திவாகர் வாசு

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

திவாகர் வாசு (Divakar Vasu) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு முதல்தர துடுபாட்ட வீர்ர் ஆவார். இவர் 1967 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி பிறந்தார். 1988/1989 மற்றும் 1998/1999 காலப்பகுதியில் வாசு தமிழ்நாட்டிற்காக விளையாடியுள்ளார். விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இவர் ஒரு துடுப்பாட்ட பயிற்சியாளராக வாழ்ந்து வருகிறார்.

திவாகர் வாசு
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு11 திசம்பர் 1967 (1967-12-11) (அகவை 57)
குன்னூர், தமிழ்நாடு, India
மட்டையாட்ட நடைவலது கை பழக்கம்
பந்துவீச்சு நடைஇட்து கை மிதவேகப் பந்து வீச்சு
பங்குசகலதுறை வீர்ர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1988/89–1998/99தமிழ்நாடு
2003/04அசாம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை FC List A
ஆட்டங்கள் 76 41
ஓட்டங்கள் 3,001 527
மட்டையாட்ட சராசரி 35.72 21.95
100கள்/50கள் 3/19 0/2
அதியுயர் ஓட்டம் 148 66
வீசிய பந்துகள் 15,234 2,054
வீழ்த்தல்கள் 240 50
பந்துவீச்சு சராசரி 25.11 26.94
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
14 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
2 n/a
சிறந்த பந்துவீச்சு 8/114 4/36
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
57/– 12/–
மூலம்: ESPNcricinfo, 10 சனவரி 2016

வாழ்க்கை

தொகு

ஒரு மட்டையாளராகத் தன்னுடைய கிரிக்கெட் வாழ்வைத் தொடங்கிய வாசு கிரிக்கெட் விளையாட்டின் சகலதுறைகளையும் கற்றுக் கொண்டார். இடதுகை மிதவேகப் பந்து வீச்சாளராகப் பந்து வீசீனார். 1993 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஓர் இருசக்கர வாகன விபத்துக்குப் பின்னர் வாசு தன்னுடைய பந்து வீசும் முறையை இடதுகை மரபுவழா சுழல் பந்து வீச்சாக மாற்றிக் கொண்டார். விபத்தில் இவருடைய இடது கணுக்காலில் மூன்று எலும்புகள் முறிந்தன. 1995 ஆம் ஆண்டு வாசுவின் இடது கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டது[1].

1988 முதல் 1999 ஆம் ஆண்டு வரை பதினோரு பருவங்களாக வாசி தமிழ்நாடு அணிக்காக விளையாடியிருக்கிறார். 2003-2004 ஆண்டு மட்டும் இவர் அசாம் அணிக்காக விளையாடினார். தன்னுடைய கிரிக்கெட் வாழ்வில் வாசு 76 முதல் தரப் போட்டிகளிலும் எனப்படும் 41 பன்னாட்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். மேலும், வாசு தெற்கு மண்டல கிரிக்கெட் அணியிலும், கிரிக்கெட் மன்ற தலைவர் XI அணியிலும் விளையாடியுள்ளார். 1994-1995 ஆம் ஆண்டு கால இரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் 17.94 சராசரியுடன் 34 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது அதிகபட்ச விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனை படைத்தார்[2]. வாசு கிரிக்கெட் விளையாட்டின் சகலதுறை வல்லுநராக இருந்தபோதிலும் தேசிய அணிக்காக அவர் தேர்ந்தெடுக்கப்படவேயில்லை. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் தரப் போட்டிகளோடு வாசுவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து போனது.

அனைத்துலக கிரிக்கெட் அமைப்பின் பந்துவீச்சுப் பயிற்சியாளராவதற்கு முன்பும், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐ.பி.எல்[3] போட்டிகளின் பயிற்சியாளராவதற்கு முன்பும் தேசிய கிரிக்கெட் சங்கத்தில் வாசு ஒரு பயிற்சியாளராக பணிபுரிந்தார்[4]. 2015 ஆம் ஆண்டு வாசு எம். வெங்கட்டரமணாவுடன் இணைந்து பிராக்யன் ஓய்சாவின் பந்துவீச்சு முறையினை திருத்தி அமைப்பதில் பங்கேற்றார்[5].

மேற்கோள்கள்

தொகு
  1. "Cricket is where his heart is". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 10 January 2016.
  2. "Bowling in Ranji Trophy 1994/95 (Ordered by Wickets)". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 10 January 2016.
  3. Dinakar, S. "Bowlers called for illegal action need counselling: Vasu". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 10 January 2016.
  4. "Make U-15 training stronger". IBNLive. பார்க்கப்பட்ட நாள் 10 January 2016.
  5. "Pragyan Ojha's Bowling Action Cleared by BCCI". NDTV. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திவாகர்_வாசு&oldid=3558602" இலிருந்து மீள்விக்கப்பட்டது