தி-கிரேசு அட்கின்சன்
கிரேசு அட்கின்சன் ( Ti-Grace Atkinson ) (பிறப்பு நவம்பர் 9, 1938), தி-கிரேஸ் அட்கின்சன் என்றும் நன்கு அறியப்பட்ட இவர், அமெரிக்காவின் தீவிர பெண்ணிய ஆர்வலரும், எழுத்தாளரும் மற்றும் தத்துவவாதியுமாவார். [2]
தி-கிரேசு அட்கின்சன் | |
---|---|
பிறப்பு | கிரேசு அட்கின்சன் நவம்பர் 9, 1938 பாடன் ரூஜ், அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
கல்வி |
|
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1968–1974 |
அமைப்பு(கள்) | தி பெமினிஸ்ட் (1968–1971) |
அரசியல் இயக்கம் | தீவிர பெண்ணியம் |
வாழ்க்கைத் துணை | சார்லசு லீட்சு சார்ப்லெசு [1](தி. 1956; ம.மு. 1962) |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுஅட்கின்சன் நவம்பர் 9, 1938 அன்று லூசியானாவில் உள்ள பேடன் ரூஜில் ஒரு முக்கிய காஜூன் குடியரசுக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை, பிரான்சிசு டெக்கர் அட்கின்சன், ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனத்தில் இரசாயனப் பொறியாளராக இருந்தார். மேலும் இவரது தாயார் தெல்மா அட்கின்சன் ஒரு இல்லத்தரசி ஆவார்.[3] [4] "தி" என்ற எழுத்துடன் இவரது பாட்டியின் பெயரான கிரேசு என்பதையும் சேர்த்து இவருக்கு பெயர் வைத்தனர். "தி" காஜுன் பிரஞ்சு மொழியில் "சிறியது" என்று பொருள்.[5] இவர் தனது குழந்தை பருவத்தில் பல ஊர்களுக்கு பயணம் செய்தார். மேலும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பல பள்ளிகளில் பயின்றார். அட்கின்சன் தனது உயர்நிலைப் பள்ளி காதலரான ஐக்கிய அமெரிக்க வான்படைத் தளபதி சார்லசு லீட்சு சார்ப்லெசு என்பவரை மணந்தார். பின்னர் 1962 இல் விவாகரத்து செய்தார் [3]
அட்கின்சன் 1964 இல் பென்சில்வேனியா நுண்கலை அகதாமியிலிருந்து நுண்கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பிலடெல்பியாவில் இருந்தபோது, இவர் காண்டெம்ப்ரை ஆர்ட் என்ற கலை நிறுவனத்தை நிறுவ உதவினார். மேலும், அதன் முதல் இயக்குநராகவும் செயல்பட்டார். அட்கின்சன் ஆர்ட்நியூஸ் என்ற பருவகால இதழின் சிற்ப விமர்சகராகவும், ஓவியராகவும் இருந்தார். மேலும் எலைன் டி கூனிங் போன்ற கலைஞர்களுடன் தொடர்பிலும் இருந்தார். [6] 1969 ஆம் ஆண்டில், இலண்டன் சண்டே டைம்ஸ் என்ற பத்திரிக்கையில் டயான் அர்பஸ் என்பவர் எடுத்த அட்கின்சனின் புகைப்படம் வெளியிடப்பட்டது.[7] பின்னர் இவர் நியூயார்க் நகரத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு 1967 இல், இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முனைவர் திட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அங்கு இவர் தத்துவஞானியும் மற்றும் கலை விமர்சகருமான ஆர்தர் டான்டோவிடம் படித்தார்.[8] [9] [10] இவர் 1990 இல் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆனால் தனது ஆய்வுக் கட்டுரையை முடிக்கவில்லை.
அட்கின்சன் பின்னர் தத்துவஞானி கோட்லோப் ப்ரீஜின் என்பவரிடம் படிக்க சென்றார். பிராட் நிறுவனம், கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகம் மற்றும் டப்ட்ஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இவர் பல ஆண்டுகளாக கற்பித்தார். [11]
பெண்ணியம்
தொகுஒரு இளங்கலைப் பட்டதாரியாக, அட்கின்சன் சிமோன் த பொவாரின் இரண்டாம் பாலினம் எனும் நூலைப் படித்தார். மேலும் பொவாருக்கு கடிதங்க்ளையும் எழுதினார். அவர் பெட்டி ப்ரீடனைத் தொடர்பு கொள்ளுமாறு பரிந்துரைத்தார். [12] அட்கின்சன் பெண்களுக்கான தேசிய அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரானார் மற்றும் 1967 இல் நியூயார்க் அமைப்பின் தலைவரானார்.[13]
நூல் பட்டியல்
தொகுபுத்தகங்கள்
தொகு- Amazon Odyssey (1974)
துண்டுப்பிரசுரங்கள் மற்றும் புத்தக அத்தியாயங்கள்
தொகு- "The Institution of Sexual Intercourse" (pamphlet, 1968, published by The Feminists)
- "Vaginal orgasm as a mass hysterical survival response" (pamphlet, 1968, published by The Feminists)
- "Radical Feminism" (pamphlet, 1969, published by The Feminists)
- "Radical Feminism and Love" (pamphlet, 1969, published by The Feminists)
- Linden, Robin Ruth (1982). "Why I'm against S/M liberation". Against Sadomasochism: A Radical Feminist Analysis. Frog in the Well. pp. 90–92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9603628-3-5. இணையக் கணினி நூலக மைய எண் 7877113.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Collection: Papers of Ti-Grace Atkinson, 1938–2013, Harvard Library.
- ↑ Wilkinson, Sue; Kitzinger, Celia (1993). Heterosexuality: A Feminism and Psychology Reader. Sage Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8039-8823-0.
- ↑ 3.0 3.1 Carll, Johanna; Dalton, Margaret (2017). "Papers of Ti-Grace Atkinson, 1938-2013". Schlesinger Library, Radcliffe Institute. பார்க்கப்பட்ட நாள் January 23, 2024.
- ↑ Kwon, Sarah (2016-01-06). "Ti-Grace Atkinson, at home in Cambridge, adds cause to radical feminism: Housing". Cambridge Day (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-23.
- ↑ "An 'Oppressed Majority' Demands Its Rights", by Sara Davidson, Life Magazine, 1969. Retrieved February 16, 2008.
- ↑ Fahs, Breanne (2011). "Ti-Grace Atkinson and the Legacy of Radical Feminism". Feminist Studies 37 (3): 561–590. பன்னாட்டுத் தர தொடர் எண்:0046-3663. https://www.jstor.org/stable/23069922.
- ↑ Rabinowitz, Paula (2001). "Medium Uncool: Women Shoot Back; Feminism, Film and 1968 — A Curious Documentary". Science & Society 65 (1): 72–98. doi:10.1521/siso.65.1.72.20894. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8237. https://www.jstor.org/stable/40403885.
- ↑ Lynne E. Ford, "Ti-Grace Atkinson" entry, Encyclopedia of Women and American Politics, Infobase Publishing, January 1, 2009, pp. 40–41, accessed August 2013.
- ↑ Atkinson, Ti-Grace; Douglas, Carol Anne (1979). "interview: ti-grace atkinson: amazon continues odyssey". Off Our Backs 9 (11): 2–23. பன்னாட்டுத் தர தொடர் எண்:0030-0071. https://www.jstor.org/stable/25793180.
- ↑ "Conference, Photo Exhibit To Mark 40th Anniversary of Spring '68". Columbia College Today. March–April 2008. பார்க்கப்பட்ட நாள் January 23, 2024.
- ↑ "Ti-Grace Atkinson", Tufts University Philosophy Faculty page, Wayback Machine archive, accessed August 31, 2014.
- ↑ O'Dea, Suzanne. From Suffrage to the Senate: an encyclopedia of American women in politics, ABC-CLIO, Inc. 1999.
- ↑ Movement Chronology, Civil War-Present, wfu.edu. Accessed January 20, 2022.
வெளி இணைப்புகள்
தொகு- Ti-Grace Atkinson speaks to the Feminist Art program at the California State University at Fresno. Retrieved April 23, 2007
- Papers of Ti-Grace Atkinson, 1938-2013. Schlesinger Library, Radcliffe Institute, Harvard University.