தி கார் மாகாணம்

ஈராக்கின் மாகாணம்

தி கர் கவர்னரேட் அல்லது தி கர் மாகாணம் (Dhi Qar Governorate அரபு மொழி: ذي قار ) என்பது தெற்கு ஈராக்கில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தின் தலைநகராக நசிரியா உள்ளது. 1976 க்கு முன்னர் இந்த மாகாணம் முந்தாஃபிக் மாகாணம் என்று அழைக்கப்பட்டது. பண்டைய ஈராக்கிய நாகரிகமான சுமேரியாவின் மையப்பகுதியாக தி கார் மாகாணம் இருந்தது, மேலும் இந்த மாகாணத்தில் ஊர், எரிது, லகாசு, லார்சா, கிர்சு, உம்மா, பேட்-திபிரா போன்ற வரலாற்றுசிறப்புமிக்க இடிபாடுகள் அடங்கியுள்ளன. மாகாணத்தின் தெற்கு பகுதி மெசொப்பொத்தேமியாவின் சதுப்பு நிலங்களால் சூழப்பட்டுள்ளது.

தி கார் மாகாணம்
ذي قار
Dhi Qar Province
மாகாணம்
Location of தி கார் மாகாணம்
ஆள்கூறுகள்: 31°14′N 46°19′E / 31.233°N 46.317°E / 31.233; 46.317ஆள்கூறுகள்: 31°14′N 46°19′E / 31.233°N 46.317°E / 31.233; 46.317
நாடு ஈராக்
தலைநகரம்நசிரியா
ஆளுநர்யஹியா நாசேரி
பரப்பளவு
 • மொத்தம்12,900 km2 (5,000 sq mi)
மக்கள்தொகை (2012 [1])
 • மொத்தம்2,000,000
ம.மே.சு. (2017)0.665[2]
medium

அரசுதொகு

  • ஆளுநர்: யஹியா நாசேரி
  • துணை ஆளுநர்: அகமது அல்-ஷேக் தாஹா [2]
  • மாகாணக் குழுத் தலைவர் (ஜி.சி.சி): இஹ்ஸான் அல்-தை [3]

நவீன தி கார்தொகு

மாகாணமானது அல்-ரிஃபாய், கலாத் சுக்கர், ஆஷ் சத்ரா, அல்-கராஃப், சுக் அல்-ஷுயுக், கமிசியா, அல்-சிபாயிஷ் போன்ற நகரங்களை உள்ளடக்கி உள்ளது.

1990 களின் நடுப்பகுதியில் ஆளுநராக இருந்தவரான தாஹிர் ஜலீல் ஹபுஷ் அல்-திக்ரிதி, பின்னர் அவர் நாட்டின் காவல்துறைத் தலைவராகவும், 1999 இல் ஈராக் புலனாய்வு சேவையின் இயக்குநராகவும் இருந்தார். [3]

மக்கள்வகைப்பாடுதொகு

மாகாணத்திம் மக்கள் தொகையானது ஏறக்குறைய 2,000,000 ஆகும். இவர்களில் முக்கியமாக சியா அராபியர் உள்ளனர். தெற்கு சதுப்பு நிலப்பகுதியானது பாரம்பரியமாக சதுப்புநில அரேபியர்களின் தாயகமாக உள்ளது.

2007 ஆம் ஆண்டு நிலவரப்படி, இப்பகுதி மிகவும் மோசமான வறுமை நிலவும் பகுதியாக உள்ளது. வேலையின்மை விகிதம் 31% , வறுமை விகிதம் 32%. என உள்ளது. [4]

மாவட்டங்கள்தொகு

  • அல்-சிபாயிஷ்
  • அல்-ரிஃபா
  • சத்ரா
  • நசிரியா
  • சுக் அல்-ஷுய்க்

மேலும் காண்கதொகு

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_கார்_மாகாணம்&oldid=3069001" இருந்து மீள்விக்கப்பட்டது