-11-21. பார்க்கப்பட்ட நாள் 2014-07-19.
- ↑ "Trikaripur Assembly Election Results 2021".
- ↑ http://www.keralaassembly.org/kapoll.php4?year=2006&no=5
- ↑ http://www.keralaassembly.org/election/assemblypoll.php?year=2011&no=5[தொடர்பிழந்த இணைப்பு]