திருத்தியமலை
திருதேசமலை அல்லது திருத்தியமலை (Thiruthiyamalai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
திருத்தியமலை
Thiruthiyamalai திருதேசமலை | |
---|---|
நாடு | இந்தியா |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
வட்டம் | முசிறி |
மாநிலம் | தமிழ்நாடு |
நேர வலயம் | இசீநே |
நிலவியல்
தொகுதிருத்தியமலை கிராமத்திற்கு தெற்கே காவிரி ஆறும் வடக்கே கொல்லி மலையும் அமைந்துள்ளது.
திருத்தியமலை முசிறியின் வடமேற்கில் 15 கி.மீ. தொலைவிலும், துறையூரிலிருந்து19 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள மற்ற பகுதிகளாக மண்ணச்சநல்லூர் 15 கி.மீ. தொலைவிலும், பெரமங்கலம் 10 கி.மீ. தொலைவிலும் மூவனூர் 3 கி.மீ. தொலைவிலும் தண்டலை புதூர் (த. புதூர்) 5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மாவட்ட தலைநகரான் திருச்சிராப்பள்ளி 49 கி.மீ. தொலைவிலும் மாநிலத் தலைநகரான ள்ளது. திருத்தியமலை முசிறியின் வடமேற்கில் 15 கி.மீ. தொலைவிலும், துறையூரிலிருந்து19 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள மற்ற பகுதிகளாக மண்ணச்சநல்லூர் 15 கி.மீ. தொலைவிலும், பெரமங்கலம் 10 கி.மீ. தொலைவிலும் மூவனூர் 3 கி.மீ. தொலைவிலும் தண்டலை புதூர் (த. புதூர்) 5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மாவட்ட தலைநகரான திருச்சிராப்பள்ளி 49 கி.மீ. தொலைவிலும் மாநிலத் தலைநகரான சென்னை வடகிழக்கில் 300 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
ஏகபுட்ப பிரியநாதர் கோயில்
தொகுதிருதேசமலையில் சுமார் 5,000 ஆண்டுகள் பழமையான இந்து கோயிலான தாயினும் நல்லாள் சமேத ஸ்ரீஏகபுட்ப பிரியநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.[1] இது இந்துக் கடவுளான சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தலம். இக்கோயிலில் குடிகொண்டுள்ள இறைவி சிறீரீதாயினும்நல்லாள் ஆவார். இப்பழமையான திருக்கோயில் ஆதித்த சோழன், விக்ரம்சோழர், இரண்டாம் ராஜேந்திர சோழர் முதலானோரால் பராமரிக்கப்பட்டு 1883-ல் சென்னப்ப நாயக்கரால் புதுப்பிக்கப்பட்டது.[2] சிறு குன்றின் மீது அமைந்துள்ள இறைவனை ஏழு திங்கட்கிழமைகளில் தாமரைப் பூவுடன் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதிகம்.[3][4]
ஆளுகை
தொகுதிருதேசமலை, இராயப்பட்டி, பாலப்பட்டி, தி. மேட்டுப்பட்டி, மணலி அயிட்டம்பட்டி, தி. அய்யம்பாளையம், கொல்லப்பட்டி, மற்றும் பச்சனம்பட்டி (மேலூர் மற்றும் கீழூர்) ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய திருத்தியமலை கிராம ஊராட்சி இங்குச் செயல்படுகிறது.
சுகாதார பராமரிப்பு
தொகு- அரசு மருத்துவமனை, மூவனூர் - 3 கி.மீ.
- அரசு மருத்துவமனை, தி. புதூர் - 5 கி.மீ.
- அரசு மருத்துவமனை, திருச்சி - 48 கி.மீ.
கல்வி
தொகுபள்ளிகள்
தொகு- அரசு மேல்நிலைப்பள்ளி, திருத்தியமலை
- அரசு மேல்நிலைப் பள்ளி, தி. புதூர்
- அரசு மேல்நிலைப் பள்ளி, மூவனூர்
கல்லூரிகள்
தொகு- அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, முசிறி
- முசிறி தொழில்நுட்ப நிறுவனம், முசிறி
- அரசு பல்நுட்ப கல்லூரி, திருச்சி
- சேஷசாயி தொழில்நுட்ப நிறுவனம், திருச்சி
- ஸ்ரீ அங்காளம்மன் பொறியியல் கல்லூரி, திருச்சி
- ஸ்ரீ ஜெயராம் பொறியியல் கல்லூரி, கரட்டம் பட்டி
- சுதர்சனா பல்நுட்பக் கல்லூரி, துறையூர்[5]
போக்குவரத்து
தொகுபேருந்து
தொகுதிருச்சி, முசிறி, பெரமங்கலம், துறையூர், புலிவலம், சிறுகம்பூர், டி. புதூர் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளும் அரசுப் பேருந்துகள் சேவை மூலம் இணைக்கப்பட்டுள்ளன. அருகிலுள்ள பேருந்து நிலையங்கள் திருச்சி, முசிறி மற்றும் துறையூர் ஆகும்.
தொடர்வண்டி சேவை
தொகுதிருத்தியமலைக்கு அருகிலுள்ள தொடருந்து நிலையம் திருச்சிராப்பள்ளி சந்திப்பு ஆகும். திருச்சியிலிருந்து திருத்தியமலைக்கு தொடருந்து போக்குவரத்து இல்லை.
வானூர்தி
தொகுதிருத்தியமலைக்கு அருகிலுள்ள வானூர்தி நிலையம், திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் (TRZ) ஆகும். இது திருத்தியமலையிலிருந்து 48 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ilamurugan (2018-04-20). "Tamilnadu Tourism: Eka Pushpa Priya Nathar Swamy Temple, Thiruthiyamalai, Trichy". Tamilnadu Tourism. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
- ↑ "பிரம்மஹத்தி தோஷம் போக்கும் திருத்தியமலை ஏகபுஷ்ப பிரியநாதர் திருக்கோயில்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2023-02-03.
- ↑ Jayabalan, Suriyakumar. "திருத்தியமலை ஸ்ரீ ஏக புஷ்ப பிரியநாதர் கோயில்". Tamil Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2023-02-03.
- ↑ https://www.naavaapalanigotrust.com/index.php/kovils/tn-kovil-list/musiri/thiruthiyamalai-sivan
- ↑ "GHS, THIRUTHIYAMALAI Thiruthiyamalai Musiri Tiruchirappalli (Tamil Nadu) | StudyApt". www.studyapt.com. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.