தீயல் (துணைக்கறி)

கேரள உணவு

தீயல் (ஒலிப்பு [t̪iːjal]) என்பது இந்திய மாநிலமான கேரளாவில் இருந்து உருவான தென்னிந்திய துணைக்கறி உணவாகும். இது ஒரு இளம் குழம்பு பதத்தில் சமைக்கப்படும் துணைக்கறியாகும். வறுத்த தேங்காய், கொத்தமல்லி விதைகள், காய்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் வெந்தயம் ஆகியவற்றைக் கொண்டு அரைத்த மசாலா கலவையை அடிப்படையாகக் கொண்டு சமைக்கப்படுகிறது. இது அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து அரைத்த விழுதுடன் காய்கறிகளுடன் புளி தண்ணீர் கலந்து சமைக்கப்படுகிறது. சமைத்து முடிந்ததும் இது ஒரு செறிவான பழுப்பு நிற குழம்பாகிறது. இது பொதுவாக அரிசிச் சோற்றுடன் பரிமாறப்படுகிறது. [1]

தீயல்
வகைஇளம் குழம்பு
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிகேரளா
முக்கிய சேர்பொருட்கள்வறுத்த தேங்காய், கொத்தமல்லி விதைகள், காய்ந்த மிளகாய், வெந்தயம், புளி, தண்ணீர், vegetables

"எரிந்த உணவு" என்று பொருள்படும் தீயல், வறுத்த தேங்காய் மற்றும் பொதுவாக கரும்பழுப்பு நிறத்தில் இருக்கும் வழக்கமான கேரள உணவாகும். வறுத்த தேங்காய் துருவல் மற்றும் புளியில் இருந்தும் அதன் நிறத்தைப் பெறுகிறது. கேரளாவின் சில பகுதிகளில் நடைபெறும், பாரம்பரிய ஓணம் சத்யா விருந்தில் தீயல் கட்டாயம் சேர்க்கப்படும்.

இறால் தீயல் மிகவும் பிரபலமானது ஆகும். சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம், பாகற்காய், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய் மற்றும் மாங்காய் ஆகியவை தீயலுக்குப் பயன்படுத்தப்படும் காய்கறிகள். [2]

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Archived copy". Archived from the original on 2004-03-16. பார்க்கப்பட்ட நாள் 2009-01-13.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Vegetarian Recipes Around the World". Ivu.org. Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 October 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீயல்_(துணைக்கறி)&oldid=3435774" இலிருந்து மீள்விக்கப்பட்டது