திலோத்தமா சோம்

இந்திய நடிகை

திலோத்தமா சோம் ( Tillotama Shome ) (பிறப்பு 25 ஜூன் 1979) ஓர் இந்திய நடிகை ஆவார். இவர், பல சுயாதீன திரைப்பட தயாரிப்புகளில் தனது பணிக்காக அறியப்பட்டவர். 2021 ஆம் ஆண்டில், 66வது பிலிம்பேர் விருதுகளில் சர் திரைப்படத்தில் ஒரு வீட்டுப் பணிப்பெண்ணாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான (விமர்சகர்கள்) பிலிம்பேர் விருதை வென்றார்.

திலோத்தமா சோம்

பிறப்பு25 சூன் 1979 (1979-06-25) (அகவை 45)[1]
கொல்கத்தா, மேற்கு வங்காளம், India
பணிநடிகை
வாழ்க்கைத்
துணை
குணால் ரோசு (தி. 2015)
[2]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

திலோத்தமா சோம், கொல்கத்தாவில் அனுபம் மற்றும் பைசாகி சோம் ஆகியோருக்கு பிறந்தார்.[3] இவரது தந்தை இந்திய வான்படையில் இருந்ததால் அவருடன் இவரும் இந்தியா முழுவதும் செல்ல வேண்டியிருந்தது.[4]

தொழில்

தொகு

திலோத்தமா சோம், புதுதில்லி, சீமாட்டி சிறீ ராம் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர், அர்விந்த் கௌரின் அசுமிதா எனும் நாடகக் குழுவில் சேர்ந்தார்.[5] அவர் 2004 இலையுதிர்காலத்தில் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கல்வி அரங்கில் முதுகலை திட்டத்திற்காக நியூயார்க்கிற்குச் சென்றார். பிப்ரவரி 2008 இல் விடுமுறையில் மும்பை திரும்பும்வரை அங்கேயே இருந்தார். அதன்பிறகு, நியூயார்க்கில் சில சிறந்த திட்டங்களை முடித்த பிறகு, மே 2008 இல் இந்தியா திரும்பி மும்பையில் தங்கினார். நியூயார்க்கில், உயர் பாதுகாப்பு அமெரிக்க சிறைச்சாலையில் இருந்த கொலைக் குற்றவாளிகளுக்கு நாடகங்களை நடத்த கற்பித்தார்.[6][7]

இவர் மீரா நாயரின் மான்சூன் வெட்டிங் என்ற திரைப்படத்தில் ஆலிஸாக அறிமுகமானார், புளோரியன் கேலன்பெர்கர் இயக்கிய ஷேடோஸ் ஆஃப் டைம் ( ஷாட்டன் டெர் ஜீட் ) படத்தில் தீபாவாக நடித்தார். கிளாரி மெக்கார்த்தியின் ஆத்திரேலிய திரைப்படமான தி வெயிட்டிங் சிட்டியில் கன்னியாஸ்திரியாக நடித்தார்.[6] மகாசுவேதா தேவியின் புதினத்தை அடிப்படையாகக் கொண்ட இட்டாலோ ஸ்பினெல்லியின் கங்கோர் திரைப்படத்தில், ஒரு சமூக சேவகியாக நடித்தார்.[8] இவர் கௌசிக் முகர்ஜியின் தாஷர் தேஷி படத்திலும் பணியாற்றினார்.[9] திபாகர் பானர்ஜி இயக்கிய ஷாங்காய் என்ற இந்தி அரசியல் அதிரடித் திரைப்படத்தில் திருமதி அஹ்மதியாக நடித்தார். ஷாங்காய் ரெடிஃப், இவரது நடிப்பைப் பற்றி இவ்வாறு எழுதியது: "இந்தித் திரைப்படத்தில் திலோத்தமா சோம், இந்த ஆண்டின் மிகவும் இதயத்தை கவர்ந்த கதாபாத்திரங்களில் ஒன்றை உருவாக்கினார்".[10]

லிட்டில் பாக்ஸ் ஆஃப் ஸ்வீட்ஸில் லாரா (மேனகா தாஸ் இயக்கியது),[11] லாங் ஆஃப்டரில் ஜெயா (குறும்படம், ஆஃபியா நதானியேல் இயக்கியுள்ளார்) பட்டர்ஃபிளையில் மிரால் (தனுஜ் சோப்ரா இயக்கியது) இவரது மற்ற கதா பாத்திரங்களில் அடங்கும்.

கிஸ்ஸாவில் சிறுவனாக வளர்க்கப்படும் பெண்ணாக இவரது நடிப்பு ஏழாவது அபுதாபி திரைப்பட விழாவின் (ADFF) நியூ ஹொரைசன்ஸ் போட்டியில் சிறந்த நடிகைக்கான பட்டத்தை வென்றது. நார்வே நடிகை ஜூலியா வைல்ட்சுட்டுடன் இந்த பட்டத்தை பகிர்ந்து கொண்டார்.[12]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

திலோத்தமா சோம் ஜெயா பச்சனின் மருமகன் குணால் ரோஸை மணந்தார், இதனால் இவர் ஜெயா மற்றும் அமிதாப் பச்சனின் மருமகளாகிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Sana Farzeen (29 June 2023). "Tillotama Shome says she faced many moments of 'deep despair' in career: 'I became bitter, angry and cynical'". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 6 July 2023.
  2. "Bachchan family attends Tillotama Shome's wedding ceremony". 4 April 2015.
  3. Ghosh, Ananya (30 November 2022). "The Accidental Actor: Tillotama Shome". Man's World. Archived from the original on 5 July 2023. பார்க்கப்பட்ட நாள் 5 July 2023.
  4. "Social Media Star of The Week: Tillotama Shome". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-01-13. Archived from the original on 8 July 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-07-08 – via PressReader.
  5. "Alice in thunderland; Culture". Times Crest. 9 June 2012. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 26 June 2013.
  6. 6.0 6.1 "I just want to act: Tillotama Shome – Entertainment – DNA". Daily News and Analysis. Archived from the original on 22 August 2013. பார்க்கப்பட்ட நாள் 26 June 2013.
  7. "Not Just the 'Monsoon Wedding' Girl – Grazia India". Grazia.co.in. 1 January 1970. Archived from the original on 23 May 2016. பார்க்கப்பட்ட நாள் 26 June 2013.
  8. "Alice of Monsoon Wedding is back". The Indian Express. 2 December 2010. Archived from the original on 5 July 2023. பார்க்கப்பட்ட நாள் 26 June 2013.
  9. Priyanka Dasgupta (25 November 2011). "I did sword fighting in Tasher Desh: Tillotama Shome". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 28 June 2013. பார்க்கப்பட்ட நாள் 26 June 2013.
  10. "Ten Most Memorable Movie Moments of 2012". Rediff.com. 2 January 2013. Archived from the original on 3 June 2013. பார்க்கப்பட்ட நாள் 26 June 2013.
  11. Little Box of Sweets பரணிடப்பட்டது 6 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம், தி கார்டியன், 15 August 2008
  12. [1] பரணிடப்பட்டது 2 நவம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலோத்தமா_சோம்&oldid=4175364" இலிருந்து மீள்விக்கப்பட்டது