தி பீகீப்பர் (2024 திரைப்படம்)
தி பீகீப்பர் (The Beekeeper) என்பது 2024 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க அதிரடி திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை, டேவிட் ஐயர் இயக்கியுள்ளார். இப்படத்தின் திரைக்கதையை, கர்ட் விம்மர் எழுதியுள்ளார். இப்படத்தில் யேசன் சுடேதம், எம்மி ரேவர்-லாம்ப்மேன், யோசு அட்சர்சன், பாபி நடேரி, பிலிசியா ரசாத், செம்மா ரெட்கிரேவ், செர்மி அயர்ன்சு ஆகியோர் நடித்துள்ளனர். மின்-தூண்டிலிடல் மோசடியில், தனது அறக்கட்டளையின் நிதியை இழந்த, வீட்டு உரிமையாளரும், சிறந்த குணமுள்ள பெண்ணான ஒருவள், தற்கொலை செய்துகொள்கிறாள். இந்நிகழ்வுக்குப் பொறுப்பானவர்களை பழிவாங்குவதற்காக, அவர் வீட்டில் குடியிருக்கும் கதாநாயகன், அதிதீவிர நடவடிக்கைகளையும், சண்டைகளையும் கதையின் நாயகன் ஆடம் க்ளே செய்து, இணையத்தில் மோசடி செய்கின்ற அமைப்பை வீழ்த்துகிறார். "தேனீ வளர்ப்பவர்" என்பது சமூகத் தவறுகளைக் களைய, அறிவு நுட்பங்களையும், தொழில் நுட்பங்களையும், ஆயுதங்களையும் பயன்படுத்தும் தனிநபர் குழுவாகும். அவ்வமைப்பில் முன்பு கதாநாயகன் பணியாற்றியவர் என்பதே, குறிப்பிடத் தகுந்த கதைக் கீற்றாகும்.
தி பீகீப்பர் (2024 திரைப்படம்) | |
---|---|
இயக்கம் | டேவிட் ஆயர் |
தயாரிப்பு |
|
கதை | Kurt Wimmer |
இசை |
|
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | கேப்ரியல் பெரிஸ்டைன் |
படத்தொகுப்பு | Geoffrey O'Brien |
விநியோகம் | Metro-Goldwyn-Mayer (through அமேசான் சுடியோசு) |
வெளியீடு | சனவரி 12, 2024 |
ஓட்டம் | 105 minutes[1] |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $40 million[2] |
மொத்த வருவாய் | $143.8 million[3][4] |
இத்திரைப்படமானது, சனவரி 12, 2024 அன்று மெட்ரோ-கோல்ட்வின்-மேயர் பிக்சர்சு என்ற திரைப்பட நிறுவனம், அமேசான் எம்சிஎம் சுடுடியோசு மூலம், அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இப்படம் பலவகையான திரைப்படக் கருத்துரைகளைப் பெற்றது. உலகம் முழுவதும் $143 மில்லியன் (இந்திய உரூபாய்: 1187 கோடிக்கும் மேல்) வசூலித்துள்ளது.
கதைக்களம்
தொகுஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை எலோயிசு பார்க்கர், மாசசூசெட்சில் தனியாக வசிக்கிறார். அவர் தனது வீட்டருக்கே குடியிருக்க, கதையின் நாயகனை அனுமதிக்கிறார். இவ்விடத்தில் குடியிருக்கும் இவர், தேனீக்களை வளர்த்து, தேன் எடுத்து, அமைதியான வாழ்க்கை வாழ்கிறார். ஒரு நாள், வீட்டின் உரிமையாளர், இணைய வழியே செயற்படும் போது, அவரது கணினி நச்சுநிரலால், இயங்காமல் போகிறது. அதனை சரிசெய்ய, கணினியில் தெரியும் தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொள்கிறாள்.
அதற்கு தொலைப்பேசியில் உரையாடுபவர், அவளது கணினியை தொலைவில் இருந்து சீராக்க, ஒரு மென்பொருளை நிறுவச் சொல்கிறார்கள். அப்படி நிறுவினால் தான், தொலைவில் இருந்து, அக்கணினியிலுள்ள நச்சுநிரலை நீக்க இயலும் என்று கூறி, வீட்டின் உரிமையாளரான அப்பெண்ணை, நிறுவ வைத்து விடுகின்றனர். பல்வேறு விதமான திரைகளைக் காண்பித்தப் பிறகு, கணினியை சரிசெய்து விட்டதாகவும், இதனால் அப்பெண்ணுக்கு ஏற்பட்ட இடருக்கு நட்ட ஈடாக, ஒரு சிறு பணத்தொகையை தர விரும்புவதாகக் கூறி, அவரது கணக்கு விவரங்களைக் கேட்கின்றனர். அப்பெண்ணும் மகிழ்ந்து, தனது இணைய வங்கி விவரங்களைத் தருகிறார். தொலைவில் இருக்கும் அந்த நபர் கூறிய சிறு தொகைக்குப் பதிலாக அதிக பணம் அனுப்புகின்றனர். பிறகு, அப்பெண்ணை தொடர்பு கொண்டு, தவறுதலாக அதிக பணத்தை அனுப்பி விட்டதாகவும், தயவுசெய்து அதனைத் திருப்பித் தருமாறும், இல்லையெனில் தனது வேலை பறிபோய்விடும் என்று கெஞ்சுகிறார். இதனால் இரக்கப்பட்ட அப்பெண், இணைய வழியே பணத்தினை அனுப்ப, தனது வங்கிக் கணக்குகளின் கடவுச்சொற்களைக் கையாளுகிறார். இதனால் தொலைவில் இருந்து, கடவுச்சொல்லை அறிந்து கொள்கின்றனர். இவ்வாறாக, சில நிமிடங்களில் மின்-தூண்டிலிடல் (Phishing) இணைய வழியே சிக்கிக் கொள்கிறார்.
மீண்டும் சில நிமிடங்களில், அப்பெண்ணின் கணினியில் பல்வேறு திரைகள் தோன்றச் செய்து, குழப்பத்தினை உண்டாக்குகின்றனர். இக்குழப்பச் சூழலைப் பயன்படுத்தி, இடைப்பட்ட சில நிமிடங்களில், மின்-தூண்டிலிடல் மோசடியில், $2 மில்லியனுக்கும் (இந்திய பணம்:165.96 உரூபாய்) அதிகமான, தொண்டு நிறுவனப் பணம் முழுவதையும், இணைய வழியிலேயே கொள்ளையடிககின்றனர். இதனால் மனமுடைந்த அப்பெண், துமுக்கியால், தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறக்கிறாள். இறந்து போன பெண்ணின் முன்அழைப்பால், அங்கு சென்ற கதாநாயகனை, காவலர் கைது செய்கின்றனர். கைது செய்யும் அதிகாரி இறந்து போன பெண்ணின் மகள்! பிறகு எஃப்.பி.ஐ அமைப்பில் பணியாற்றும் இறந்த பெண்ணின் மகள் உண்மையை அறிந்து, கதாநாயகனை விடுதலை செய்து, உண்மையான குற்றவாளியை அறிய தனது அணியினரால் தேடுகிறாள்.
கதாநாயகன் முன்பு தான் பணியாற்றிய துப்பறிந்து, சண்டையிட்டு, மோசடி செய்பவர்களைத் தண்டிக்கும் தனி அமைப்பான “தேனீ வளர்ப்பவர்”களைத் தொடர்பு கொண்டு, இணையத்தின் வழி பணத்திருட்டு செய்பவர்களைச் சுட்டுக் கொல்லுகிறார். இவ்வாறு மின்-தூண்டிலிடல் ஈடுபடும் குழுவின், முதன்மைக் குற்றவாளி அமெரிக்க சனாதிபதியின் மகன் ஆவார். அப்பெண் சனாதிபதி, தனது குற்றவாளி மகனிடம் எடுத்துக்கூறியும், சட்ட தண்டனைய ஏற்க, முக்கிய குற்றவாளியான அம்மகன் மறுக்கிறான். இதனை எஃப்.பி.ஐ முகவராக இருக்கும் இறந்த பெண்ணின் மகள் காண்கிறாள். பின்னர், ஒரு சூழலில், சனாதிபதியின் மகளைக் கொன்ற கதாநாயகனை, பணம் பறிகொடுத்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் மகள், காவல் அதிகாரியாக இருந்தும், கதாநாயகனை சுடாமல், தப்ப விடுகிறார்.
படப்பிடிப்பு
தொகுமுதன்மை புகைப்படம் எடுத்தல் செப்டம்பர் 2022 இல் ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்றது.[5] அக்டோபரில், டைரிங்ஆமில் உள்ள டைரிங்ஆம் திடலில் கதாநாயகன் காட்சிகளை படமாக்கினர்.[6] திசம்பரில் படப்பிடிப்பு முடிந்தது.[7]
குறிப்புகள்
தொகு- ↑ "The Beekeeper (15)". British Board of Film Classification,BBFC. December 15, 2023. Archived from the original on December 15, 2023. பார்க்கப்பட்ட நாள் December 15, 2023.
- ↑ Tom Brueggemann (January 14, 2024). "'Mean Girls' Drives $100 Million Box Office Weekend, but It May Be the Last One Until March". IndieWire. பார்க்கப்பட்ட நாள் February 12, 2024.
- ↑ "The Beekeeper (2024)". பாக்சு ஆபிசு மோசோ. Archived from the original on January 31, 2024. பார்க்கப்பட்ட நாள் February 18, 2024.
- ↑ "The Beekeeper — Financial Information". The Numbers. Archived from the original on January 29, 2024. பார்க்கப்பட்ட நாள் February 18, 2024.
- ↑ Wiseman, Andreas (31 August 2022). "Jason Statham-David Ayer Action Pic 'The Beekeeper' Pre-Bought By MGM For U.S. & Some Of International". Deadline Hollywood. Archived from the original on September 9, 2022. பார்க்கப்பட்ட நாள் 9 September 2022.
- ↑ Morton, Dennis (October 21, 2023). "Video shows Jason Statham filming blockbuster movie in small Milton Keynes village". Edinburgh News. Archived from the original on March 14, 2023. பார்க்கப்பட்ட நாள் March 13, 2023.
- ↑ "2022 film and high-end TV productions shooting in the UK: latest updates". Screen Daily. December 6, 2022. Archived from the original on November 7, 2022. பார்க்கப்பட்ட நாள் 2023-03-14.
வெளி இணைப்புகள்
தொகு- மெட்ரோ-கோல்ட்வின்-மேயர் (Metro-Goldwyn-Mayer) இணையப் பக்கத்தில் அதிகாரப்பூர்வ இணையதளம்